சனாதன தர்மத்தில் வேறுபாடுகள்; சர்ச்சைகள்; தீர்வு என்ன?

sankarar thirumoolar vinayakar - 2026

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன்


சனாதன தர்மத்தில் கருத்து வேறுபாடுகளும் வாதங்களும், விவாதங்களும் எண்ணற்றவை. அவற்றைத் தவறு என்று கூறுவதற்கில்லை. பன்முகத் தன்மை என்பது மனித ஐயல்பு. அது படைப்பின் இயற்கை. இன்னும் கூற வேண்டுமானால், மதங்கள், கோட்பாடுகள், துறைகள் அனைத்திலும் பன்முகத் தன்மை காணப்படுகிறது.

பல யுக வரலாறு கொண்ட நம் சரித்திரம் பற்றியும் பல கருத்துகள் நிலவுகின்றன. சில ஆயிரம் ஆண்டுகால வரலாறே கொண்ட வெளிநாட்டவர், பாரத தேசத்திற்கு இருக்கும் கல்பங்கள், யுகங்கள், பண்டைய வரலாறு போன்றவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல், அவையெல்லாம் கற்பனை என்றும் பொய் என்றும் கூறி வருகின்றனர். அதனால் நம் பாரம்பரியம் எல்லாம் கட்டுக்கதையாக மாறிப் போனது.  

நட்சத்திரங்களின் நிலை, கிரகங்களின் சஞ்சாரம் போன்றவற்றின் உண்மையான வரலாற்றை, வானியல் அறிவின் அடிப்படையில் வழங்கினார் அறிஞர் ஸ்ரீ கோட்ட வேங்கடாசலம். அவரைப் போன்ற சான்றோர் பழமையான நூல்கள், சாசனங்கள், கட்டடங்களின் ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் படைத்த ‘பாரததேச சரித்திர’ த்தை படித்து, அதன் அடிப்படையில் உண்மையை அறியாமல், வெளிநாட்டு மதக் கண்ணோட்டத்தின் யூகங்களை சுதந்திர இந்தியாவிலும் ஏற்பது வருந்தத்தக்கது.   

நாத்திகர்களின் மனப்பான்மை ஒரு புறம் இருக்கட்டும். ஆத்திகர்களான அறிஞர்களும் கல்வி நிலையங்களுக்குப் பரித்துரைத்த வரம்புக்குள் இந்த நவீன முறையைப் புகுத்தி,   கிபி, கிமு, பிசி, சிஇ, எடி, என்பவற்றின் எல்லையிலேயே நம் பழமையை அமர்த்தி இலக்கியம், கல்வி போன்றவற்றின் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய பார்வையால் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு மறைக்கப்பட்டு, தவறாக சித்திரிக்கப்படுகிறது. இது பல வேறுபட்ட கருத்துகளுக்கு வழிவகுக்கிறது.  

‘பண்டைய காலத்தில் யாகங்கள் இருந்தன. ஆனால் கோவில்கள் இல்லை விக்ரக வழிபாடு வேத காலத்தில் இல்லை. பிற்காலத்தில் ஏற்பட்டன. வேதங்கள் வேறு புராணங்கள் வேறு. அவை ஒன்றுகொன்று தொடர்பற்றவை. அவற்றின் காலங்கள் வெவ்வேறு’. இப்படிப்பட்ட பிரித்துப் பார்க்கும் முறை தவறான வரலாற்றுக் கணக்கீட்டின் மூலம் உருவான பிழை. இது சனாதன தர்மத்தை முழுமையாக அறிய முடியாத சூழலை உருவாக்குகிறது.

கோட்பாடுகளை அனுசரித்து பாரதத்தின் சமுதாயக் கட்டமைப்பைப் பற்றி முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. உழைப்புக்கான சிறந்த பிரிவுகளோடும், பரஸ்பரம் கௌரவத்தோடும் பல்வேறு வாழ்கை முறைகளை உருவாக்கிய வர்ண அமைப்பைச் சிதைத்து, வக்கிரமாக விமர்சித்து, அதை ஜாதிப் பாகுபாடு என்று சித்திரிப்பது இன்னுமொரு துரதிருஷ்டம்.

