
2026 ஆம் ஆண்டுக்கான- ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் (ACC) Men’s U19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய U19 அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய இளம் சிங்கங்களின் இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். தேசிய குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்படும் இந்நாளில் இந்தியச் சிறார்களின் வெற்றிப் பரிசு இது என்று இளம் இந்திய அணிக்கு பாராட்டுதல்கள் குவிந்து வருகின்றன.
ஓமானில் உள்ள அல் அமரத் கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் U19 அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. அந்த அணியில், உஸ்மான் கான் 107 ரன்கள், அப்துல் காதிர் 80 ரன்கள், ஃபர்ஹான் யூசப் 63 ரன்கள் என விளாசினர். இந்திய அணியில் காவ்யா படேல் 4 விக்கெட்டுகளும், குருபதி வெங்கடா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதன் பின்னர் களம் இறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது. அணியில் லக்ஷ்யா ராஜேஷ் ராய்ச்சந்தனி 80 ரன்களும், மனல் சௌகான் 47 ரன்களும், மோகித் உல்வா 49 ர்ன் எடுத்து ஆட்டம் இழக்காமலும் இருந்தார். அவர் 26 பந்துகளில் இந்த அதிரடி காட்டினார். குறிப்பாக, கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் தரப்பில் ரிஸ்வானுல்லா 3 விக்கெட்டுகள் எடுத்தார். தொடர் நாயகன் விருதை ஆரியவீர் சேவாக் (361 ரன்கள்) பெற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தமது சமூகத் தளப் பக்கங்களில், இளம் இந்திய அணிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இது இந்திய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த நாள் என்றும், இளம் இந்திய அணியின் வெற்றி பல இளைஞர்களு க்கு உந்துதலாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



