sabarimalai and pamba - 2026

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sabarimalai and pamba - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இன்று திங்கட்கிழமை ஆனி மாத பிறப்பு பூஜை வழிபாடுகள் துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். கேரளாவில் பம்பை வனப்பகுதியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை கனமழையாகப் பெய்தது. அதனால், பம்பை நதி தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை ஜூன் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது . கோவில் திருநடையை மேல்சாந்தி திறந்து வைத்ததும் ஆழியில் நெய் தீபம் ஏற்றி கோவிலில் தீபமேற்றி பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கினார். நேற்று எந்த சிறப்பு பூஜையும் இல்லை.

இன்று ஜூன் 15-ஆம் தேதி ஆனி மாதம் பிறந்ததையொட்டி காலை 5 மணியிலிருந்து சிறப்பு பூஜைகள் தொடங்கியது. ஜூன் 19 வரை காலை 4 மணிக்கு நடை திறந்து மதியம் 1 மணிக்கு கோவில் நடை மூடப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

மாலை 6 மணி முதல் 7:30 மணி வரை படி பூஜை நடைபெறும். (இது 15முதல் 19 தேதி வரை தினமும் நடைபெறும்). நெய் அபிஷேகம் காலை நேரத்தில் மட்டும் நடைபெறும். காலை 5:15 முதல் 7 மணி வரை, பின்னர் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறும். (இது 15முதல் 19தேதி வரை தினமும் நடைபெறும்).

இரவு தினமும் 9:50 மணிக்கு ஹரிவராசனம் கீர்த்தனை பாடி, 10 மணிக்கு கோவில் நடை மூடப்படும் ஜூன் 15முதல் 19 தேதி வரை தினமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் பக்தர்கள் பங்கேற்க ஆன்லைன் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.முன் பதிவு செய்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.

தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர் சபரிமலை வரும் பக்தர்களுக்காக பத்தனம்திட்டா உட்பட முக்கிய ஊர்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பரிசுகள் இயக்கப்படுகின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.