irukkankudi mariamman temple adi velli utsav - 2026

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆன்மிகச் செய்திகள் மதுரை லைஃப் ஸ்டைல்
irukkankudi mariamman temple adi velli utsav - 2026

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடியில் அருள்மிகு மாரியம்மன் கோயில் உள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஆடி உள்ளிட்ட தமிழ் மாதங்கள் விஷேச தினமாக கருதப்படுகிறது.இத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.இந்த நிலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

இந்த கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு மாரியம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும் நடைபெற்றது.மேலும் இன்று முதல் ஒவ்வொரு நாளும் அருள்மிகு மாரியப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாழிப்பார்.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி கடைசி வெள்ளி திருவிழா வரும் 14-ம் தேதி மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர்கள் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் தென் மாவட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி மாரியம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.பக்தர்களில் வசதிக்காக பல்வேறு பகுதியிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.