இன்றைய பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – வெள்ளி

தினசரி. காம்🌹  ஶ்ரீராமஜெயம் .

ஶ்ரீராமஜெயம்
பஞ்சாங்கம்@ராசி பலன்கள்

சித்திரை ~ 06
19.04.2019 வெள்ளிக்கிழமை.
வருடம்~ விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}

அயனம்~ உத்தராயணம் .
ருது~ வஸந்த ருதௌ.
மாதம்~ சித்திரை ( மேஷ மாஸம்)
பக்ஷம்~ சுக்ல பக்ஷம்.
திதி ~ பௌர்ணமி மாலை 05.20 PM. வரை. பிறகு பிரதமை.

ஸ்ரார்த்த திதி ~ பௌர்ணமி
நாள் ~ வெள்ளிக்கிழமை {ப்ருஹு வாஸரம் } ~~~~
நக்ஷத்திரம் ~ சித்திரை இரவு 08.10 PM. வரை. பிறகு சுவாதி.
யோகம் ~ சித்த யோகம்.
கரணம் ~ பவம், பாலவம்

நல்ல நேரம்~ காலை 09.30 AM ~ 10.30 AM & 04.30~ 05.30 PM
ராகு காலம்~ காலை 10.30 AM ~ 12.00 NOON.
எமகண்டம்~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM
குளிகை~ காலை 07.30~ 09.00 AM.

சூரிய உதயம் ~ காலை 06.02 AM .
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.19 PM.
சந்திராஷ்டமம் ~ உத்திரட்டாதி, ரேவதி.
சூலம்~ மேற்கு .
பரிகாரம்~ வெல்லம்..

இன்று ~ சித்ரா பௌர்ணமி.

~

இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய (19-04-2019) ராசி பலன்கள்

ஸ்ரீ மாத்ரே நம:

ஸ்ரீ குரு ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகர பாரதி சஹாயம்.

ஒவ்வொரு ராசிக்கான இன்றைய பலன்கள்:

மேஷம்:

நீண்ட நாளைய கனவு நனவாகும். குடும்பத்துடன் புண்ணியத் தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். பிறருக்கு ஆலோசனை சொல்லி அதன் மூலம் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி லாபத்துக்கு அடிகோலும். மறைமுக எதிர்ப்புகள் மறையும் நாள்.


பிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.


ரிஷபம்:

பயணங்களின் போது கவனம் தேவை. காரியத் தாமதம் ஏற்படும். நண்பர்கள் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்குவாதம் வேண்டாம். பணவரவு இருக்கும். சக ஊழியர், மேலதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம்.


ஸ்ரீ அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரித்து நிம்மதி தரும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதியில் “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.


மிதுனம்:

பயணங்களில் கவனம் அவசியம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். புண்ணியத் தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். பழைய கடன்பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும்.


ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.


கடகம்:

பேச்சு வார்த்தைகளில் எச்சரிக்கை அவசியம். பயணங்களில் கவனமாக இருங்கள். விலைஉயர்ந்த பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளில் கவனம் தேவை. பணவரவில் சிக்கல்கள் உண்டாகும். பொது இடங்களில் மணிப்பர்சில் கவனம் வையுங்கள். உடல் நலனில் மிகுந்த கவனம் அவசியம். தோல் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை சிலருக்கு ஏற்படலாம். முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பிரச்சனைகள் தேடிவர வாய்ப்புள்ள்தால் அரசியல் விவாதங்களைத் தவிர்ப்பது நிம்மதிக்கு வழிவகுக்கும்.


சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கி நாளைச் சீராக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.


சிம்மம்:

பணவரவுக்கு இடமுண்டு. தேக ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் கொடுத்த பணி இலக்கைச் செவ்வனே முடித்து அதிகாரிகள் பாராட்டைப் பெறுவீர்கள். பிதுரார்ஜித சொத்துக்கள் குறித்த பேச்சுவார்த்தை சாதகமாகி சொத்து சேரும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி ஏற்படும். பிள்ளைகள் பாராட்டப்பட்டு அதனால் உங்களுக்கு மகிழ்ச்சி வரும்.


கணபதி வழிபாடு சிக்கல்களைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.


கன்னி:

நண்பர்கள், உறவினர்கள் பிரச்சனையை முன்னின்று தீர்த்து அதனால் பாராட்டும் நிம்மதியும் பெறுவீர்கள். அலுவலகத்தில் வேண்டிய பணி/இட மாற்றம் குறித்து நல்ல செய்தி வரும். செல்வாக்கு கூடும் நாள். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு திருமணம் கைகூடிவர வாய்ப்புள்ளது. குழந்தைப்பேறு எதிர்பார்த்திருப்போருக்கு நற்செய்தி வரும். தங்கம், வெள்ளி நகை, பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலனில் எச்சரிக்கை அவசியம்.


கணபதி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.


துலாம்:

நண்பர்கள் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்குவாதம் வேண்டாம். பயணங்களின் போது கவனம் தேவை. யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். சக ஊழியர், மேலதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். காரியத் தாமதம் ஏற்படும். பணவரவு இருக்கும்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்வது, ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி பாராயணம் செய்வது, அயிகிரி நந்தினி பாராயணம் நன்மை தரும்.


விருச்சிகம்:

அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். வேண்டிய பணி/இடமாற்றம், ஊதிய/ பதவி உயர்வு, மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைத்தல் ஆகியவை நடைபெற வாய்ப்புண்டு. பிள்ளைகள் படிப்பு/திருமணம் சம்பந்தப்பட்ட கவலை ஒன்று வரும் நல்ல செய்தியால் தீரும். நீண்ட காலக் கடன் வசூலாகும். திருமணத்துக்காகக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைகூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி அதனால் நல்ல லாபம் ஏற்படும்.

சிவபெருமான் வழிபாடு இன்றைய நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.


தனுசு:

அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். வேண்டிய பணி/இடமாற்றம், ஊதிய/ பதவி உயர்வு, மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைத்தல் ஆகியவை நடைபெற வாய்ப்புண்டு. நீண்ட காலக் கடன் வசூலாகும். பிள்ளைகள் படிப்பு/திருமணம் சம்பந்தப்பட்ட கவலை ஒன்று வரும் நல்ல செய்தியால் தீரும். திருமணத்துக்காகக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைகூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி அதனால் நல்ல லாபம் ஏற்படும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள்.

ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களைத் தீர்க்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் படிப்பது மகிழ்ச்சி தரும்.


மகரம்:

நினைத்த காரியம் கைகூடும். சமூகத்தில் செல்வாக்கு கூடும் நாள். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நீண்டகால நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள். திருமணத்துக்காகக் காத்திருப்போருக்கு சுபமான செய்திவரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கதவு தட்டும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.


ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்வது, ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி பாராயணம் செய்வது, அயிகிரி நந்தினி பாராயணம் நன்மை தரும்.


கும்பம்:

பேச்சு வார்த்தைகளில் எச்சரிக்கை அவசியம். பிரச்சனைகள் தேடிவர வாய்ப்புள்ள்தால் அரசியல் விவாதங்களைத் தவிர்ப்பது நிம்மதிக்கு வழிவகுக்கும். பயணங்களில் கவனமாக இருங்கள். பொது இடங்களில் மணிப்பர்சில் கவனம் வையுங்கள். பணவரவில் சிக்கல்கள் உண்டாகும். விலைஉயர்ந்த பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளில் கவனம் தேவை. உடல் நலனில் மிகுந்த கவனம் அவசியம். தோல் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை சிலருக்கு ஏற்படலாம். முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.


அம்பாள் வழிபாடு அனைத்து நன்மைகளையும் தரும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.


மீனம்:

தொழிலில் வெற்றி, தன லாபம் இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். நீண்டநாள் இழுபறியில் இருந்த காரியங்கள் நிறைவேறி நிம்மதி கிட்டும். பணவரவு இருக்கும். எதிர்கால முன்னேற்றத்துக்கான நல்ல திட்டங்களைத் தீட்டுவீர்கள். வழக்கு விவகாரங்களில் வெற்றி, சாதகமான திருப்பங்கள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கதவு தட்டும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். உடல் நலனில் கவனம் அவசியம்.


பிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

சுபம்

பஞ்சாங்கம் கணிப்பு: எஸ் .ராமஸ்வாமி

தொடர்புக்கு..
தொலைபேசி: +91 99623 92560

மின்னஞ்சல்:
[email protected]

.

—————————————

தினசரி .காம்

உழைப்பு = வெற்றி

துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

– சுவாமி விவேகானந்தர்

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: இனியவை கூறல் – குறள் எண்: 100

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

மு.வ உரை:

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

ஆன்மிக கேள்வி பதில்கள்

* சுப்பிரமணிய சுவாமியை சர்ப்ப ரூபத்தில் வழிபடுவது எதனால்?

ரேவா நதி தீரத்தில் ஜபம் செய்தால் அதிக பலன் என்கிறார்களே! அந்த நதி எங்குள்ளது?

அம்பாளின் அஷ்டோத்ர நமாவளியில் ‘பக்த ஹம்ச பரீமுக்ய’ என்று வருகிறதே! பொருள் என்ன?

* வீட்டில் ஆண்கள் விளக்கேற்றினால் விளக்கு எரியாதா?

* காலத்தால் பிற்பட்ட வாசுதேவ மந்திரத்தை முந்தைய துருவனுக்கு நாரதர் உபதேசித்தது எப்படி?

ஆசை ஆசையாய் அலங்கரித்து பூஜித்த விநாயகரை சதுர்த்தி பூஜை முடிந்ததும் ஆற்றில் கரைப்பது ஏன்?

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.