
- இந்தியாவின் வரலாற்றில் இதுவே முதல் முறை.
- ஆந்திரா அரசாங்கம் எடுத்துக் கொண்ட பரபரப்பு தீர்மானம்.
- ஆந்திரப் பிரதேச அரசு பரபரப்பு தீர்மானம் எடுத்துள்ளது.
- சர்ச்சுகள் கட்டுவதற்கு டெண்டர்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆந்திர பிரதேச அரசாங்கம் பரபரப்பு நிர்ணயம் எடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த ஒரு மாநில அரசும் செய்யாத விதமாக வரலாற்றிலேயே முதல் முறையாக சர்ச் கட்டுவதற்கு டெண்டர்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குண்டூர் மாவட்டம் ரொம்பிசர்ல மண்டலம் கேந்திரத்தில் புதிதாக சர்ச் கட்டுவதற்கு பஞ்சாயத்துராஜ் இன்ஜினியரிங் பிரிவு டெண்டர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.

“பேதல் கிறிஸ்டியன் ப்ரதர்ஸ் ட்ரஸ்ட் சர்ச்” என்ற பெயரில் கட்டும் சர்ச்சுக்காக 8 லட்சத்து 72 ஆயிரத்து 673 ரூபாய்கள் ஒதுக்கியுள்ளது. இந்த மாதம் 21-ம் தேதிக்குள் கிளாஸ் 5 மற்றும் அதைவிட உயர்ந்த மதிப்பு வாய்ந்த காண்ட்ராக்டர்கள் தாக்கல் செய்யலாம் என்று அரசாங்க அறிவிப்பு குறிப்பிடுகிறது.
அதுமட்டுமின்றி 6 மாதங்களில் கட்டட வேலைகள் பூர்த்தி ஆக வேண்டும் என்றும் தெளிவு படுத்தியுள்ளது.
சாதாரணமாக அரசாங்கம் எந்த ஒரு மதத்தையும் உற்சாகப்படுத்தாது. மாநிலத்தில் எப்படிப்பட்ட கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள், தேவாலயங்கள் நிர்மாணிக்காது. ஆந்திராவில் கோவில்கள் கட்டுவதற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் திதி அளிக்கிறது. நாட்டில் சர்ச்சுகள் மசூதிகள் கட்டுவதற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வந்து குவிந்து வருகிறது. அவற்றின் மூலமாகவும் கொடையாளிகளிலிருந்து நன்கொடைகள் சேகரித்தும் சர்ச்சுகளும் பிரார்த்தனை குருசடிகளும் கட்டுவது வழக்கம். ஆனால் ஆந்திராவில் மட்டும் அரசாங்கமே சர்சுகள் கட்டித் தருவதற்கு தயாராக உள்ளது.

முன்பு கூட அரசாங்கம் ஆந்திர மாநிலத்தில் மூன்று சர்ச்சுகள் கட்டுவதற்கு நிதி விடுதலை செய்தது. குண்டூர் மாவட்டம் நிஜாம்பட்டணம் மண்டலத்தில் உள்ள ஆமுதாலபல்லி கிராமத்தில் கல்வரி சர்ச், ஹரிஜனவாடாவில் க்ளோரியஸ் சர்ச், காளீபட்டணம் கிராமத்தில் ப்ளெஸ்ஸீ சர்ச் கட்டுவதற்காக அரசாங்கம் 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. மறுபுறம் பிரகாசம் மாவட்டம் டங்குடூரு மண்டலம் கந்துலூரில் நிஸ்ஸீ ரிலீஃப் சொசைட்டி சர்ச் கட்டுவதற்கு மற்றுமொரு 5 லட்சம் ரூபாய் ஒதுக்குவதாக சென்ற ஆண்டு டிசம்பரில் ஜீஓ விடுதலை செய்தது. மைனாரிட்டி பாதுகாப்பில் ஒரு பகுதியாகவே சர்ச்சுகள் கட்டுவதாக அரசாங்கம் தெரிவித்தது.
அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ள இந்த தீர்மானங்களை பிஜேபி எதிர்த்து வருகிறது. திருமலா திருப்பதி தேவஸ்தானம் பட்ஜெட்டில் மிகக் குறைந்த பகுதியே தர்ம பரிரட்சணைக்காக செலவு செய்து வரும் ஆந்திரா அரசாங்கம் கோவிலில் பிற மத பிரச்சாரத்தை உற்சாகப்படுத்துகிறது என்று பிஜேபி தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். மாநிலத்தில் இந்து கோவில்களையும் கடவுளர்களையும் அவமதிப்பது நடந்து வந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுத்துக் கொள்வதில்லை என்றும் பிற மத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கும் அரசாங்கம் இந்து மத உற்சவங்களைத் தடுக்கிறது என்றும் இதற்கு முன்பு இருந்தே குற்றச்சாட்டுகள் எழுந்தன.