
தென் மத்திய ரயில்வே சார்பாக ஹைதராபாத் சார்லப்பள்ளி முனையத்தில் இருந்து செங்கோட்டைக்கு 9 வாரங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த சிறப்பு ரயில் சேலம் பொள்ளாச்சி பழனி மதுரை விருதுநகர் ராஜபாளையம் வழியாக ஹைதராபாத் செங்கோட்டை புதிய வாராந்திர சிறப்பு ரயில் சேவை புதிய வழித் தடத்தில் துவங்குகிறது
இந்த சிறப்பு ரயிலின் வழித்தடமே சற்று வித்தியாசமாக அமைந்திருக்கிறது .
குண்டூர் ரேணிகுண்டா (திருப்பதி) காட்பாடி சேலம் போத்தனூர் பொள்ளாச்சி பழனி மதுரை விருதுநகர் சிவகாசி வழியாக இந்த ரயில் செங்கோட்டை செல்ல போகிறது
07191 சார்லபள்ளி செங்கோட்டை ஸ்பெஷல்
02-10-2026 முதல் 27-11-2026 9 வாரங்கள் இயங்கும்
வெள்ளி = 07:15 AM சார்லபள்ளி ( புறப்படும் )
சனி = 14:00 PM செங்கோட்டை சென்றடையும்.
07192 செங்கோட்டை சார்லபள்ளி ஸ்பெஷல்
03-10-2026 முதல் 28-11-2026 வரை 9 வாரங்கள்
சனி = 17:40 PM செங்கோட்டையில் புறப்படும்
திங்கள்கிழமை 00:30 AM சார்லபள்ளி சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் நல்கொண்டா மிரியாலகுடா குண்டூர் , தெனாலி, பாபட்லா, சிராலா , ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பழனி ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் இராஜபாளையம், சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி-சந்திப்பு வழி செல்லும்.இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு துவங்க இருக்கிறது .
வித்தியாசமான வழிதடத்தில் இந்த சிறப்பு ரயில் இயங்குகிறது. பழனி_திருப்பதி_போத்தனூர்_சேலம் ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக இந்த ரயில் மூலம் செங்கோட்டை மற்றும் பல பகுதிகளிலிருந்து சென்று சேர முடியும் .
இந்த ரயில் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெறும்பொழுது சரளப்பள்ளி செங்கோட்டை இடையே நிரந்தரமாக ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வேயில் தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


