ஆரியன்காவு கோயிலில் முக்கிய திருப்பணி!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன்

ஐயப்பனின் படைவீடு கோவிலான ஆரியங்காவு திருக்கோவில் கும்பாபிஷேக பணிகளில் முக்கிய நிகழ்வாக, சன்னதி சுற்றம்பலத்தின் முதல் கல் வைக்கும் வைபவமான பாதக பிரதிஷ்டை, சன்னிதானத்தின் கன்னி மூலையில், கோகுல மடத்து தந்திரி சம்பு போத்தி கும்பாபிஷேக குழு தலைவர் சரவணன் தலைமையில், ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ அப்ரமேய ராமானுஜ ஸ்வாமிகள் முன்னிலையில் முதல் கல்லை பிரதிஷ்டை செய்தார். மேல் சாந்தி ஶ்ரீ விஷ்ணுதாஸ் ஶ்ரீபுரம் உடன் இருந்தார்.

மேற்படி சுப வைபவத்தில், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் பிரதீப், ஆரியங்காவு சப்குரூப் ஆபிஸர் அஜித், நமது சங்கத் தலைவர் K. R. ராகவன், பொருளாளர் S.K. ரவிச்சந்திரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் J. K. விஜிகுமார் ரமணா வெங்கடேஷ், தென்மலை அஜி, சிற்பி சங்கர், ஆரியங்காவு அட்வைசரி கமிட்டியினர் , ஆரியங்காவு அட்வைசரி முன்னாள் கமிட்டியினர் திரு சுஜாதன், ஆரியங்காவு தேவஸ்தான ஸௌராஷ்ட்ரா மஹாஜன சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள், ஆன்மீக பெரியோர்கள் கலந்து கொண்டனர்.

Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam