இன்றைய பஞ்சாங்கம் – ஜுலை 11

தினசரி. காம்🌹 ஶ்ரீராமஜெயம்

பஞ்சாங்கம் ஆனி~26. (11.07.19 ) வியாழன் கிழமை
வருடம் ~ விகாரி { விகாரி நாமசம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ கிரீஷ்ம ருது

மாதம் ~ மிதுன மாஸம் { ஆனி மாதம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
திதி ~ மறுநாள்காலை 4.19 Am வரை தசமி பின் ஏகாதசி
நாள் ~ {குரு வாஸரம் } வியாழன்
நட்சத்திரம் ~ 7.38 Pm வரை ஸ்வாதி பின் விசாகம்

யோகம் ~ ஸித்தம் கரணம் ~தைதுலை
அமிர்தாதி யோகம் ~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & 5.00 ~ 6. 00pm
ராகு காலம்~ மதியம் 1.30~3 .00.
எமகண்டம் ~ காலை 6 .00 ~ 7.30.
குளிகை ~ காலை9.00 ~ 10.30

சூரிய உதயம் ~ 6.00AM
சந்திராஷ்டமம் ~ மீனம்
சூலம் ~ தெற்கு
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
*ஸ்ரார்த்ததிதி ~தசமி
இன்று ~


~~

இன்றைய ராசிபலன் ஜூலை 11

ஸ்ரீ மாத்ரே நம:
ஸ்ரீ குரு ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகர பாரதீ சஹாயம்


மேஷம்

உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களை பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மையை தரும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்


அசுவினி : விவேகம் வேண்டும்.

பரணி : மனச்சோர்வு உண்டாகும்.

கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.ரிஷபம்

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


கிருத்திகை : இலாபம் உண்டாகும்.

ரோகிணி : சுபிட்சம் உண்டாகும்.

மிருகசீரிடம் : ஆசைகள் நிறைவேறும்.மிதுனம்

பொதுக்கூட்டப் பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். மனதில் தெளிவான சிந்தனைகள் தோன்றும். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை : இன்னல்கள் நீங்கும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.கடகம்

வழக்கு விவகாரங்களில் இழுபறியான நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீர் நிலை சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். கடன் தொல்லைகளால் மனவருத்தங்கள் ஏற்படலாம்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


புனர்பூசம் : இழுபறி உண்டாகும்.

பூசம் : பாராட்டப்படுவீர்கள்.

ஆயில்யம் : கவனத்துடன் இருக்கவும்.சிம்மம்

பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சிந்தையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பெற்றோர்களை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். சுபச் செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் ஆதாயமான பலன்கள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


மகம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூரம் : மாற்றம் உண்டாகும்.

உத்திரம் : சுப விரயங்கள் ஏற்படும்.கன்னி

தொழில் திறமையால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் ஆதாயமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருட்சேர்க்கை உண்டாகலாம். நண்பர்களிடமிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.

அஸ்தம் : ஆதாயமான நாள்.

சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.துலாம்

சமூகசேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். வாகன வசதி மேம்படும். திறமைகளால் பணியில் பொறுப்புகள் உயரும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


சித்திரை : சாதகமான சூழல் உண்டாகும்.

சுவாதி : புத்துணர்ச்சி பிறக்கும்.

விசாகம் : பொறுப்புகள் உயரும்.விருச்சகம்

புதிய தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணியில் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படலாம்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு


விசாகம் : கவனம் வேண்டும்.

அனுஷம் : புரிதல் உண்டாகும்.

கேட்டை : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.தனுசு

இசைக் கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.

பூராடம் : மேன்மையான சூழல் அமையும்.

உத்திராடம் : புதிய லட்சியம் பிறக்கும்.மகரம்

தாய்மாமன்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகலாம். உத்தியோகத்தில் பிறரின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்


உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.

திருவோணம் : கவனம் வேண்டும்.

அவிட்டம் : பணிச்சுமை அதிகரிக்கும்.கும்பம்

செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கம் சம்பந்தமான பணிகளில் சாதகமான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். தந்தைவழி சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


அவிட்டம் : புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

சதயம் : ஆசிகள் கிடைக்கும்.

பூரட்டாதி : சிக்கல்கள் நீங்கும்.மீனம்

பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்கவும். புதிய முடிவுகளை எடுக்கும் போது பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். செய்யும் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


பூரட்டாதி : அமைதி காக்கவும்.

உத்திரட்டாதி : ஆலோசனைகளை கேட்கவும்.

ரேவதி : நிதானத்துடன் செயல்படவும்..


தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.


தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1

44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .

விளக்கவுரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?


தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

” முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும் முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும், எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும் வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும், அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும் அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும், தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லையின்பத்திறுதி கண்டாளே”

– குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).

வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…

தினசரி .காம்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...