பஞ்சாங்கம் பிப்ரவரி – 13 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!


இன்றைய பஞ்சாங்கம் பிப்.13

பஞ்சாங்கம் மாசி~ 01{ 13.02.19 }புதன் கிழமை
வருடம் ~ விளம்பி வருடம் { விளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது
மாதம் ~ கும்ப மாதம் {மாசி மாஸம்}

பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
திதி ~ 11.14 AM வரை அஷ்டமி பின் நவமி
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}. நக்ஷத்திரம் ~ 6.16 PM வரை க்ருத்திகை பின் ரோஹிணி

யோகம் ~ ப்ராம்யம்
கரணம்* ~ பவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.

நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & 2.00~ 3.00pm.
ராகுகாலம்~ மதியம் 12~ 1.30.
எமகண்டம்~ காலை 7.30 ~ 9 .00am
குளிகை ~ பகல் 10.30~12.00.

சூரியஉதயம் ~ காலை 06 .38am.
சந்திராஷ்டமம் ~ துலாம்
சூலம் ~ வடக்கு
பரிகாரம் ~ பால்
ஸ்ரார்த்ததிதி ~ நவமி
இன்று – பீஷ்மாஷ்டமி

இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 13

இன்றைய (13-02-2019) ராசி பலன்கள்

மேஷம்

ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். தூர தேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாகனங்களால் இலாபம் உண்டாகும். கல்லூரி படிப்பிற்காக சுப விரயங்களை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அசுவினி : ஆதரவு கிடைக்கும்
பரணி : கவலைகள் குறையும்
கிருத்திகை : விரயங்கள் உண்டாகும்.

ரிஷபம்

மனதில் புதவிதமான எண்ணங்கள் பிறக்கும். வாரிசுகளால் பெருமையடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் அமையும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன்களை குறைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : புதிய எண்ணங்கள் பிறக்கும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது சுபிட்சத்தை உண்டாக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.

கடகம்

புத்திரர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலனை எதிர்பாராமல் செய்த செயல்களால் இலாபம் உண்டாகும். சகோதரர்களிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணியில் மேன்மை அடைவதற்கான செயல்களை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : மனக்கசப்புகள் குறையும்.
ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

சிம்மம்

நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். உத்தியோகஸ்தரர்கள் பணியில் மேன்மை அடைவதற்கான கூடுதல் பணிகளில் ஈடுபடுவீர்கள். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். தொழில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கன்னி

பிறருக்கு உதவும்போது கவனமாக இருக்க வேண்டும். பணப்புழக்கத்தில் எச்சரிக்கை வேண்டும். தைரியத்துடன் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அயல்நாட்டு பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : சாதகமான சூழல் உண்டாகும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

துலாம்

செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்க காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

சித்திரை : நிதானம் வேண்டும்.
சுவாதி : பணிச்சுமை அதிகரிக்கும்.
விசாகம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

விருச்சகம்

தாயின் ஆதரவினால் பொருட்சேர்க்கை உண்டாகும். அரசு பணிக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மூத்த சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பயணங்களின் மூலம் அனுகூலமான சூழல் அமையும். நண்பர்களுக்கிடையே பயனற்ற வாதத்தை தவிர்க்கவும். புதிய முயற்சிகளால் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.
அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.
கேட்டை : வாதத்தை தவிர்க்கவும்.

தனுசு

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களால் நன்மை உண்டாகும். உயர்கல்வியில் நீங்கள் மேற்கொள்ளும் புதுவித ஆராய்ச்சிகளால் புகழப்படுவீர்கள். நண்பர்களால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனை தரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : பாராட்டப்படுவீர்கள்.
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். அறச்செயலுக்காக நன்கொடைகளை கொடுத்து மகிழ்வீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : கவனமாக பேசவும்.
திருவோணம் : சிந்தித்துச் செயல்படவும்.
அவிட்டம் : அனுகூலமான நாள்.

கும்பம்

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். செய்யும் தொழிலில் புதுவித மாற்றங்களை செயல்படுத்தி இலாபம் அடைவீர்கள். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.
சதயம் : மனம் மகிழ்வீர்கள்.
பூரட்டாதி : உறவுநிலை மேம்படும்.

மீனம்

போட்டிகளில் பங்கு பெற்று இலாபம் அடைவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கடன்காரர்களால் ஏற்பட்ட மன வருத்தங்கள் குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட செயல்கள் நிறைவேறும். அறிமுகமில்லாத புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

பூரட்டாதி : இலாபம் அடைவீர்கள்.
உத்திரட்டாதி : மன வருத்தங்கள் குறையும்.
ரேவதி : மாற்றமான நாள்.


தினம் ஒரு திருக்குறள்📖🙏🌷

அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

இன்றைய பொன்மொழி

ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்

மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்

ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.

தினசரி. காம்

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

விளக்கவுரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

உடம்பின் நடுப்பகுதி வயிறு. அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது.

இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில், நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.

?
தொந்தி கனக்க விடாதீர்கள். தொந்தரவு வரும்.
மனம் கனக்க விடாதீர்கள். மரணம் வரும்.

?
ஒரு மனிதன் வியாதியுடன் வாழப்போகிறானா,
வீரியமுடன் வாழப்போகிறானா,
நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான்
இந்த நாற்பது.

?
நிறைய வேலை செய்வதால்  நமக்கு நிம்மதி போவதில்லை. உடம்பு உருக்குலைவதில்லை.

?
என்ன நடக்குமோ என்ற  பயமும் கவலையும்தான் மனிதன்மீது பாரமாக இறங்கி
அவனை நொறுக்கிவிடுகின்றன.

?
பரபரப்பின்றிச் செயல்படுங்கள். கோபப்படாமல் காரியமாற்றுங்கள். நிதானத்தைக் கடைபிடியுங்கள். ஆரவாரம் வேண்டாம். அலட்டிக் கொள்ளாதீர்கள். பொறுப்புக்களை
சீராக நிறைவேற்றுங்கள்.

?
அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

?
தினசரி மத்தியானம் ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.
இரவு பன்னிரண்டு மணிக்குமேல் எக்காரணத்தை முன்னிட்டும் விழித்திருக்காதீர்கள்.

?
பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம். அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.

?
ஆண்டவனை நினையுங்கள். இன்று முழுக்க என்னுடன் இருந்து என்னை ஆண்டுகொள் அப்பா. நான் தப்பு பண்ண விடாதே அப்பா.” என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

?
முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.

?
டென்ஷன் இல்லாமல் இருங்கள். பென்ஷன் வாங்கலாம்.

?
ஸ்ட்ரஸ் உண்டாக்கிக் கொண்டால், அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.

?
அதனால்தான் சொல்லுகிறேன். கவலையைக் *கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று !

? தினசரி. காம்?

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.