
சர்வதேச நிலவரங்களால், அண்மைக்காலமாக அதிகரித்து வந்த தங்கம் விலை, திடீரென இந்த வாரம் சரிந்தது. குறிப்பாக, சவரன் ஒரு லட்ச ரூபாய்க்கும் கீழ் சரிந்து சிலருக்கு அதிர்ச்சியையும் பலருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
நவ.20 வெள்ளிக்கிழமை இன்றைய நிலவரம்:
ஒரு கிராம் – ரூ.11,540
ஒரு சவரன் – ரூ. 92,080
நவ.20 இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து சவரனுக்கு 3760 ரூபாய் குறைந்து 92,080 ரூபாய்க்கும், கிராமுக்கு 470 ரூபாய் குறைந்து 11,510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு வாரங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 15 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. .
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து 175 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த நவ.16 அன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 320 ரூபாய்க்கும், கிராம் 12,540 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோ ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும், கிராம் 190 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நவம்பர் 17ல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.99, 760 ஆகவும், கிராம் ரூ. 12,470 ஆகவும் இருந்தது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 190 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
நவ.18 அன்று, தங்கம் சவரன் ரூ. 97,720 ஆகவும், கிராம் ரூ.12,215 எனவும் இருந்தது. வெள்ளி விலை கிராம் ரூ. 185 ஆக இருந்தது.
நவ.19 அன்று தங்கம் கிராம் ரூ.12,215 எனவும், சவரன்,ரூ. 97,720 எனவும் இருந்தது. வெள்ளி விலை கிராம் ரூ. 180 என விற்பனை ஆனது குறிப்பிடத் தக்கது


