
அரசின் சிறுபான்மை பாசமும், தர்கா நிர்வாகத்தின் திசை திருப்பும் முயற்சியையும் கண்டித்து, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கடந்த வருடம் திருக்கார்த்திகை தீபத்திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் அந்த உத்தரவு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வால் உறுதி செய்யப்பட்டு ஓராண்டுகாலம் ஆகிவிட்டது.
தற்போது இந்த வருடத்திற்கான திருகார்த்திகை தீபத்திருநாள் விழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. தமிழகமெங்கும் உள்ள முருகபக்தர்கள் இந்த வருடம் உயர்நீதிமன்ற உத்தரவின் படி தீபம் எற்றபடும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றபட்டதாக வரலாறு இல்லை என்றும், கோயில் அர்ச்சகர் கருத்துபடியும், ஆகம விதிகளின் படியும் உயர்நீதிமன்ற உத்தரவு தவறானது என்றும் தர்கா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதும் அதற்கான போராட்டமும் நூறாண்டு கால வரலாறு கொண்டது. 1923 முதலாக 1928 பிரிவியூ கவுன்ஸில் உத்தரவு வரை மலையில் உள்ள தர்காவும் நெல்லிதோப்பு பகுதியும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு செய்யபட்ட இடம் என்பதை உறுதி செய்துள்ளதுடன், தர்கா, நெல்லித்தோப்பு தவிர மலை முழுவதும் முருகனுக்கே சொந்தம் என அறுதியிட்டு தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
கடந்த 2005-ல் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நடந்த அமைதிக் கூட்டத்தில் தர்கா தரப்பினர் தீபம் ஏற்றுவதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என மாவட்ட ஆட்சியர் முன்பு ஆஜராகி கடிதம் அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
ஆனால் திமுக.,வைச் சேர்ந்த நவாஸ் கனி எம்பி., திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் நோக்கத்தில் மலை மீது ஏறி பிரியாணி தின்று அதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினார். இதனால் பக்தர்கள், பொதுமக்கள் இடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு பதட்ட நிலை ஏற்பட்டது. அந்த வகையில் நவாஸ் கனி திட்டமிட்டு மதமோதல் உருவாகும் சூழ்நிலையை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மலை மீது உள்ள தர்காவில் வழக்கமாக உயிர்பலி & அசைவம் இல்லாத சந்தனகூடு விழா நடத்தப்பட்டு வந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்த சில முஸ்லீம்கள் மலை மீது ஆடு, கோழி பலிகொடுத்து கந்தூரி விழாவாக நடத்த முயற்சி செய்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் மதமோதல், பதட்டம் ஏற்பட்டது.
ஆடு ,கோழி பலியிடத் தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆடு, கோழி பலியிட நிரந்தர தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மலையில் உள்ள நெல்லிதோப்பு பகுதியில் தொழுகை நடத்த வேண்டும் என்று ஒரு கும்பல் முயற்சி செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியது.
அதே சமயம் அப்போது ஆட்சியில் இருந்த திமுக முற்றிலும் இந்துக்களுக்கு எதிராகவும், முருக பக்தர்களின் உணர்வுகளை சிதைக்கும் வகையிலும் உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற எல்லா வகையான முட்டுகட்டைகளையும் ஏற்படுத்தி ஓட்டு வங்கி அரசியல் செய்து முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தற்போதைய தவெக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் கேட்டபோது, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக கூறி அவ்வாறு மேல்முறையீடு செய்யபட்டபோதும் உச்ச நீதிமன்றம் மதுரை கிளை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எவ்விதமான தடையும் விதிக்கவில்லை, மாறாக உத்தரவை நிறைவேற்றுமாறு வாய்மொழியாக கருத்து தெரிவித்தது.
ஆனாலும் திமுக அரசின் இந்து விரோத நிலைப்பாட்டையே தற்போதைய அரசும் கடைபிடித்து வருவதும், தேவையற்ற வம்பு பிரச்சனைகளை செய்துவரும் சில சமூக விரோத, மத அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கங்களை சட்டபடி அடக்க முயற்சிக்காமல் திமுகபோலவே இந்த அரசும் செயல்படுவது, சமூக விரோத இயக்கங்களின் நோக்கத்தை மறைமுகமாக ஆதரிப்பதாகவே கருதவேண்டியுள்ளது.
தற்போது தர்கா தரப்பில் ஆகம விதிகளை மேற்கோள் காட்டியும் மற்றும் அரசின் அழுத்தத்தால் அர்ச்சகர்கள் கூறிய பிறழ் கூற்றுகளையும் வைத்தும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பது ஏதாவது ஒரு வகையில் மத மோதலை தூண்டிவிட வேண்டும், அதன்மூலம் இந்துகளின் நூற்றாண்டுகால கோரிக்கையை மறைக்க வேண்டும், அதே சமயத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முன்னிறுத்தி நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்ற குள்ளநரி தந்திரத்துக்கு தமிழக அரசு துணை போக கூடாது.
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்” என்ற திருக்குறளுக்கு ஏற்ப தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றி, நீதியை நிலைநாட்டி கலகம் செய்ய எண்ணம் கொண்டோரை ஒடுக்கி எதிர்வரும் திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபதூணில் தீபமேற்ற முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது..



