கர்ணன் பட தலைப்பை மாற்றுங்கள் – தனுஷுக்கு வந்த சிக்கல்

danush

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதர பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்புக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கர்ணன் தலைப்பை பயன்படுத்தக்கூடாது என நடிகர் தனுஷுக்கு சிவாஜி நலப்பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனுஷுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்ணன் என்றதும் நடிகர் திலகம் சிவாஜி நினைவுக்கு வரும்.எனவே, சட்டப்படி ஏற்கனவே வந்த படத்தின் பெயரை வைக்கலாம் என்றாலும், நியாயப்படி அதை தவிர்க்க வேண்டும். கர்ணன் என்றாலே கொடுப்பவன். கொடைவள்ளல். உங்கள் படத்தில் உரிமைக்காக போராடும் ஒருவன். எனவே, சமூகம் சார்த்த திரைப்படத்திற்கு ‘கர்ணன்’ என பெயரிட்டிருப்பதை ஏற்க முடியவில்லை. இது சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல. மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தும். எனவே, கர்ணன் பட தலைப்பு மாற்றுமாறு கோரிக்கை வைக்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.

Source: Vellithirai News