வழிபாடு, உபாசனை போன்றவற்றின் வசதிக்காக ஒரே பரமாத்மாவை வெவ்வேறு பெயர்கள், வடிவங்கள், ஆகமங்களுடன் வழிபடும் சைவம், வைணவம், சௌரம், சாக்தம், காணபத்யம், கௌமாரம் என்ற சம்பிரதாயகளாக ஏற்படுத்தினர். அவற்றைத் தனித்தனியாக பார்த்து, அவற்றின் இடையே குறைகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்துவது இன்னொரு கவலை தரும் அம்சம். அவை ஒவ்வொன்றிலும் மேலும்  பல்வேறு வேறுபாடுகளைப் புகுத்தினர்.  

வெவ்வேறு ஆகம வழிமுறைகளின் படி வைணவத்தில் வேறுபட்ட சித்தாந்தங்கள். அதே போல் ராதாவையும் கிருஷ்ணரையும் வணங்கும் வைணவம் ஒன்று. அதை ஏற்காத  வைணவம் இன்னொன்று. சைவ மதத்தில் ஸ்ரோதி சைவம், வீரசைவம், பாசுபத சைவம், காஷ்மீர சைவம் என்ற வேறுபாடுகள். சாக்தத்தில் வாமாசாரம், தக்ஷிணாசாரம், கௌளாசாரம் போன்றவை. வைதிகம், தாந்திரிகம் என்று வேறுபாடுகள். இது வைதிகமா? பௌத்தமா? என்று இன்னொரு தகராறு. அதேபோல் காணாபத்யத்திலும், சௌரத்திலும்  வேறுபாடுகள். அதற்குள் மற்றொரு அறிஞர் இருந்தாற்போலிருந்து சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் எல்லாம் புராண கற்பனைகள். வேதங்களின்படி இந்திரன்தான் உயர்ந்த கடவுள் என்று விவாதித்து அதற்கென்று ஒரு சம்பிரதாயத்தைப் புகுத்தினார்.

இவற்றைத் தவிர  உருவமற்ற நிர்குண பிரம்மவாதிகள் ஒரு புறம். உண்மையில் இவை எல்லாவற்றையும் விட யோக மார்க்கமே சிறந்தது என்று மற்றொரு கருத்து உள்ளது. இவை தவிர ஸ்மார்த்த வழியில் மற்றொரு வழிபாட்டு முறை உள்ளது. சுருதி, ஸ்ம்ருதி புராணங்களைக் கொண்டு சிவன், விஷ்ணு, சக்தி, சூரியன், கணபதி எல்லோரையும்  ஒன்றாக வழிபடுவதே ஸ்மார்த்தம். அதுவே பஞ்சாயதன வழிபாட்டு முறை. இதுவும் சைவம், வைணவம் போன்று பழமை வாய்ந்ததே. ‘ஸ்மார்த்தம் சைவம் அல்ல’ என்று இன்று நிறைய பேருக்குத் தெரியாது. அது ‘அபேத’ சித்தாந்தம்.

இந்த வழிமுறையை ஆதிசங்கரர் எடுத்து வந்தார் என்று சிலரும், இல்லை.   வித்யாரண்யர் அறிமுகம் செய்தார் என்று சிலரும் கூறுகின்றனர். ஸ்மார்த்த குடும்பத்தில் ஆதிசங்கரர் தோன்றினார் என்று வரலாறு கூறுகிறது. அவர் பெயரும், அவருடைய பெற்றோரின் பெயர்களும் அதையே குறிப்பிடுகின்றன. ஸ்மார்த்தத்திற்கு சம்பிரதாயமான பஞ்சாயதன வழிபாட்டு முறையை ஆதிசங்கரரோ, வித்யாரண்யரோ அறிமுகம் செய்தார் என்பது யூகம்தான்.

ஒருவேளை இருவரில் ஒருவர் அறிமுகம் செய்திருந்தாலும், சாஸ்திரத்திற்குப் புறம்பில்லாத ஒருங்கிணைந்த முறையாக இருப்பதால் அதனை நல்ல சம்பிரதாயமாக ஏற்றுக் கடைப்பிடிக்கலாம்.

சைவம் அல்லது வைணவம் இரண்டில் ஒன்றுதான் பெரியது என்ற கருத்து  பழமையானது என்று கூற இயலாது. மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் புராணங்களிலும் இதுபோன்ற வார்த்தை ஜாலங்களைக் காண முடியாது.

