- Ads -
Home உலகம் பழமையான மனித காலடி கண்டுபிடிப்பு!

பழமையான மனித காலடி கண்டுபிடிப்பு!

Human foot
Human foot

வெள்ளை மணல் தேசிய பூங்காவில் இருந்து பழமையான மனித காலடி தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கிலுள்ள நியூ மெக்சிகோ பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அப்பொழுது அங்கு உள்ள வெள்ளை மணல் தேசிய பூங்காவின் அருகில் இருக்கும் ஏரிக்கரையில் புதைபடிவ காலடி தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இவை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் காலடி தடமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த கண்டுபிடிப்பானது நெடுங்காலமாக சந்தேகத்தில் இருக்கும் இடம் பெயர்வுக்கான தீர்வை அளிக்கும் என்று கூறியுள்ளனர்.

அதிலும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் அமெரிக்காவிற்கு வந்துள்ளனர் என்பதை கண்டறிய இது பயன்படும்.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதில் ” ஆசியாவை இணைத்த அலாஸ்கா நிலப்பாலம் வழியாக முந்தைய மனித இடப்பெயர்வுகள் நடந்துள்ளன.

இவை அமெரிக்காவில் மனித குடியேற்றங்கள் சுமார் 13,000 முதல் 26,000 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டன என்பதை நமக்கு உணர்த்துகிறது.

இதனை புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது மற்றும் நவீன தொழில்நுட்ப உத்திகளை பயன்படுத்தி தெளிவாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் இவற்றை பாதுகாக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version