80th independence day speech by modiji - 2026

குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

இந்தியா Featured சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
80th independence day speech by modiji - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 15.08.2026 அன்று, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.
தமிழாக்கம் : ஆர். சுதர்ஸன்

முந்தைய செய்திக் கட்டுரையின் தொடர்ச்சி… (2)

எனதருமை நாட்டுமக்களே, பலமுறை, ஆதாரங்களின் குறைபாடு காரணமாக, தேசம் தடைப்படுவதில்லை.  ஆனால் தடைபடுவதற்கான காரணம், குறுகிய பார்வை தான்.  எண்ணங்கள் தடைப்படும் போது, எல்லைகளுக்கு உள்ளே, அவை அழுகத் தொடங்குகின்றன.  அப்போது, நம்மால், நமது வல்லமையைக் கூட அடையாளம் காண முடிவதில்லை.  தேசம், இன்று கச்சா எண்ணையைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.  நமது தவறான எண்ணப்பாடு காரணமாகத் தான் இது.  உங்களுக்கு ஒரு விஷயம் ஆச்சரியமளிக்கலாம், நாங்கள், கடற்கரையோரத்திலே, 99 சதவீதம் நமது கரையோரப்பகுதிகளிலே, குறுகிய கண்ணோட்டம் காரணமாக, போகத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறோம்.  நாம் தான், கடலுக்குள்ளே சென்று, ஆய்வு மேற்கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறோம்.  இது எண்ணப்பாட்டின் ஏழ்மை.  நாங்கள் இது தொடர முடியாது என்று முடிவெடுத்தோம்.  நாங்கள் அந்த 99 சதவீதத்தை, ஒரு காலத்தில், தடுக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது, நாங்கள் அதை, போகத் தடையில்லாத பகுதியாக, திறந்து விட்டோம்.  மேலும் இப்போது, கடலுக்கு உள்ளே கூட, ஆய்வு மேற்கொள்ள, புதியபுதிய களஞ்சியங்களைத் தேடும் திசையிலே, நாம் சுறுசுறுப்பாயிருக்கிறோம், முயற்சிகள் செய்து வருகிறோம்.  நாங்கள் கடந்த ஆண்டிலே, இந்தத் திசையிலே மகத்துவமான அடியெடுத்து, கடலைக் கடைதலுக்கான அறிவிப்பை வெளியிட்டோம்.  கடந்த நாட்களிலே நாங்கள், 85 கோடி ரூபாய், இந்தப் பணிக்காக, அளித்து பணிகளுக்கு வேகத்தை அளித்திருக்கின்றோம். 

எனதருமை நாட்டுமக்களே, எரிசக்திப் பாதுகாப்பு, என்று நான் கூறும் போது, நாம் மாற்று எரிசக்தி, ஆதாரங்கள் குறித்தும் கூட, முழுச்சக்தியை செலுத்துவது அவசியமாகிறது.  அந்த வகையிலே, எரிசக்தியின் சரியான பயன்பாட்டை அதிகரிப்பது, என்ற இந்தத் திசையினிலே, பாரதம் விரைவாக பணியாற்றுகிறது.  2014க்கு முன்னால் அதாவது 12 ஆண்டுகளுக்கு முன்னால், நமது தேசத்திலே, வெறும், 70, எழுபது நகரங்களில் மட்டுமே, குழாய்வழி எரிவாயு அமைப்பிருந்தது குழாயெரிவாயு அளிக்கப்பட்டது.  12 ஆண்டுகளிலே, இந்த 70 நகரங்களை நாங்கள், 700 நகரங்களாக ஆக்கி விட்டோம்.  இதன் பெயர் தான் வேகம்.  இது தான் விரிவாக்கம்.  2014க்கு முன்னால், அதிகபட்சம், 20-22 இலட்சம் வீடுகளிலே, குழாய்வழி எரிவாயு அளிக்கப்பட்டது.  இன்று, ஒண்ணே முக்கால் கோடி வீடுகளுக்கு, குழாய்வழி எரிவாயு கொண்டு செல்லும் பணி நடந்தேறி வருகிறது.  12 ஆண்டுகளுக்கு முன்னாலே, தேசத்திலே, சூரியசக்தியின் திறன், வெறும், 2 கிகாவாட்டாக இருந்தது.  2 கிகாவாட் மட்டுமே.  இன்றோ, 107 கிகாவாட்டை, நாம் எட்டியிருக்கிரோம். 

