308797 - 2026

நவீன வேளாண் முறைகள், அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு!

கோவை கல்வி சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
308797 - 2026

அமிர்தா வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மூலம் நவீன வேளாண் முறைகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமிர்தா வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள், ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 நவம்பர் 13 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்றாம்பாளையம் கிராமத்தில் தென்னையில் ஊடுபயிர் சாகுபடியின் முக்கியத்துவம், வேளாண் இடுபொருட்களை வாங்குவதற்கான TNAU Agri Cart செயலியின் பயன்பாடு மற்றும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY), கிசான் கடன் அட்டைத் திட்டம் (KCC) உள்ளிட்ட விவசாயிகளுக்கான அரசு திட்டங்கள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடி பல்வேறு அரசு திட்டங்கள் குறித்தும் அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், தென்னையில் ஊடுபயிர் சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறும் வழிமுறைகள் ஆகியவை குறித்தும் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணாலில் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் அமிர்தா, ஹரிகிருஷ்ணன், மேகா மணிகண்டன், மெஹர், நந்தகிஷோர், அலக்கநந்தா, தருணிகா, ஹர்ஷினி, லெக்ஷ்மி, கிருஷ்ணாஞ்சனா, சுபஹரிணி மற்றும் ஸ்வரூப் ஆகிய மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கிராம விவசாயிகளின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Posts by Dhinasari Reporter: