பஞ்சாங்கம் மார்ச் -19- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்  – மார்ச் 19

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் 

பங்குனி~ 05~ (19.03.2019).
செவ்வாய் கிழமை
வருடம் ~ விளம்பி வருடம்
வருஷம் ~ { விளம்பி நாம சம்வத்ஸரம்}

அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது
மாதம் ~ மீன மாஸம் { பங்குனி மாஸம்}.
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.

திதி ~ 12.21 PM வரை த்ரயோதசி பின் சதுர்தசி நாள்
~ {மங்கள வாஸரம் } செவ்வாய் கிழமை
நட்சத்திரம்~ 5.29 PM வரை மகம் பின் பூரம்
யோகம் ~ த்ருதி
கரணம் ~ தைதுலை
அமிர்த்தாதியோகம்~ சுபயோகம்

நல்லநேரம்~ காலை 8 ~ 9 & 5 ~ 5.30 pm.
ராகுகாலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9 ~ 10.30 am.
குளிகை~மதியம்12 ~ 1.30.

சூரியஉதயம் ~ 06.21am.
சந்திராஷ்டமம்~ மகரம்
சூலம்* ~ வடக்கு
ஸ்ரார்த்ததிதி ~ சதுர்தசி
பரிகாரம் ~ பால்
இன்று ~

இன்றைய ராசி பலன்கள்
மார்ச் 19

இன்றைய (19-03-2019) ராசி பலன்கள்

மேஷம்

குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை உண்டாகும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு பணி சம்பந்தமான கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். உயர்கல்வி பயில்பவர்களின் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அசுவினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும். 

ரிஷபம்

வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். உறவினர்களிடம் சற்று அனுசரித்துச் செல்லவும். கடன் சார்ந்த சில பிரச்சனைகள் தோன்றி மறையும். மாணவர்கள் தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. மனை சார்ந்த விவகாரங்களில் சற்று சிந்தித்துச் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : கவனத்துடன் செல்லவும்.
ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.
மிருகசீரிடம் : சிந்தித்துச் செயல்படவும்.

மிதுனம்

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு ஜெயம் காண்பீர்கள். பணிகளில் பொறுப்புகள் மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். அறச்செயல்களால் நற்பேறுகள் உண்டாகும். சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : ஜெயம் காண்பீர்கள்.
திருவாதிரை : மதிப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : நற்பேறுகள் கிடைக்கும்.

கடகம்

தொழில் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தாய்மாமனின் உறவுநிலை மேம்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : உறவுநிலை மேம்படும்.
ஆயில்யம் : எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

சிம்மம்

பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றம் உண்டாகும். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். அந்நியர்களால் தனவிருத்தி உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூரம் : திறமையால் இலாபம் கிடைக்கும்.
உத்திரம் : தனவிருத்தி உண்டாகும்.

கன்னி

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். மனச்சோர்வுகளால் வேலையில் கவனமின்றி வசைச் சொற்களுக்கு ஆளாக நேரிடும். வெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். குடும்பத்தில் பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : பயணங்களால் மேன்மை உண்டாகும். 

துலாம்

செயல்பாடுகளில் இருந்த இடர்பாடுகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் இருந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
சுவாதி : இழுபறிகள் குறையும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

விருச்சகம்

புதிய வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். புதுவிதமான தொழில் நுட்ப வித்தைகளை பயில முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : முயற்சிகள் கைக்கூடும்.
அனுஷம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
கேட்டை : புதிய வித்தைகளை பயில்வீர்கள். 

தனுசு

தானிய சம்பத்துக்களால் இலாபம் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் குறையும். பிறரிடம் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமான முடிவைத் தரும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : அபிவிருத்தி உண்டாகும்.
பூராடம் : சோர்வு நீங்கும்.
உத்திராடம் : வெற்றி உண்டாகும். 

மகரம்

கால்நடைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து நடந்து கொள்ளவும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
திருவோணம் : வாதத்தை தவிர்க்கவும்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.

கும்பம்

தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எண்ணிய எண்ணங்களில் காரியசித்தி உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை :வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
சதயம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்

வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். ஆன்மீக பணிகளை மேற்கொள்வதால் கீர்த்தி உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : இலாபம் உண்டாகும்
உத்திரட்டாதி : சுமூகமான முடிவு கிடைக்கும்.
ரேவதி : கவனம் வேண்டும்..

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: பொறை உடைமை – குறள் எண்: 152

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

மு.வ உரை: வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

இன்றைய நற் சிந்தனைகள்

விடாமுயற்சி

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill .

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

இன்றைய சிந்தனைக்கு🌹👍

இன்றைய பொழுது இனிதே அமைய வாழ்த்துக்கள். பிரச்சினைகளிலேயே நீங்கள் கவனத்தை குவித்தீர்கள் எனில் நீங்கள் சுலபமான தீர்வை தவற விட்டுவிடுவீர்கள்…. இன்றைய தினம் சுலபமான தீர்வுகளால் மகிழ வாழ்த்துக்கள்.

தினசரி. காம்

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: கள்ளாமை : குறள் 287:

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

மு.வ உரை: களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.