வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

chennai nellai vandebharat express - 2026

மதுரை: இந்திய ரயில்வேயின் மைல்கல்லாக திகழும் வந்தே பாரத் ரயில்கள் எதிர்பார்ப்பிற்கும் மேலாக வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளன. குறிப்பாக தென் மாநில வந்தே பாரத் ரயில்கள், பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சொகுசு மற்றும் பாதுகாப்பான விரைவான பயணம், நடப்பு முன்பதிவு போன்ற அம்சங்களால் வெற்றி நடை போடுகிறது தென் மாநில வந்தே பாரத் ரயில்கள்!

இந்திய ரயில்வே உலகிலேயே நான்காவது பெரிய வலை அமைப்பை கொண்டது. சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதையை கொண்டுள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. உலகில் பயணிகள் போக்குவரத்தில் முன்னணி அமைப்புகளில் ஒன்றாகவும், மிகப்பெரிய பொது போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகவும் இந்திய ரயில்வே விளங்குகிறது. பிரிட்டிஷ் இந்தியாவில் கடந்த 1853 ஆம் ஆண்டு பம்பாய் – தானே இடையே ஏப்ரல் 16ஆம் தேதி முதல் நீராவி இன்ஜின்களின் மூலம் இந்திய ரயில்வேயின் பயணம் தொடங்கியது. சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் உலகின் மிகப்பெரும் அரசுத்துறை நிறுவனமாக இந்தியன் ரயில்வே திகழ்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய ரயில்வே மிக வேகமாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் 100% மின்மயமாக்கப்பட்ட பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் செலவும் கார்பன் உமிழ்வும் குறைந்துள்ளன. சரக்கு போக்குவரத்துக்காக தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் சரக்கு வழித்தடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

இதனால் , சரக்கு ரயில்களின் வேகம் மற்றும் திறன் அதிகரித்துள்ளது. இந்த சாதனைகளின் தொடர்ச்சியாக தான் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட Semi High Speed ரயிலான வந்தே பாரத், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி புது டெல்லியில் இருந்து வாரணாசி வரை பிரதமர் நரேந்திர மோடியால் முதல் பயணிகள் சேவையை தொடங்கியது.

அதிவேக இயக்கம், நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக, தற்போது நாடு முழுவதும் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் இந்தியாவில் உள்ள சுமார் 270 மாவட்டங்களை இணைத்து பயணம் மேற்கொண்டு வருகிறது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2025–26 நிதியாண்டில் மட்டும் வந்தே பாரத் ரயில்களில் 3.98 கோடி (39.8 மில்லியன்) பயணிகள் பயணம் செய்துள்ளனர். நாடு முழுவதும் சராசரியாக தினமும் சுமார் 1.1 லட்சம் பேர் வந்தே பாரத் ரயில்களைப் பயன்படுத்துகின்றனர். வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்ட 2019 முதல் 2026 வரை, 9.1 கோடிக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன.

1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணச் சுற்றுகளை (trips) நிறைவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் தெற்கு ரயில்வேயின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகளிடம் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவற்றில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் வருவாயும் ஆண்டுதோறும் சீரான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.

2024-25 ஆம் ஆண்டில் 54.12 லட்சம் பயணிகள் மற்றும் ₹540.65 கோடி வருவாய் என்ற நிலையிலிருந்து, 2025-26 ஆம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் 24 வந்தே பாரத் சேவைகள் மூலம் மொத்தம் 77.38 லட்சம் பயணிகள் பயணிம் மேற்கொள்ளவும், ₹803.86 கோடி வருவாய் ஈட்டவும் முடிந்தது.

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்டு வரும் உயர்தர சேவையின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை தெளிவாகப் பிரதிபலிக்கிறது. மங்களூரு – திருவனந்தபுரம், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் காசர்கோடு – திருவனந்தபுரம் வந்தே பாரத் உள்ளிட்ட பல ரயில்கள், தொடர்ந்து 100%-க்கும் அதிகமான இருக்கை பயன்பாட்டு அளவைப் பதிவு செய்துள்ளன. பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயிலுக்கு கிடைத்துள்ள வரவேற்பை இவை உறுதி செய்கின்றன.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

2026-27 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே 2026) மட்டும், இந்த ரயில்கள் 15.21 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று ₹162.96 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. அதேபோன்று, ‘நடப்பு முன்பதிவு’ (Current-Booking) வசதி மூலம் ரயில்களில் முழுமையான இருக்கை பயன்பாடு மற்றும் பயணிகளின் கடைசி நேரப் பயணமும் எளிதாக மாற்றப்பட்டுள்ளது.

இருக்கை பயன்பாட்டு அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தபோதிலும், தெற்கு ரயில்வேயின் மேற்கொண்ட ‘நடப்பு முன்பதிவு’ என்ற புதிய முயற்சி பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை, ரயிலின் தொடக்க நிலையங்கள் மற்றும் வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்க முடியும். இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்தே ஆக வேண்டிய பயணிகளும் எளிதாக முன்பதிவு செய்துகொள்ள முடிகிறது.

சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட 8 ரயில்களில், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிந்தைய (ஆகஸ்ட்-அக்டோபர் 2025) நிலையை ஒப்பிட்டுப் பார்க்கையில், கிட்டத்தட்ட அனைத்து வழித்தடங்களிலும் ‘நடப்பு முன்பதிவு’ மூலம் பயணித்தவர்களின் எண்ணிக்கையிலும் வருவாயிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.

ரயில் வாரியான ஒப்பீடு – நடப்பு முன்பதிவு பயணிகள் மற்றும் வருவாய்

வண்டி எண் தடம் சராசரி நடப்பு முன்பதிவு பயணிகள் எண்ணிக்கை (ஏப். – ஜூன் 2025)சராசரி நடப்பு முன்பதிவு பயணிகள் எண்ணிக்கை (ஆக. – அக் 2025) சராசரி நடப்பு முன்பதிவு வருவாய் (ஏப். – ஜூன் 2025)சராசரி நடப்பு முன்பதிவு வருவாய் (ஆக. – அக் 2025)
20631மங்களூரு to திருவனந்தபுரம்3,3356,954ரூ.22.24 லட்சம்ரூ.45.01 லட்சம்
20632திருவனந்தபுரம் to மங்களூரு5,16411,896ரூ.32.79 லட்சம்ரூ.73.35 லட்சம்
20627சென்னை எழும்பூர் to நாகர்கோவில்1,5012,832ரூ.14.36 லட்சம்ரூ.28.98 லட்சம்
20628நாகர்கோயில் to சென்னை எழும்பூர்1,7883.846ரூ.15.51 லட்சம்ரூ.36.34 லட்சம்
20642கோயம்புத்தூர் to பெங்களூர் கண்டோன்மென்ட்878835ரூ.6.84 லட்சம்ரூ.6.68 லட்சம்
20646மங்களூரு to – மடகாவோன் (கோவா) சந்திப்பு690667ரூ.6.21 லட்சம்ரூ.6.25 லட்சம்
20671மதுரை சந்திப்பு to – பெங்களூரு கண்ட்டோன்மென்ட்544725ரூ.4.94 லட்சம்ரூ.6.69 லட்சம்
20677சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் to விஜயவாடா2,8292,512ரூ.21.91 லட்சம்ரூ.18.87 லட்சம்
அளவுகோல்ஏப்.-ஜூன் 2025ஆக.-அக்.2025வளர்ச்சி
சராசரியாக நடப்பு முன்பதிவு செய்த பயணிகள்16,7293026780.93%
நடப்பு முன்பதிவு மூலம் பெற்ற சராசரி வருவாய்ரூ.124.80 லட்சம்ரூ.222.17 லட்சம்78.02%

இதனால் தெற்கு ரயில்வே, ‘நடப்பு முன்பதிவு’ முறையை அனைத்து வந்தே பாரத் ரயில்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 17 வந்தே பாரத் ரயில்களிலும், ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை பயணத்தைத் தொடங்கும் நிலையம் மற்றும் வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் ‘நடப்பு முன்பதிவு’ (current-booking) வசதி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

அதிகமான பயணிகள் தேவை மற்றும் ‘நடப்பு முன்பதிவு’ வசதி ஆகியவற்றின் கூட்டு விளைவே தற்போது தெற்கு ரயில்வேயின் அனைத்து வந்தே பாரத் ரயில்களின் செயல்பாட்டிலும் தெளிவாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.

தெற்கு ரயில்வே – வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்

அளவுகோல்நி.ஆ 2024-25நி.ஆ 2025-26ஏப்.-மே 2025ஏப்.-மே 2026
மொத்த வருவாய் (கோடியில்)ரூ.540.65ரூ.803.86ரூ.119.52ரூ.162.96
பயணம் செய்த மொத்த பயணிகள் (லட்சத்தில்) 52.1277.3811.4115.21
நடப்பு முன்பதிவின் மூலம் பயணம் செய்த பயணிகள்2,98,9897,42,42861,9901,39,817
நடப்பு முன்பதின் மூலம் பெறப்பட்ட வருவாய் (லட்சத்தில்)2,181.535.706.75444.281,013.50

விரைவு மற்றும் சொகுசான பயணத்தின் அடிப்படையில் தற்போது ரயில் பயணிகள் வந்தே பாரத் ரயில்களை தேர்வு செய்கின்றனர். தற்போது நடப்பு முன்பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது பயணிகளுக்கு வரப்பிரசாதம். சென்னையிலிருந்து மதுரைக்கு கால் டாக்ஸி எடுத்துக்கொண்டு வருவதற்கு ஆகும் செலவில் கால் பங்கு கூட வந்தே பாரத் கட்டணத்தில் கிடையாது என்பதால் பகல் நேர விரைவு பயணத்திற்கு வந்தே பாரத் ரயில்களை பயணிகள் பெரிதும் தேர்வு செய்கின்றனர்.

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories