doller vs gold - 2026

தொடர்ந்து சரியும் தங்கம் விலை! அன்றே சொன்னார் மோடி!

வணிகம் இந்தியா சற்றுமுன்
doller vs gold - 2026

தங்கம் விலை மேலும் குறையுமா? தொடர்ந்து சரியுமா? என்றெல்லாம் இப்போது பலரும் கணக்குப் போட்டுக் கொண்டு தினமும் செய்திகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று தங்கம் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. சுமார் ஒருவருட காலம் சவரன் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருந்து வந்தது. இந்த வருடம் ஜனவரி 29ல் அதிகபட்ச விலை அளவாக, சவரன் ஒன்று ரூ.1,34,400 என்ற அளவில் இருந்தது. இந்நிலையில், நேற்று திடீரென ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைந்து பலருக்கும் மகிழ்ச்சியையும் சிலருக்கு அதிர்ச்சியையும் அளித்தது.

இன்றைய (18.11.2026) விலை நிலவரப்படி, ஒரு சவரன் விலை ரூ.97,720 என்ற அளவில் இருந்தது. இந்த வருடத் தொடக்கத்துக்கும் இந்த வருடத்தின் நிறைவை எட்டிக் கொண்டிருக்கும் இந்நாளிலும் பார்த்தால், தங்கத்தின் விலையில் மொத்த சரிவு சவரனுக்கு ரூ.36,680 ஆக உள்ளது. அதாவது கடந்த 10 மாதங்களில் தங்கம் விலை 27.3% அளவு சரிந்துள்ளது.

ALSO READ:  நவீன வேளாண் முறைகள், அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு!

விலை சரிவுக்கான 5 முக்கியக் காரணங்களாகக் கூறப்படுவது…

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு.
தங்க முதலீட்டு நிதிகளிலிருந்து முதலீடுகள் வெளியேற்றம்.
அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு.
அமெரிக்க வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்பு.
முதலீட்டாளர்கள் லாபத்தைப் பெற தங்கத்தை விற்பனை செய்வது – இவற்றைச் சொல்கிறார்கள்.

இனி வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் 4-5% குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் முன்பே கணித்திருந்தனர். அதற்கு ஏற்ப, சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் கடந்த வாரத்தில் அதிகரித்த தங்கம் விலை, இந்த வாரத்தில் குறைந்து வருகிறது என்கிறார்கள்.

வெள்ளி விலையும் சரிவு:

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 185 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2 ஆண்டுகள் மக்கள் அவசியமான மற்றூம் (முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு மட்டும் தங்கம்/வெள்ளி வாங்கிக்கொண்டால் போதும், தங்கம் வெள்ளி விலை குறைந்து விடும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். எனினும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் இதைத்தான் பொதுமக்களுக்கான வேண்டுகோளாக முன்னர் விடுத்திருந்தார். அவர் கணித்த படியே தங்கத்தில் முதலீடுகள் குறைந்து மற்ற வளர்ச்சிகளில் கவனம் செலுத்திய நிலையில், தற்போது தங்கத்தின் விலையும் குறைந்து வருவது அவருடைய கணிப்பை மெய்யாக்கியிருக்கிறது.

ALSO READ:  அடடா... தமிழக அரசால் இனி வெதர்மென்களுக்கு எல்லாம் ஒதறல் எடுக்கும் போலிருக்கே!

Posts by ரம்யா ஸ்ரீ: