janagai mariamman adipooram - 2026

ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

சற்றுமுன் ஆன்மிகச் செய்திகள் மதுரை லைஃப் ஸ்டைல்
janagai mariamman adipooram - 2026

சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்புரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வளையல்கள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவிலுக்கு பெண்களுக்கு கோவில் சார்பில் வளையல்கள் வழங்கப்பட்டது.

முன்னதாகஆடிப்பூர நாளை முன்னிட்டு, ஜெனகை மாரியம்மனுக்கு பல்வேறு வகையான மங்கள திரவியங்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகத்தைத் தொடர்ந்து, ஆடிப்பூரத்தின் சிறப்பம்சமாக அம்மனுக்கு வளையல் மாலை சாற்றப்பட்டது. சர்வ அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது செயல் அலுவலர் ராஜா பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா சுபா ஸ்ரீ ஆகியோர் ஆடிபுர விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதேபோல் குருவித்துறை பேச்சி அம்மன் கோவில் திருவேடகம் துர்க்கை அம்மன் கோவில் மேலக்கால் காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது ஏராளமான பொதுமக்கள் பெண்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.