election commisioner annouced date of election - 2026

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

சற்றுமுன் Featured இந்தியா தமிழகம்
election commisioner annouced date of election - 2026

தமிழகத்தில்…
வாக்குப்பதிவு: 23/04/2026
வாக்கு எண்ணிக்கை: 04/05/2026

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவித்தது.

தில்லி விஞ்ஞான் பவன் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அஸாம் ஆகிய மாநில தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையர்கள் வெளியிட்டனர். இதனுடன், சில மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்குச் சென்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அரசு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இதை அடுத்து, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யும் பணி நிறைவடைந்தது. 

மேற்கு வங்கம் தவிர, தமிழகம் உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி,

தமிழக தேர்தல் விவரம்

மனு தாக்கல் தொடங்கும் நாள் மார்ச் 30
மனுத்தாக்கல் கடைசி நாள் : ஏப்ரல் 06
மனுக்கள் பரிசீலனை : ஏப்ரல் 07
மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 09
வாக்குப் பதிவு நாள் : ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை : மே 04

புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாமில்:

மனு தாக்கல் தொடங்கும் நாள்: மார்ச் 16
மனுத்தாக்கல் கடைசி நாள் : மார்ச் 23
மனுக்கள் பரிசீலனை : மார்ச் 24
மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்: மார்ச் 26
வாக்குப் பதிவு நாள் : ஏப்ரல் 9
வாக்கு எண்ணிக்கை : மே 04

மேற்கு வங்கத்தில்…

மேற்கு வங்கம் – 2 கட்டம்
மனு தாக்கல் தொடங்கும் நாள் மார்ச் 30 | ஏப்ரல் 02
மனுத்தாக்கல் கடைசி நாள் : ஏப்ரல் 06 | ஏப்ரல் 09
மனுக்கள் பரிசீலனை : ஏப்ரல் 07 | ஏப்ரல் 10
மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 09 | ஏப்ரல் 13
வாக்குப் பதிவு நாள் : ஏப்ரல் 23 | ஏப்ரல் 29
வாக்கு எண்ணிக்கை : மே 04

தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள்

*“தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.

*பிரசாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது.

*தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது.

*அரசு விழாக்கள் நடத்த கூடாது, அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அமைச்சர்கள் வேட்பாளராகவோ, வாக்குச்சாவடி முகவராகவோ கலந்து கொள்ளலாம்.

*கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.