இஷ்ட தெய்வமாக ஒருவரை வணங்கினாலும் பிற தெய்வங்களை வெறுக்காமல் வணங்குவதை அவற்றில் பார்க்கிறோம். சைவமும் வைணவமும் பரஸ்பரம் வெறுப்பின்றி வளர்வதற்காக முனிவர் பெருமக்கள் முயற்சித்துப் பல நூல்களைப் படைத்தனர்.

துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்று மூன்று கோட்பாடுகள் உள்ளன. இந்த மும்மதங்களும் சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் ஆகிய மூவாரல் தோற்றுவிக்கப்படவில்லை. அவர்களுக்கு முன்னரே ‘அபேதம், பேதாபேதம், பேத வாதம்’ என்ற பெயர்களோடு அவை இருந்தன. இந்த மூவருக்குமே வேதங்களும் புராணங்களும்  பிரமாணங்கள். சித்தாந்தம் மட்டுமே மாறுபட்டது. இந்த மூன்றையும் ஆன்மீக சாதனை வரிசையில் அழகான மூன்று தங்குமிடங்களாக அற்புதமாக கருத்தொற்றுமை செய்த மகநீயர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இந்த சித்தாந்தங்களில் காணப்படும் முரண்பாடுகளை பரஸ்பரம் மறுத்தும், விவாதித்தும் பல புத்தகங்களின் சுமை உருவாகியுள்ளது. அவை அறிஞர்களின் வாக்குத் திறமைக்கு  உதவுமே தவிர, சாமானியர்களின் ஆன்மிக சாதனைக்குப் பயனளிக்காது. அவை அவர்களுக்குச் சற்றும் புரியாத வகையில் இருக்கும் கட்டுரைகள்.

முடிந்த முடிவான பரமார்த்தம் அத்வைதமே என்றாலும், நடைமுறையில் துவைதத்தைத்  தவிர்க்க முடியாது. அதனால்தான் நடைமுறையில் கர்மாநுஷ்டானம், உபாசனை, வழிபாடு போன்றவை துவைத நிலையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் அத்வைதத்தை மதிக்கும் சிலர், மனத்தளவில் அத்வைதத்தைக் கடைப்பிடித்து, ‘சோஹம்’ என்ற உணர்வுடன் ஆன்மீக சாதனை செய்ய வேண்டும் என்றும், செயலில் அத்வைதத்தைக் காட்டுவது கூடாதென்றும் கூறுகின்றனர்.

சாத்விக இயல்புள்ளவர், சைவத்திலோ, வைணவத்திலோ இருந்துகொண்டு, தம்  சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்தாலும், பிற சம்பிரதயங்களையும் மதித்து நடந்து கொள்வர். அவர்கள் மூலம் ஒரு சமரசச் சூழல் சமுதாயத்தில் ஏற்படும். இந்துக்களில் பலர் அது போல் உள்ளனர். தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் அத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகம். ஹரி, ஹர வேறுபாட்டையும் விவாதங்களையும் அங்கு அவ்வளவாகப் பார்க்க முடியாது. மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் மூன்று கோட்பாடுகளின் முக்கிய ஆதரவாளர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

பீடங்களை எடுத்துக் கொண்டால், அங்கும் கணக்கற்ற வேறுபாடுகளும், சர்ச்சைகளும்  உள்ளன. சங்கரரின் காலத்தைக் குறித்து வெவ்வேறு முடிவுகள் காணப்படுகின்றன. ஸ்ரீகோட்ட வேங்கடாசலம் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, காஷ்மீர், நேபாள் அரச வம்சங்களின் வரலாறு, பண்டைய கால கட்டிடங்கள், சாசனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சங்கரரின் காலத்தை நிர்ணயம் செய்தார்கள்.

வெவ்வேறு நூலாசிரியர்கள் எழுதிய சங்கர விஜயங்கள் வேறுபட்ட கால நிர்ணயங்களையும், சம்பவ வேறுபாடுகளையும் கொண்டுள்ளது உண்மைதான் என்றாலும் அவற்றில் சங்கரரின் வரலாறு பற்றியும் பீடங்களை அமைத்தது பற்றியும் வேறுபாடு இல்லாத பொதுவான கருத்தைப் பார்க்க முடிகிறது.

சங்கரர் பீடங்களை நிறுவவில்லை என்ற கூற்று ஆதாரமற்றது. பீடங்களின் அமைப்பை உருவாக்கி தேசத்தின் நாற்புறங்களிலும் ரிஷிகளின் தர்மத்தை முழுமையாக்கிய தவ சக்தி நிறைந்தவர் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர். ஒவ்வொரு பீடத்திற்கும் அதற்கான  பிரமாணங்களும், பாரம்பரியமும் உண்டு. ஆனால் அந்தந்த பீடங்களின் சீடர்கள் என்று கூறிக் கொள்ளும் சில பிரிவினர் வேறுபாடுகளை எழுப்பி இடைவெளிகளைத் தோற்றுவித்துச் சண்டை மூட்டும் சூழல் உள்ளது.

அனைத்து சங்கர பீடங்களும் இருமை வாதங்களுக்கு அப்பாற்பட்ட சித்த புருஷர்களைக் கொண்ட, சிறந்த ஆச்சார்ய பரம்பரையோடு கூடியவை. இந்த பீடங்களின் மூலம் சங்கரரின் அத்வைத கோட்பாடு, வேத சாஸ்திர சம்ரக்ஷணம், வேத அறிஞர்களின் பராமரிப்பு, சமுதாய நல அமைப்புகள் போன்றவை பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன. சிறந்த பாரம்பரியத்தைக் கொண்ட இந்த பண்டைய பீடங்களையும், அவற்றின் நற்செயல்களையும் மதித்து வாதங்களோ, சர்ச்சையோ இன்றி அந்தந்த ஆச்சார்யர்களை வணங்குவது ஆன்மீக சாதனை நோக்கம் கொண்ட தார்மீர்களின் இயல்பு.

இந்து மதத்தைக் கடுமையாகத் தாக்கி அழித்த பிற மதத்தவர், எந்த வித்தியாசமும் இன்றி ஹிந்து தர்மத்தைச் சேர்ந்த அனைவரையும் ஒன்றாகப் பார்த்தார்கள். ஆனால் ஹிந்துக்களான நாமோ நமக்குள் வேறுபாடுகளை வளர்த்துக் கொள்கிறோம். நாம் வேறுபாடுகளைக் களைந்து ஒருமைப்பாட்டை சாதிக்கா விட்டால் நம் அழிவுக்கு பிறருக்கு வாய்ப்பளித்தது போலாகிவிடும்.

இத்தனை முரண்பாடுகளும், பன்முகத்தன்மையும் கொண்ட ஹிந்து தர்மத்தை, இத்தகைய சர்ச்சைகளின் பின்னணியில் எவ்வாறு புரிந்து கொள்வது? எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

உண்மையில் சுருதி, ஸ்ம்ருதி, புராணங்களில் இருக்கும் ஒருமைப்பாட்டை உணர வேண்டும். அவற்றில் தெளிவான சமரசமும், ஒருங்கிணைப்பும் உள்ளன.

எல்லா சம்பிரதாயங்களிலும் மகா புருஷர்கள், சித்தர்கள், யோகிகள் உள்ளனர். இவை அனைத்தையும் கவனித்து, ‘அநேகம் இணைந்த ஏகமாக’ ஹிந்து மதத்தை தரிசிப்பதே கடமை.

அவரவர் மரபுகளும், நூல்களும் அவரவருக்கு அடிப்படைச் சான்றுகளாக உள்ளன. ஒருவர் இன்னொருவரைக் குறைகூறுவதும், ஏளனம் செய்வதும், இழிவுபடுத்துவதும் தவறு.

யார் எத்தனை கடினமாக முயன்றாலும், பன்முகத்தன்மை கொண்ட வழிகள் இருப்பதை யாராலும் அகற்ற முடியாது. தம் மார்க்கத்தை மட்டுமே நிலைநிறுத்த இயலாது.

வாதங்களிலும் சச்சரவுகளிலும் வாழ்நாளை வீணடிக்காமல், கபடமின்றி, பக்தியோடு தம் தெய்வத்தையே அனைத்திலும் தரிசித்து, உத்தம சாதகர்கள் பரமார்த்தத்தைப் பெற முடியும். வாதங்களை விட ஆன்மீக சாதனைகள் உயர்ந்தவை.

(தலையங்கம், ருஷிபீடம், மார்ச் 2026)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

Topics

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories