அழகழகான புகைப்படங்களை பார்க்க வேண்டும் என்றால், இன்ஸ்டாகிராம் சரியான தளம். அந்த தளத்தில் பகிரப்படும் புகைப்படங்களை மெருக்கூட்டுவதற்காக யூசர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆப் ரெட்டிரிகா.
இந்த செயலியில் அநேகமான ஃபில்டர்கள் இருக்கின்றன. பிளர், விக்னெட் உள்ளிட்ட 190க்கும் மேற்பட்ட ஃபில்டர்கள் ரெட்டிரிக்கா செயலியில் இடம்பெற்றுள்ளது.
இது ஒரு இலவச செயலி. ராண்டம் ஆப்சனும் உள்ளது. ஒரு புகைப்படத்தை தேர்வு செய்தால், அனைத்து பில்டர்களிலும் புகைப்படம் வரிசையாக காண்பிக்கப்படும். நீங்கள் விரும்பும் பில்டரை தேர்வு செய்து கொள்ளலாம்.
கேமரா 360 (Camera 360)
வேடிக்கையான புகைப்படங்களை உருவாக்குவதற்கு கேமரா 360 சிறந்த செயலி. இலவச ஆப்பான இதில் ஸ்டிக்கர்கள் மற்றும் கார்ட்டூன்கள் பல வடிவங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் நீங்கள் உங்கள் விருப்பம்போல் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், புகைப்படத்தை மெருகேற்றிக்கொள்ளவும் ஆப்சன் இருக்கிறது.
சைமரா (Cymera)
இதுவும் ஒரு இலவசமான போட்டோ எடிட்டர். சோஷியல் மீடியாக்களில் பகிருவதற்கான போட்டோக்களை உருவாக்குவதற்கு சரியான தளம். இந்த ஆப் மூலம் புகைப்படம் எடுக்கும்போது பல விதமான பில்டர்களை உபயோகித்து, போட்டோ எடுக்கலாம். பாடி எடிட்டர் ஆப்சனும் இதில் இருப்பது கூடுதல் சிறப்பு. எந்த சோஷியல் மீடியா தளங்களில் பகிர்வதற்கு விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ற புகைப்பட அளவு செட்டிங்ஸ் இன்பில்டாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
பனோரமா 360 (Panorama 360)
மிகப்பெரிய குடும்பத்துடன் இருப்பவர்கள், இந்த செயலியை பயன்படுத்தி அட்டகாசமான போட்டோவை எடுக்கலாம். இயற்கை எழில் மிகுந்த இடங்களை அதன் ரசனை குறையாமல் புகைப்படம் எடுப்பதற்கு சரியான ஆப். சில ஸ்மார்ட்போன்களில் பனோரமா 360 ஆப்சன் இருக்கும். அவற்றையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஓபன் கேமரா (Open Camera)
புகைப்பட பிரியராக ஒருவர் இருந்தால், இந்த ஆப் பற்றி நன்கு அறிந்திருப்பார். பில்டர்ஸ் உள்ளிட்டவைகளுக்காக இருக்கும் புகைப்பட ஆப்ஸ்களில் லென்ஸூக்காக இருக்கும் ஆப் இதுவாகும்.
இதில் மேனுவல், ஆட்டோ லெவல் என இருமுறைகளில் ஆப்ஸ்களை பயன்படுத்தலாம். ஆன்-ஸ்கிரீன் ஹிஸ்டோகிராம், ஃபோகஸ் பீக்கிங் மற்றும் பிற அம்சங்கள் இதில் இருக்கிறது. தீபாவளி நேரத்தில் இரவில் ஒளிரும் காட்சிகளைப் படம்பிடிப்பதற்கு இந்த ஆப் உதவியாக இருக்கும்.