எனதருமை நாட்டுமக்களே, மேலும் ஒரு தகவலை அளிக்கிறேன்.  நாங்கள் இதன் ஆதாயங்கள், தேசத்தின் சாமான்யர்களுக்கும் மத்தியத்தட்டவர்களுக்கும் கிடைக்க வேண்டி, இந்தத் திசையிலும் கவனத்தைச் செலுத்தியிருக்கிறோம்.  நாங்கள் பிஎம் சூரியசக்தி இல்லம் இலவச மின்சாரம் திட்டத்தைத் தொடங்கினோம்.  இன்று எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது மிகக்குறைவான நேரத்திலே, 50 இலட்சம் வீடுகளிலே, சூரியசக்திப் பணிகள், என்ற புள்ளிவிவரத்தைக் கடந்து விட்டோம், விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.  இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இல்லங்களின் மின்கட்டணம், பூஜ்யமாகி விட்டது.  ஆயிரக்கணக்கான இல்லங்கள், தங்களுடைய பயன்பாட்டுக்கு மிஞ்சிய மின்சாரத்தை, இன்று விற்பனை செய்து பணம் ஈட்டுகிறார்கள்.  அனைத்துக் குடும்பங்களுக்கும் இந்தப் பணிக்காக, 80,000 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவியாக அளிக்கப்பட்டு வருகிறது.  இவற்றின் விளைவாகவே, நம்மால் இந்தப் பணியை நிறைவேற்ற முடிந்தது. 

எனதருமை நாட்டுமக்களே, உங்களுக்கு இந்த விஷயம் ஆச்சரியமளிக்கலாம்.  நமது ரயில்வே இருக்கிறதே, இதன் மின்மயமாக்கல் பணிகள், நமது தேசத்திலே 1925ஆம் ஆண்டிலே தொடங்கியது.  1925 மின்மயமாக்கல் பணிகள் தொடங்கினாலும், 90 ஆண்டுகளிலே, 1925 தொடங்கி, 90 ஆண்டுகளிலே, வெறும், 30 சதவீதம் மட்டுமே, ரயில்களின், மின்மயமாக்கல் நடந்தது.  அதாவது 90 ஆண்டுகளிலே 30 சதவீதம்.  நமது வேகத்தைப் பாருங்கள்.  இலக்கை அடைய நமது ஓட்டத்தைக் காணுங்கள்.  நாங்கள், இந்த ஒரு பத்தாண்டுக்குள்ளாகவே, 100 சதவீதம் பணியை நிறைவேற்றி விட்டோம்.   90 ஆண்டுகளிலே 30 சதவீதம், பத்தாண்டுகளிலே 70 சதவீதம்.  இதுதான் பணியாற்றல். இதன் காரணமாக, டீசலை, நாம் வெளியிலிருந்து கொண்டுவர வேண்டியிருக்கிறது.  இது சேமிக்கப்பட்டது.  மின்சாரத்தால் நமது ரயில்கள் இயங்கியதால் சுற்றுச்சூழலுக்கு சாதகமானது. 

எனதருமை நாட்டுமக்களே, இதோடு நாம் நிற்கவில்லை.  நாம் உலகத்தினிலே, பின்னடைந்திருக்க விரும்பவில்லை.  கடந்த நாட்களிலே நீங்கள் ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கலாம்.  பாரதமானது, எரிசக்தியின் ஒரு புதிய துறையையும் எட்டியிருக்கிறது.  தேசத்தின் முதல், ஹைட்ரொஜனால் இயங்கும் ரயில் தொடங்கப்பட்டது.  எனக்கு மகிழ்ச்சியான விஷயம், இது மிகவும் நீளமான ரயிலாகும்.  அதோடு மிகவும் சக்திவாய்ந்த ரயிலுமாகும்.  மேலும் உலகத்திலே, ஹைட்ரோஜன் ரயில் துறையிலும் பாரதம், தனது கொடியை நாட்டியிருக்கிறது. 

