railway news - 2026

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

நெல்லை சற்றுமுன் சென்னை பொது தகவல்கள்
railway news - 2026
#image_title

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

06135 // 06136 || தாம்பரம் – தென்காசி
பகல் நேர சிறப்பு ரயில் 6 சேவைகள்
வாரத்தில் 2 நாட்கள் மட்டும் இயங்கும்
06135 – தாம்பரம் தென்காசி சிறப்பு ரயில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 15 வரை வியாழன் மற்றும் சனி ஆகிய 2 நாட்களும் காலை 05:00 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் சிறப்பு ரயில் அதேநாள் மாலை 03:30 மணிக்கு தென்காசி ரயில் நிலையம் வந்தடையும்.

06136 -தென்காசி தாம்பரம் சிறப்பு ரயில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 16 வரை வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களும் காலை 05:00 மணிக்கு தென்காசியில் புறப்படும் சிறப்பு ரயில் அதேநாள் மாலை 03:15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்றடையும்.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

இந்த ரயில் செங்கல்பட்டு விழுப்புரம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி இராஜபாளையம் சங்கரன்கோவில் என குறைவான நிறுத்தங்களுடன் அதிவேக சிறப்பு ரயில் சேவையாக இயங்கும்.

இந்த ரயிலில் மொத்தம் 23 பெட்டி உள்ளது . இந்த ரயிலில் இரண்டு ஏசி மூன்றடுக்கு பெட்டிகள் ஒரு ஏசி சேர் கார் மற்றும் 14 சேர்க்கார் பெட்டிகள் இரண்டு படுக்கை வசதி பெட்டிகள் நான்கு பொது பெட்டிகள் இரு எஸ்எல் ஆர் உடன் இயங்கும். இந்த ரயில் தென்காசி வந்ததும் செங்கோட்டைக்கு நிறுத்தத்திற்கு சென்று தண்ணீர் நிரப்பி மறுபடியும் செங்கோட்டையிலிருந்து தென்காசி வந்து தாம்பரத்திற்கு புறப்படும் என தெரிகிறது இந்த வண்டி செங்கோட்டை வரை செல்லும் முன் பதிவு பொருத்து நிறுத்தம் கூடுமாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.