
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தீபத்தூணில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீப நாளில், ஒருநாள் தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. விரிவான விசாரணைக்குப் பிறகு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.
- பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை, நேரம் மற்றும் வழித்தடம் போன்றவற்றை மாவட்ட ஆட்சியரே முடிவு செய்வார்,
- அவரே ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் இருப்பார்.
- பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை.
- கோஷங்கள் எழுப்ப அனுமதி இல்லை.
- புனித மலையின் பகுதிகளைப் பாதுகாக்கத் தேவையான நிபந்தனைகளை இந்திய தொல்லியல் துறை (ASI) பரிந்துரைக்கும்.
நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி விபுல் எம் பஞ்சோலி ஆகியோரைக் கொண்ட குழு, தேவஸ்தானம் (கோவில் நிர்வாகம்) மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே அந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரவிட்டது. பொதுமக்கள் தீபத்தூணுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அதாவது, ஒருமுறை மட்டும் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்றும், தீபம் ஏற்றிய அறிக்கையை மதுரை ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தீபம் ஏற்றுவதற்கான நிபந்தனைகளாக மலை மீது கூட்டமாகச் செல்லக்கூடாது என்றும், கோஷம் போடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், தீபத்தூணில் ஒரு முறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதித்தது. தேவைப்பட்டால் மத்தியப் பாதுகாப்புப் படைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இடைக்கால ஏற்பாடாக திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் குறிப்பிடப்படும் நபர்கள் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
மாநில அரசும், மத்திய தொல்லியல் துறையும் இணைந்து இந்த நிகழ்வை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், அந்த நினைவுச் சின்னம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கடந்த மூன்று தினங்களாக நடந்து வந்த வாதங்கள் இன்று காலை நிறைவு பெற்ற நிலையில், மதியம் 1 மணிக்கு மேல் தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
Posts by Dhinasari Reporter:
- சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி; செங்கோட்டை வழியாக இரண்டு ரயில்கள்!
- திருவண்ணாமலை தீப தரிசனம்; பக்தர்கள் இலவசமாக ஆன்லைன் பதிவு செய்யலாம்!
- உச்ச நீதிமன்றத்தில் இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டிப்பு!
- சிங்கபூரில் இளையராஜா; ரசிகர் விவரித்த இசை அனுபவம்!
- சபரிமலை பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையம்! தொடர்பு எண்கள் வெளியீடு!