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கடந்த 10-12 ஆண்டுகளில் நாம் தொடர்ச்சியாக, 1947 என்ற இலக்கை அடைய வேண்டி ஓடிக் கொண்டிருக்கிறோம்.  ஒன்றன்பின் ஒன்றாக, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.  நாம் யோசித்துக் கூடப் பார்க்கவில்லை.  அதாவது நாம் இதிலும்கூட, சில இடைஞ்சல்களை, எதிர்கொள்ள வேண்டிவரும் என்று.  கடந்த 10-12 ஆண்டுகளிலே, நாம் பல சங்கடங்களை சந்தித்து வருகிறோம்.  கொரோனா போன்ற உலகளாவிய பெருந்தொற்று, உலகம் முழுவதையும், கவலையில் ஆழ்த்தி விட்டது.  அனைத்து அமைப்புகளும் நிலைகுலைந்து போயின.  கொரோனாவிலிருந்து வெளிவந்தோம்.  போர் என்ற பயங்கரமான பூதம் பற்றிய செய்திகள் வரத்தொடங்கின.  ஒருபக்கம் உக்ரேன், மறுபுறம் மேற்காசியா, அனைத்து இடங்களிலும் நெருக்கடியான சூழ்நிலை. 

அதுமட்டுமா?  தொலைநோக்குப் பார்வையில் பலவற்றை கணித்திருக்கிறார்கள்!!  தேசத்தை பயமுறுத்துவது, தேசத்தை அச்சத்தில் ஆழ்த்துவது, தேசத்தைக் கவலைக்குள்ளாக்குவது, இதிலே சிலருக்கு சந்தோஷம் ஏற்படுகிறது!!  தடுப்பூசிகள் கிடைக்காது, யாரும் பிழைக்க முடியாது, ஒன்றும் ஆகப்போவதில்லை, மேற்கு ஆசியாவின் நெருக்கடி வந்தது, பெட்ரோல் பம்பிலே பெட்ரோல் கிடைக்காது, எரிவாயு கிடைக்காது, டீசல் கிடைக்காது, உரங்கள் கிடைக்காது, வகைவகையான வதந்திகளைப் பரப்பினார்கள். 

பாரத நாட்டவர்களை அச்சத்திலாழ்த்த கலவரம் ஏற்படுத்த, கவலைக்குள்ளாக மூழ்கடிப்பதில், சிலருக்கும் ஆனந்தம் கிடைக்கிறது.  ஆனால் தேசமானது, கவனித்து விட்டது.  அதாவது கடந்த 10-12 ஆண்டுகளின், செம்மையான திட்டங்கள் எப்படி பலனளிக்கிறது என்பதை.  மேலும் நாங்கள், இத்தனை பெரிய சங்கடங்களைத் தாண்டியும் கூட, குடிமக்களே கடவுளர்கள் என்ற மந்திரத்தை உள்வாங்கி, பாரதம் மேற்கொண்ட தயாரிப்புகள், ஒன்றன்பின் ஒன்றாக படிகள் மேற்கொண்டோம்.  இப்படிப்பட்ட சங்கடம் ஏற்படும் என்று நினைத்தும் பார்க்கவில்லை.  ஆனால் இந்தச் சங்கட காலத்திலும்கூட, இவை அனைத்தும், உதவிகரமாக இருந்தன.  மேலும் இன்று தேசத்திலே, எரிவாயு இருக்கிறது பெட்ரோல் உண்டு யூரியா உண்டு.  நாம் நமது பலத்தின் துணையால் நிற்கிறோம் முன்னேறுகிறோம். 

