pm modi deepavali wishes - 2026

ஒளிமயமான எதிர்காலம்! – பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!

இந்தியா Featured சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
pm modi deepavali wishes - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளி கொண்டாடும் நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அவரது வாழ்த்து:

எனதருமை நாட்டு மக்களே,

மங்களகரமான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

தீபாவளித் திருநாள், இருளை ஒளியும், தீமையை நன்மையும், அவநம்பிக்கையை நம்பிக்கையும் வெல்லும் சாஸ்வதமான வெற்றியைக் கொண்டாடும் நாளாகத் திகழ்கிறது.

நமது வளமான பாரம்பரியங்களை கொண்டாடுவதற்கும், ஒருமைப்பாட்டுணர்வின் வேர்களை வலுப்படுத்துவதற்கும் தீபாவளிப் பண்டிகை அடிநாதமாக விளங்குகிறது.

இல்லங்களில் மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் சுபிட்சத்தை ஒளிரச் செய்வதாய் இந்த தீபாவளித் திருநாள் அமையட்டும்.

இந்தப் பண்டிகைக் காலம், அன்பைப் பரிமாறி, நேர்மறைச் சிந்தனைகளைத் துணைகொண்டு, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செயல்பட நம்மை ஊக்குவிக்கட்டும்.

ஒரு செழிப்பான, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு, புத்தெழுச்சிமிக்க ஆற்றலுடனும் உறுதிப்பாட்டுடனும் நாம் தொடர்ந்து முன்னேறுவோம்.

மீண்டும் ஒருமுறை, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

அன்புடன்,
நரேந்திர மோடி

ALSO READ:  தென்காசி: டிஜிட்டல் கைது என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது!