dhinasari panchangam jyothidam - 2026

பஞ்சாங்கம் அக்.17 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம் ஆன்மிகம்
dhinasari panchangam jyothidam - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் – அக்.17

ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

புரட்டாசி ~ 30 ( 17.10.2026 ) சனிக்கிழமை
வருடம் ~ பராபவ{ பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ புரட்டாசி மாதம் { கன்யா மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ ஸப்தமி {முழுவதும்}
நாள் ~ { ஸ்திர வாஸரம் } சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ காலை 9.57 AM வரை மூலம் பின்னர் பூராடம்.
யோகம் ~ அதிகண்டம்.
கரணம்~ கரஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30 AM.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00 PM.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30 AM.
நல்ல நேரம் ~ 7.30 to 8.30 AM & 4.30 to 5.30 PM.
சூரிய உதயம் ~ காலை 6.05 AM.
சந்திராஷ்டமம் ~ வ்ருஷபம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்த திதி ~ ஸப்தமி.
இன்று ~

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔

பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔

மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

astrology - 2026

இன்றைய (17-10-2026) ராசி பலன்கள்


மேஷம்

வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். பூமி விற்பனையில் சற்று நிதானத்தோடு செயல்படவும். சிலரின் மறைமுகமான ஆதரவுகளால் சில காரியத்தை முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியாக சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : அலைச்சல் அதிகரிக்கும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : சுபமான நாள்.


ரிஷபம்

அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு விமர்சனப் பேச்சுகள் வரக்கூடும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

கிருத்திகை : செலவுகள் அதிகரிக்கும்.
ரோகிணி : விட்டுக்கொடுத்து செயல்படவும்.
மிருகசீரிஷம் : வாய்ப்பு உண்டாகும்.


மிதுனம்

இலக்கிய பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : கற்பனை மேம்படும்.
திருவாதிரை : எண்ணம் ஈடேறும்.
புனர்பூசம் : ஆதரவான நாள்.


கடகம்

உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சொத்து வழக்குகளில் அனுகூலமான முடிவுகள் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள். உத்தியோகம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். நினைத்த காரியம் நிறைவேறும். உயரதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.


சிம்மம்

சிந்தித்து செயல்படுவதால் நன்மைகள் உண்டாகும். நட்பால் ஆதாயம் ஏற்படும். விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் தேடி வருவார்கள். பெற்றோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பொழுது போக்கு செயல்களில் ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : ஆதாயகரமான நாள்.
பூரம் : வேறுபாடுகள் மறையும்.
உத்திரம் : அறிமுகம் ஏற்படும்.


கன்னி

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுற்றி இருப்பவர்களைப் பற்றி புரிந்துகொள்வீர்கள். அதிரடியாக ஒரு முடிவை எடுப்பீர்கள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனை விற்பனையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் நண்பர்கள் வழியில் கிடைக்கும். வியாபார விரிவாக்க முயற்சிகளில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திரம் : தேவைகள் நிறைவேறும்.
அஸ்தம் : முன்னேற்றமான நாள்.
சித்திரை : பொறுமை வேண்டும்.


துலாம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். அலுவலகத்தில் சில நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனை திறனில் சில மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : நம்பிக்கை மேம்படும்.
சுவாதி : புதுமையான நாள்.
விசாகம் : மாற்றம் ஏற்படும்.


விருச்சிகம்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் புதிய அனுபவம் ஏற்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டத்தில் செல்வாக்கு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : புரிதல்கள் உண்டாகும்.
அனுஷம் : அனுபவம் ஏற்படும்.
கேட்டை : செல்வாக்கு மேம்படும்.


தனுசு

எதிலும் படபடப்பு இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் செயல்களை மேற்கொள்வது மேன்மை தரும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. பெரியோர்களின் ஆலோசனைகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும். முக்கியமான கோப்புகளை கையாளும் போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூராடம் : மேன்மையான நாள்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.


மகரம்

ஆடம்பரமான பொருள்களின் மீது விருப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் மேம்படும். தந்தையின் ஆரோக்கியம் நிமித்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : தெளிவுகள் ஏற்படும்.


கும்பம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
சதயம் : ஈடுபாடு உண்டாகும்.
பூரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.


மீனம்

சமூக பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். வியாபார சரக்குகளை விற்று லாபம் அடைவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக பணிகளில் தவறிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க முயல்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை உருவாக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

பூரட்டாதி : புதுமையான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : மாற்றமான நாள்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ
(குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
– சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725)

இன்றைய சிந்தனை!

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

  • Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

  • Martin Luther King Jr.

உழைப்பு = வெற்றி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

  1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
  2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்

தினசரி.காம்


இன்றைய சிந்தனைக்கு…

பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!

உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!

எந்த மனிதரிடமும், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், உறவு கொள்வதும், பிரதி பலன் எதிர் பாராமல் அன்பு செய்வதும், அறம்! அனைவரும் அவரவர் பார்வையில், தங்களை சரியானவர்கள் என்று நினைப்பதை புரிந்து கொண்டு, எதையும் கடந்து போக கற்றுக்கொள்!! பட்டம், பதவி, பகட்டு வாழ்க்கையுடன், மனதின் மகிழ்ச்சியை, ஒன்றாக இணைத்து பார்ப்பதை நிறுத்தும் போது, உண்மையில் மனம், பக்குவம் அடைகிறது!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.