எனதருமை நாட்டுமக்களே, உலகின் இந்தச் சங்கடங்களின் தாக்கம், அனைவரின் மீதும் இருந்தது நாம் விதிவிலக்கல்ல.  யூரியாவின் விலை, உலகிலே ஒரு மூட்டை 3000 ரூபாய் வரை சென்றது.  இன்றும் கூட நமது நாட்டின் விவசாயிகளின்மீது நாம், அந்தச் சுமையைச் சுமத்தவில்லை, அரசாங்கம் தனது தோள்களிலே அதைச் சுமக்கிறது.  உலகச் சந்தைகளிலே மூடை 3000 ரூபாய், என்ற விலைக்கு வாங்குவதை, நாம் விவசாயிகளுக்கு வெறும் 300 ரூபாய் விலைக்குக் கொடுக்கிறோம்.  இது மட்டுமல்ல, டிஏபி, இன்று உலகச் சந்தையிலே 5000 ரூபாயாகி விட்டது.  ஆனால் என் நாட்டு விவசாயிக்கு சங்கடமேதும் வரக்கூடாது, என்பதற்காக 1350 ரூபாய்க்கு டிஏபியை அளிக்கும் பணியை, நாங்கள் செய்து வருகிறோம். 

என்மனம்நிறை நாட்டுமக்களே, ஒரு காலத்திலே, நான் தற்சார்பு பாரதம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, சில, நபர்களோ, ஏசி அறைகளிலே அமர்ந்து ஆலோசனை கூறும் இவர்கள் அப்போது உலகமயமாக்கத்துக்கு என்னவாகும் என்று வினவினார்கள்.  ஆனால் உலகமே கவனிக்கிறது கடந்த பத்தாண்டுகளிலே, உலகமயமாக்கல் என்று கூறுவதையே உலகம் விட்டுவிட்டதாகத் தெரிகிறது.  எங்கிருந்து உலகமயமாக்கல் பற்றிப் பேசுவார்களோ அவர்களே அமைதியாக பேசாமல் இருக்கிறார்கள்.  உலகின் அனைத்து நாடுகளும், தங்கள்தங்கள் இயல்புக்கு……… ஏற்றவகையிலே நடக்கிறார்கள்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்தச் சங்கடமான காலகட்டத்திலே, சில நபர்களோ, தங்களுடைய நிபுணத்வத்தை வெளிப்படுத்தும் வகையிலே, ஆதாரங்களை ஆயுதங்களாக ஆக்கும் வகையிலே, விளையாடிப் பார்த்தார்கள்.  உலகம், தன்னிடம் என்ன இருக்கிறதோ, அதை ஆயுதமாக ஆக்க முனைந்திருக்கிறது.  ஆதாரங்களின் ஆயுதமாக்கல்.  ஆயுதங்களாகப் பயன்படுத்தல்.  பெட்ரோல் டீசல் செயற்கை உரங்கள், மருந்துகள், தொழில்நுட்ப சிப்புகள்.  இது மட்டுமல்ல, நிலத்தைக் கூட ஆயுதமாக்குகிறார்கள்.  இத்தகைய காலகட்டத்திலே, நாம் தற்சார்பு என்ற மந்திரத்தைத் தாங்கி பத்தாண்டுகள், சரியான திசையிலே செல்லாமல் இருந்திருந்தால், நம்மால் கற்பனை கூட செய்திருக்க முடியாது, எப்படி இத்தகைய சங்கடங்களை எதிர்கொண்டிருப்போம் என்று.  மேலும் நமது தயாரிப்புகள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

என் உளம்நிறை நாட்டுமக்களே, இன்னொரு புறத்திலே, இன்று பாரதத்தின் கருத்து, முழுமையாக வளர்ந்து வருகிறது.  இன்று பாரதம், உலகின் பார்வையில், ஒரு பலமான மற்றும் மதிப்புமிக்க தேசம் என்ற வகையிலே, ஆகி வருகிறது.  பாரதத்திடம், திடமான அரசியல்ரீதியான அங்கீகாரம் இருக்கிறது.   திடமான அரசாங்கம் இருக்கிறது.  பாரதத்திடம் உயிர்ப்பான ஜனநாயகம் உள்ளது.  பாரதத்திடம் பலமான நீதியமைப்பு உள்ளது.  மேலும் நம் அனைவருக்கும் திசைகாட்டும், பாரதத்தின் அரசியல் சட்டம் இருக்கிறது.  மேலும் இப்போது உலகம், நமது இந்த வல்லமைகளை அடையாளம் கண்டுவருகிறது.  அந்த வகையிலே, 2014க்குப் பிறகு, உலகம் கிட்டத்தட்ட 40 நாடுகளுடன், நமது எஃப்டிஏ ஒப்பந்தம் நடைபெற்று வருகிறது. 

நீங்களே பாருங்கள்!!  எத்தனை பெரிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது என்பதை.  அண்மையில் நடந்த, வர்த்தக ஒப்பந்தம் இருக்கிறதே, இது மிகப்பெரிய வாய்ப்பு.  ஆகையினாலே சிறப்பாக, நான் எம் எஸ் எம் ஈக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன், அதாவது நாம், இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிடக்கூடாது.  உலகத்தை நாம் சென்றடைய வேண்டும்.  பாரத உற்பத்தியின் அனைத்துப் பொருட்களும், உலகச் சந்தைகளில் சென்றடைய, மேலும், நமது ஜவுளித்துறையாகட்டும், நமது இயந்திரங்களாகட்டும், நமது மருந்துகளாகட்டும், இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது.  ஆனால் உலகளாவிய அளவுகோல்கள், அவற்றைத் தாண்டி நாம் செயல்பட வேண்டும்.  உலகம் அளிப்பவற்றை விடச் சிறப்பான தரத்திலே நாம் அளிக்க வேண்டும்.  உலகம் அளிப்பதைக் காட்டிலும் விலை மலிவாக நாம் அளிக்க வேண்டும். 

பஞ்சாபின் லுதியானா தொடங்கி, தமிழ்நாட்டின் திருப்பூர் வரை, நமது ஜவுளித்துறை, உலகைச் சென்றடைய முடியும்.  இதுமட்டுமல்ல, கேரளம் தொடங்கி குஜராத் வரை, தமிழ்நாடு தொடங்கி வங்காளம், இந்த நமது கடற்கரைப் பகுதி, நமது மீனவ சகோதர சகோதரிகள், இன்று, இந்த எஃப்டிஏ காரணமாக, நமது ப்ரான்கள்,  அதாவது இறால்கள், இதன் ஏற்றுமதிக்கான சாத்தியங்கள் அதிகரித்திருக்கின்றன.  நமது கடல் உணவு வகைகள், உலகச் சந்தைகளில் பெருகும் சாத்தியங்கள் அதிகமாகியிருக்கின்றன.  மேலும் என்ன விரும்புகிறேன் என்றால், நாம் இந்தச் சூழலை சாதகமாக்கிக் கொண்டு, நாம் முன்னேறும் வகையிலே, இந்தப் பணிகளை ஆற்ற நாம் முயற்சிகளை மேற்கொள்வோம். 

என் மனம்நிறை நாட்டுமக்களே, நான் உங்கள் முன்னால் வைத்த பங்களிப்பை, இதன் பின்னணியிலே, 2047 என்ற இலக்கின், பலமான அஸ்திவாரத்தின் மீது அமைந்திருக்கிறது.  2047 வளர்ந்த பாரதம் என்ற இலக்கு, கடந்த 10-12 ஆண்டுகளிலே, நாட்டுமக்கள் வெளிப்படுத்திய திறமை, அந்த திறமைகளின், அங்கமாகும்.  அந்த வகையிலே என்னுடைய சகோதர சகோதரிகளே, நூற்றாண்டின் நான்கில் ஒரு பங்கு கடந்து விட்டது.  அடுத்த நான்கில் ஒருபங்கு, நமக்கு மிகவும் மகத்துவம் வாய்ந்தது.  நாம் இனி தடைப்பட முடியாது.  நமது வேகம் குறைந்திட முடியாது.  நமது திசை, தீர்மானிக்கப்பட்டு விட்டது.  நாம் இதை அடைந்தே ஆக வேண்டும். 

