எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

modi in nda meeting at trichy - 2026

மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு

திருச்சி தேஜகூ., கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, மேற்காசியாவில் நடக்கும் போரால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். சர்வதேச அளவில் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியும் பாதித்துள்ளது. அத்தியாவசிய தேவை விநியோகத்திலும் இவை எதிரொலித்துள்ளன. எந்தவொரு சூழலிலும் நாட்டு மக்களின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும். வதந்திகளை நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே பகிர வேண்டும்.

தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. மோசடி, போதைப் பொருள், ஏமாற்றத்தை நோக்கி திமுக அழைத்துச் செல்கிறது. – என்று பேசினார்.

தமிழகத்தின் மேன்மைக்கு அல்லும் பகலும் தொடர்ந்து பாடுபடுவோம்!

முன்னதாக, கேரளா மாநிலத்தில் இருந்து பிரதமர் மோடி, இன்று மாலை 4 மணி அளவில் திருச்சி வந்தார். தமிழர் பாரம்பரியமான வேஷ்டி, சட்டை அணிந்து வந்த அவருக்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து பஞ்சப்பூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கு நடந்த அரசு நிகழ்ச்சியில், 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டினார்.

திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில், நீலகிரி, ஈரோட்டில் ரூ. 3,680 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக வலையமைப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களை மோடி தொடக்கி வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியது: அருமையான இந்த திருச்சி மாநகருக்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் இன்றைய நாள் முக்கியமானதாகும்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் திட்டங்கள் அடிக்கல் நாட்டப்படுவதில் மகிழ்ச்சி. இந்த கட்டமைப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் நேரடியாக கேஸ் வழங்குவதை உறுதி செய்யும்.

பெட்ரோலிய திட்டங்கள் மூலம் காற்று மாசுபாடு குறையும்; சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்; 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையானதாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும்.

மேம்பட்ட இந்தியாவை, மேம்பட்ட தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு. தமிழகத்தின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தின் மேன்மைக்கு அல்லும் பகலும் உழைக்கிறோம்; தொடர்ந்து பாடுபடுவோம்.

திருச்சிக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய நிகழ்ச்சி தமிழகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமானது. இன்று, 5,650 ரூபாய் கோடி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டங்கள் இணைப்பு திறனை மேம்படுத்தி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தால் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு பயனளிக்கும். 9 லட்சம் குடும்பங்களுக்கும், நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு கிடைப்பதால் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தும். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும். இயற்கை எரிவாயு, இயற்கைக்கு உகந்தது. காற்று மாசினை குறைக்கும். இந்த திட்டம், 4 கோடி மரங்கள் நடுவதற்கு இணையானது.

சென்னையில் ஐஓசி நிறுவனத்தின் லூப் பிளெண்டிங் ஆலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆலைகளில் இதுவும் ஒன்று. தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் , இந்த ஆலையானது தொழிற்சாலைகளின் தேவையை நிறைவேற்றி வைக்கும். மசகு எண்ணெய் இறக்குமதி குறைப்பதோடு, நாட்டின் பணத்தை மிச்சப்படுத்தும்.

370 கிமீ., தூரத்திற்கு ஊரக சாலையை துவக்கி வைத்துள்ளோம். பிரதமரின் ஊரக சாலை திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களால் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கும் சிரமமின்றி பயணிக்க முடியும். விவசாயிகள், தங்களது விளைபொருட்களை விற்கவும், மூலப்பொருட்களை வாங்க முடியும். ஒவ்வொரு சாலையும், ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தி எளிதாக வாழும் திறனை அதிகரிக்கிறது.

கடந்தாண்டு ஆடி திருவாதிரை விழாவிற்கு கங்கைகொண்ட சோழபுரம் வந்தது மகிழ்ச்சி. மன்னர் ராஜேந்திர சோழன் எழுப்பிய கோவிலின் கட்டுமானத்தின் ஆயிரமாவது ஆண்டை கொண்டாடினோம். இக்கோவில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

அங்கு நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. தற்போதைய நெடுஞ்சாலை, கோவிலுக்கு அருகில் இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு குறித்த கவலை எழுப்பியது. புதிய புற வழிச்சாலை அமைப்பால் மற்ற வாகனங்கள் , கோவிலுக்கு அப்பால் திருப்பிவிடப்படும். அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

