ஐபோன் 13 ப்ரோ மாடல் 15 வினாடியில் ஹேக்.. 3 லட்சம் டாலர் பரிசு வாங்கிய ஹேக்கர்கள்!

hackers
hackers

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மாடல் மொபைல் போன், ஒரு வினாடியில் ஹேக் செய்யப்பட்டு “சாதனை ” படைக்கப்பட்டுள்ளது

தனியுரிமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாதுகாப்பு இருக்குமென்று ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு ஒரு பெயர் உள்ளது. எனவே தான் பிரபலங்கள் ஐபோன் பயன்படுத்துவது வழக்கம்.

ஆனால் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப எத்தனை தொழில் நுட்பங்கள் வந்தாலும் அதையும் திருட்டு வேலை செய்வதற்கு ஹேக்கர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்படித்தான் சீன நாட்டில் சேர்ந்த ஹேக்கர்கள் பங்கேற்ற ஒரு போட்டி செங்டு நகரில் வைத்து நடைபெற்றுள்ளது. அதில் ஹேக்கர்கள் தங்கள் திருட்டு திறமையை காண்பித்துள்ளனர்.

ஐஓஎஸ் 15.0.2 சாப்ட்வேர் மூலமாக செயல்படக்கூடிய சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 ப்ரோ வகை மாடல் போனை வெறும் ஒரு வினாடிகளுக்குள் ஹேக் செய்துள்ளனர் ஹேக்கர்கள். ஐபோன் மொபைல் போனிலேயே இதுதான் லேட்டஸ்ட் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

டியான்ஃபு கோப்பை என்ற பெயரில் இது போல ஹேக்கர்கள் பங்கேற்கும் போட்டிக்கு சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உபகரணங்களை இந்த நிகழ்ச்சியின்போது ஹேக்கர்கள் ஹேக் செய்து தங்கள் திறமையை வெளிக்காட்டினார்கள்.

குன்லுன் டீம், ஐபோன் 13 ப்ரோ வகை செல்போனை நேரலையில் மேடையில் வைத்து 15 வினாடிகளுக்குள் ஹேக் செய்து காட்டியுள்ளது. ஐபோனில் உள்ள சபாரி வெப் பிரவுசர் ரிமோட் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக இவ்வாறு லாக் செய்யப்பட்ட செல்போனுக்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது இந்தக் குழு.

இதேபோன்று, டீம் பங்கு என்ற அணி, ஐஓஎஸ் 15 சாப்ட்வேர் மூலமாக செயல்படும் ஐபோன் 13 ப்ரோ போனை, தொலைதூரத்திலிருந்து ஹேக் செய்து முதல் பரிசான 3 லட்சம் அமெரிக்க டாலர்களை வென்றுள்ளன.

ஏனென்றால் முதலில் ஹேக் செய்தவர்கள் 15 வினாடிகள் எடுத்துக் கொண்டனர் ஆனால் இந்த குழு வெறும் ஒரு வினாடியில் அதை செய்துள்ளது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

நம்பர்களை தாண்டி, பச்சை மற்றும் சிவப்பு ஆகிய பட்டன்களை மட்டுமே பயன்படுத்த தேவையுள்ள நமது பழைய நோக்கியா மாடல் போன்களை வைத்துக் கொள்வது தான் உங்களது ரகசியங்களை பாதுகாக்க இந்த உலகத்தில் ஒரே வழி போல.

எப்போது இணைய தளம் என்ற ஒன்று உங்கள் செல்போனில் இருக்கிறதோ அப்போது முதல் உங்களது சொந்த தகவல்கள் ஆபத்தில் இருக்கின்றன என்று அர்த்தம்.

இணையதள பண பரிமாற்றங்கள் எப்போதுமே ஆபத்தானவை என்பதற்கு இந்த சம்பவம் போன்றவை ஒரு எச்சரிக்கை மணியாக தான் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories