
நிறுவனங்களுக்கிடையே இணைப்பு மற்றும் ACQUISITION காரணமாகவோ அல்லது பணி ஆணைகள் போதுமான அளவு இல்லை என்கிற காரணமாகவோ எண்ணற்ற ஊழியர்கள் பல வருடங்கள் உழைத்த நிறுவனங்களில் தங்கள் வேலைகளை இழந்து, மாதத் தவணைகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் நிதி நிச்சயமற்ற தன்மையுடன் போராடுவதை சமீப காலமாக பார்க்கிறோம்: சமீப காலங்களில் இத்தகைய வலி நிறைந்த போராட்டங்களின் விழுக்காடு அதிகரித்துள்ளது. நிற்க.
ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவது மட்டுமே ஒரே வழி என்றால், நிறுவன மேம்பாட்டுக்காக அத்தனை காலம் கட்டிக்காத்து இரவு பகல் என்றும் பாராமல் உழைத்த ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வருந்தும் அளவுக்கு ஒரே ராத்திரியிலேயே வெளியே அனுப்பக்கூடாது. பின் எப்படி, இந்த நிலையைக் கையாள்வது?
.
மொபைல் கிராபிக் டிசைன் ப்ளட்பர்ம் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தின் சமீபத்திய மறுசீரமைப்பில் ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி இந்த மறுசீரமைப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக ஒரு ஆதரவுத் தொகுப்பை அறிவித்தார், அதில் பின்வருவன அடங்கும்:
- 6 மாத சம்பளம்.
- நிறுவனம் வழங்கிய மேக்புக்கை அவர்களே வைத்துக்கொள்ளலாம்.
- காப்பீடு வசதி கிடைக்கும் பட்சத்தில், 12 மாதங்களுக்கான மருத்துவக் காப்பீடு.
- 1 வருடத்திற்கான லிங்க்ட்இன் ப்ளட்போர்மின் பிரீமியம்.
- தொழில் வழிகாட்டுதல் மற்றும் நேர்காணல் உதவி.
- $10,000 மதிப்புள்ள வணிக அல்லது சமூகத் திட்ட மானியத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு.
இந்த மறுசீரமைப்பு சுமார் 1000 ஊழியர்களுக்குமேல் பாதிப்பை ஏற்படுத்தியது உண்மையாக இருக்கலாம். . இருப்பினும் அவர்கள் அனைவரும் ஒரே இரவில் தங்கள் வேலைகளை இழந்து விடவில்லை.
ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்வோம்: வேலையிலிருந்து நீக்கப்படுவது ஒருபோதும் நல்ல செய்தி அல்ல. எவ்வளவு பணம் கொடுத்தாலும் வேலைப் பாதுகாப்பிற்கு ஈடாகாது. இது இந்தியா மட்டுமல்ல – உலக அளவில் இந்த வாக்கியம் பொருந்தும்.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மேற்சொன்ன ஆறாத வலி நிறைந்த இத்தகைய சூழலுக்கு நடுவே ஒரே ஒரு பாடம்:
“நீங்கள் ஒருவரின் வேலையைப் பறிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் அவர்களின் கண்ணியத்தைப் (டிக்னிட்டி)யைப் பறிக்காதீர்கள். ஊழியர்கள் நிறுவனங்களுக்குத் தங்கள் நேரம், திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பை வழங்குகிறார்கள். நிறுவனத்துடனான அவர்களின் பயணம் எதிர்பாராத காரணங்களால் முடிவுக்கு வந்தாலும், அவர்கள் மரியாதைக்குத் தகுதியானவர்கள்.
பணிநீக்கம் என்பது ஒரு வணிக முடிவாக இருக்கலாம். ஆனால் நேற்று வரை நிறுவன வளர்ச்சிக்காக உழைத்தோரைக் கண்ணியத்துடன் நடத்துவது ஒரு தலைமைத்துவ முடிவாக இருக்க வேண்டும்.
- ஆர் .கே .