அந்த வகையிலே, நாம் நமது பணிப்பாங்கை மாற்றியாக வேண்டும்.  நமது பணிக்கலாச்சாரத்தை மாற்றும் வகையிலே, நாம் நமது எண்ணப்பாட்டையும் மாற்ற வேண்டும்.  நாம் நமது பணியின் வேகத்தையும்….. மாற்றியாக வேண்டும்.  இந்தப் பணி, கடந்த 6-7 தசாப்தங்களிலே நடக்கவில்லை.  இந்தப் பணியை நாம் வரவிருக்கின்ற 6-7 ஆண்டுகளிலே செய்தாக வேண்டும்.  தேசத்தின் இளைஞர் சக்தி மீது, என்னுடைய அசையாத நம்பிக்கை உண்டு.  என் நாட்டின் இளைஞர்களின் மீது, என் நாட்டின் பெண்கள் சகோதரிகளின் மீது, என் நாட்டின் விவசாயிகளின் மீது, என் தேசத்தின் தொழிலாளர்களின் மீது, அதாவது நாம், நம்மால் இந்தக் கனவை மெய்யாக்க முடியும் என்று. 

அந்த வகையிலே, நாம் சீதிருத்த வேகத்தையும் அதிகப்படுத்த வேண்டும்.  நான் சீர்திருத்தங்கள் பற்றிக் கூறும் போது, சீர்திருத்தங்கள், இவை நமக்குக் கட்டாயங்கள்.  வெறும் சீர்திருத்தங்களா?  இல்லை இவை நமக்கு மந்திரச் சொற்கள்.  இந்தச் சீர்திருத்தங்கள், நமது நெஞ்சுறுதிகள்.  நாம் நெஞ்சுறுதியோடு, நாம் சீர்திருத்த விரைவுவண்டியிலே பயணிக்கிறோம்.  வரவிருக்கின்ற நாட்களிலும் கூட, அடுத்தகட்ட சீர்திருத்தங்களை நோக்கி முன்னேற இருக்கிறோம்.  அந்த வகையிலே அரசாங்கம், சமூகம், தொழில்துறை, உற்பத்தியாளர்கள், விவசாயிகள், என அனைவருமே, தங்களுடைய பாரம்பரிய வழிமுறைகளை சீர்திருத்த வேண்டும்.  எண்ணப்பாட்டிலே சீர்த்திருத்தம் வேண்டும்.  நமது இலக்குகளில் சீர்த்திருத்தம் வேண்டும்.  அந்த வகையிலே, எனதருமை நாட்டுமக்களே, நாம் தீர்மானமான பாதையில் பயணித்தாக வேண்டும்.  நான் இன்று, அந்தக் காலமும் நினைவுக்கு வருகிறது, அப்போது தேசம், பாரதத்தின் வல்லமையை, சப்தசிந்து என்ற வகையிலே, நாம் அறிந்தோம் தெரிந்தோம் புரிந்தோம். 

இப்போது வளர்ந்த பாரதத்தை உருவாக்க, நமக்குப் புதிய போக்குத் தேவை.  இன்று செங்கோட்டையின் மீதிருந்து, நான் தேசத்தின் முன்பாக, சக்தியின் ஏழு போக்குகளை அறிவிப்பு செய்கிறேன்.  வரவிருக்கின்ற 6-7 ஆண்டுகளிலே, கடந்த 5-6 தசாப்தங்களிலே நடக்காததை, அந்த 7 போக்குகளால், வல்லமையால் நம் ஆற்றலால், நமது தேசத்திற்கு புதிய உயரம் புதிய வேகத்தை அளிப்போம்.  புதிய இலக்குகளை எட்டக்கூடிய வல்லமையை அளிப்போம்.  இதோடு கூடவே, தேசத்தின் இளைஞர் சக்தியின் ஆற்றலும், தேச நிர்மாணத்தில் முழுமையாகப் பயன்படுத்தப்படும்.  அவர்களின் சக்தி இணைக்கப்படும்.  வர்விருக்கின்ற நாட்கள்லே, நான் பேசுகின்ற 7 போக்குகள், இந்த 7 போக்குகளின் முதல் சக்தியானது, தயாரிப்பு வல்லமை. 

பிரதமர் உரையின் தொடர்ச்சி… அடுத்த செய்திக் கட்டுரையில் – சுட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − seventeen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.