மதுரை வந்த போது, அம்ரித் பாரத் திட்டத்தின்படி மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்கள் துவக்கிவைக்கப்பட்டது. இன்று புதிய ரயில்கள் துவக்கி வைக்கப்பட்டது. இவை நாகர்கோயில், கோவை, ராமேஸ்வரம், நெல்லை, மயிலாடுதுறை, காரைக்குடி ஆகிய இடங்களை மற்ற பகுதிகளோடு இணைக்கிறது. இந்த புதிய ரயில் சேவையால் சுற்றுலா துறை வளர்ச்சி அடைவதோடு,உள்ளூர் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்களின் நோக்கம். தமிழக மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது மத்திய அரசு. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுகிறோம். மேலும் தொடர்ந்து பாடுபடுவோம். – இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புதிய திட்டங்கள் :

  • நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், 3,680 கோடி ரூபாய் முதலீட்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்திற்கு, பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • சென்னை அடுத்த மணலியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின், 1,490 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள, மசகு எண்ணெய் கலவை ஆலையை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 370 கி.மீ., நீளமுள்ள, 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைத்தார்.
  • தேசிய நெடுஞ்சாலை 81ல், கங்கைகொண்ட சோழபுரம் அருகே, பசுமை புறவழிச்சாலை அமைக்க, அடிக்கல் நாட்டினார்.
  • இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், இரு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையையும், மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு, எல்.முருகன் நினைவுப்பரிசு வழங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு சால்வை அணிவித்தார். பொருநை அருங்காடசியகம் நினைவு சின்னத்தை பிரசாக வழங்கினார்.

தமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

  • நாகா்கோவில் – சாா்லபள்ளி அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06357)
  • கோவை போத்தனூா் – தன்பத் அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06619)
  • ராமேசுவரம் – மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06621)
  • திருநெல்வேலி – மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06708)
  • மயிலாடுதுறை – காரைக்குடி சிறப்பு பயணிகள் ரயில் (06835)
  • நீலகிரி, ஈரோட்டில் ரூ. 3,680 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக வலையமைப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களையும் மோடி தொடக்கி வைத்தார்.

தேஜகூ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது,

இன்று தமிழகத்தில் பெண்களின் நிலை என்ன? திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன. சமீபத்தில், ஒரு சிறுமியை கூட விட்டுவைக்காத ஒரு திமுக உறுப்பினரை பற்றிய கொடூரமான செய்தியை நாம் அனைவரும் பார்த்தோம். இன்று பெண்களை பலவந்தப்படுத்திவிட்டு குற்றவாளிகள் பயமின்றி அலைகிறார்கள். ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், தமிழக பெண்கள் பயமின்றி வாழ்வதை NDA அரசு உறுதி செய்யும். நாம் சிறப்பான சட்டம் ஒழுங்கை உறுதி செய்வோம். மக்கள் அல்ல, குற்றவாளிகள் தான் இனி பயத்தில் வாழ வேண்டும்

ஒட்டுமொத்த தமிழகமும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற முடிவு செய்துவிட்டது. மக்களுக்கு அனைத்து குடும்பங்களுக்காகவும் பணியாற்றக்கூடிய அரசு தேவை, ஒரே குடும்பத்திற்கு வேலை செய்யும் அரசு தேவையில்லை. அதோடு அவர்களுக்கு தெரியும், NDA கூட்டணியால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று – திருச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

போரை அரசியலாக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது,

மக்களுக்கு நமஸ்காரம். மக்களே நீங்கள் தான் என் கடவுள். கேரளாவை கேரளம் என்று மாற்ற வேண்டும் என்பது உங்கள் விருப்பம். அதனை பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி அரசு நனவாக்கி உள்ளது. இந்த அழகான இடத்திற்கு இப்போது தான் சரியான பெயர் கிடைத்துள்ளது. அனைவரின் முயற்சிகளுக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கேரளம் என பெயரை மத்திய அரசு மாற்றியிருப்பது, மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம்.

மேற்காசியாவில் தற்போது நடப்பது குறித்து அனைவருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான நமது சகோதரர் மற்றும் சகோதரிகள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது எல்லாம் நமது நாட்டு மக்களுக்கு பிரச்னை வருகிறதோ, அப்போது அவர்களை பாதுகாக்க நாங்கள் அனைத்து சக்திகளையும் பயன்படுத்துகிறோம். இன்றைய இந்தியா, நாட்டு மக்களை பிரச்னையில் தள்ளாது. போரில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் அளித்துள்ளோம்.

வளைகுடாவில் உள்ள நமது நட்பு நாடுகள், நமது குடிமக்களின் நலன்களை பாதுகாத்து வருவது எனக்கு திருப்தி அளிக்கிறது. நமது தூதரகங்கள் 24 மணிநேரமும் அவர்களுக்கு உணவு, வசிப்பிடம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.

உலகளாவிய பிரச்னை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வேண்டும் என்றே, ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.இதனால், நமது மக்கள் அங்கு சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் மோடியை திட்டுவார்கள். இது தான் அவர்களின் எண்ணம்.

70 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தீர்கள். தற்போது, உங்களுக்கு சேவை செய்ய பாஜ தலைமையிலான தேஜ கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். வளர்ந்த கேரள மாநிலத்தை நீங்கள் பார்ப்பீர்கள்.

கேரள வெள்ளத்தின் போது மீனவர் சமூகத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. தங்கள் உயிரை பணயம் வைத்தும் பல உயிர்களை காப்பாற்றிய அவர்களின் துணிச்சலை உலகம் கண்டது. நாடு சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் மீனவர் சமூகத்தினரின் துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. எங்கள் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீனவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கேரளத்தின் ஒவ்வொரு குடும்பமும் செழிப்பைப் பெறுவதே எங்கள் நோக்கம். இது வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கு அடித்தளமாகவும் மாறும். வளர்ச்சி அடைந்த கேரளத்தை உறுவாக்க வழிவகுக்கும். தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மீனவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒரே இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவதும் அவர்களுக்கு எளிதாகிவிட்டது. முந்தைய ஆட்சி காலத்தில் பல ஆண்டுகளாக மீனவர் சமூகத்தை புறக்கணித்தனர்.

தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீனவர்கள் நலனுக்காக திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பாஜ-தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது. பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், கேரளத்திற்கு 1400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீன்வளத் துறை வேகமாக முன்னேறி வருகிறது – என்று பிரதமர் மோடி பேசினார்.

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

இதுதான் திமுகவுக்கு கடைசி தேர்தல்: இபிஎஸ்

திருச்சியில் என்டிஏ பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது:

”திமுக என்றால் குடும்பக் கட்சி என்று பொருள். இந்தத் தேர்தல்தான் கருணாநிதி குடும்பத்துக்கு கடைசித் தேர்தல். திமுக கூட்டணியில் வெவ்வேறு கொள்கை உடைய கட்சிகள்தான் உள்ளன. கூட்டணி அமைக்கும் கட்சிகள் திமுகவிடம் அடிமையாக உள்ளன.

விவசாயிகள் பல்வேறு வகைகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. மூதாட்டிகள் முதல் சிறுமிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டம் – ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது.”

திருச்சி என்டி பொதுக் கூட்டம்: அன்புமணி, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் பேசியது என்ன?

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: திமுக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் மதுவால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்; மதுவால் குற்றங்கள் அதிகரிப்பு; தமிழகத்தில் போதையால் ஏற்படும் விபத்துகள் அதிகம்.

அரசு மதுவை விற்கவில்லை; திணிக்கிறது. பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசாக உயர்த்தி கொண்டிருக்கிறார்; 2 மாதங்களில் தமிழக முதல்வராக பழனிசாமி பதவியேற்பார்; என்.டி.ஏ. ஆட்சி தமிழகத்தில் மலரும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தமிழ்நாட்டுக்கும் பிரதமர் மோடிக்குமான உறவு தொப்புள்கொடி உறவு போன்றது. பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்; தமிழ்நாட்டோடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்புடைய பிரதேசம்; இன்னும் சொல்லப் போனால் இரண்டாம் சங்க காலத்திற்கு முன்பே நமது வேளிர்கள் ஆட்சி நடைபெற்றது.

திராவிட குஜராத் ஆக, திராவிடர்கள் ஆட்சி நடைபெற்ற அந்தப் பகுதியில் இருக்கும் துவாரகாவை தமிழ் பேசும் வேளிர்கள் ஆட்சி செய்தார்கள். நம் சங்க இலக்கியங்களிலே குறிப்பாக புறநானூற்றிலே துவரை என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது.

அங்கிருந்து வந்து வேளிர்களாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்தார்கள்; பாரி வள்ளல் வேள்பாரி வேளிர் மன்னர்தான்; தகடூரை ஆட்சி செய்த அதியமானும் வேளிர் வம்சம்தான்.

வேளிர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஆட்சி செய்தார்கள்; அந்தப் பகுதியில் இருந்து நம்முடைய பிரதமர் வந்திருக்கிறார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: பிரதமர் மோடி எப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருகிறாரோ அப்பொழுதெல்லாம் தாய் மாமன் சீர் கொண்டு வருவது போல திட்டங்களை கொண்டு வருகிறார். இன்றைக்கும் ரூ.5,600 கோடிக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார்; மதுரைக்கு வரும் போது ரூ.4,400 கோடிக்கு திட்டங்கள் கொண்டு வந்தார்.

தாய் மாமன் வீட்டு சீர் கூட லேட் ஆகத்தான் வரும்; ஆனால் பாரத பிரதமரின் சீர் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தல் குடும்ப ஆட்சிக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தேர்தல்; குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Topics

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் 08.03.2026 அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி

Entertainment News

Popular Categories