பிள்ளைங்க பெரிசா இருக்காங்க.. பெத்தவங்க அப்படியே இளமையா இருக்காங்களே!

சினி நியூஸ் சினிமா
srikanth
srikanth

கோலிவுட்டில் நடிகர் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் நிறைய ரசிகர்களை பெற்றார்.

ரோஜா கூட்டம் திரைப்படத்திற்கு பின்னர் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, கிழக்கு கடற்கரை சாலை, போஸ், ரசிக்கும் சீமானே, பூ, மிருகா மற்றும் நண்பன் போன்ற நிறைய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் ஆரம்ப காலத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கூட சில வருடங்களுக்கு பிறகு மொத்தமாக காணாமல் போய்விட்டார்.

இவருக்கு நிறைய இளம் பெண்கள் ரசிகர் கூட்டம் இருந்தது. அவர்களுக்கு மத்தியில் ஸ்ரீகாந்துக்கு சாக்லேட் பாய் என்று பெயர் இருந்தது.

தற்போதும் கூட அவர் சில திரைப்படங்களில் நடிக்கின்றார். இதுகுறித்த அறிவிப்புகள் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இவருக்கு வந்தனா என்ற மனைவியும் மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.

அனைத்து பிரபலங்களையும் போலவே ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனாவும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தங்களது குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆக அதில் பதிவு செய்து வருவார்.

அப்படி அவர் தீபாவளி கொண்டாட்டத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ரீகாந்தின் மகன் மற்றும் மகள் ஆகியோர் இருக்கின்றனர். இதை கண்ட ரசிகர்கள் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? என்று ஆச்சரியம் கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.