80th independence day speech by modiji - 2026

2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இந்தியா Featured சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
80th independence day speech by modiji - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 15.08.2026 அன்று, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.
தமிழாக்கம் : ஆர். சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, இன்று நாமனைவரும், 80ஆவது, சுதந்திர, திருநாளைக் கொண்டாடுகிறோம்.  இன்று, அனைத்து இதயங்களின் துடிப்பு, வந்தே மாதரம் முழக்கத்தில் எதிரொலிக்கின்றது.  இன்று, அனைத்து இல்லங்களிலும் மூவண்ணக்கொடி.  அனைத்து மனதிலும் மூவண்ணக்கொடி.  மேலும் தேசம், உற்சாகம் மற்றும் ஊக்கத்தோடு, புதிய உறுதிப்பாடுகளைத் தாங்கி, இன்று, முன்னேறிக் கொண்டிருக்கிறது.  உங்களனைவருக்கும், சுதந்திரத் திருநாளின், பலப்பல நல்வாழ்த்துக்கள்.  தேசம் இன்று, மகத்தான மைந்தர்களை நினைவில் கொள்கிறது, அவர்கள் தாம், தேசத்தின் சுதந்திரத்திற்காக, தியாகம், உயிர்த்தியாகம் புரிந்திருக்கிறார்கள், தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.  தங்களுடைய தவம், தியாகம் மற்றும் உயிர்த்தியாகம் வாயிலாக, சுதந்திரத்தின் ஒரே இலக்கை மனதில் தாங்கி, தங்களுடைய மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்திருக்கிறார்கள்.  வணக்கத்திற்குரிய அண்ணல் அவர்கள், அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்கள், உயிர்த்தியாகத்தின் மகத்தான பாரம்பரியத்தை, உயிர்த்தெழச் செய்யும், மகத்தான புரட்சியாளர்களுக்கு, இன்று நான் சிரத்தையுடனனான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.  இன்று இந்த நிகழ்ச்சியிலே, பங்கெடுத்துக் கொண்டிருக்கிற, அனைவருக்கும் இது ஒரு வரலாற்றுப்பூர்வமான கணமாகும்.  சுதந்திரத்துக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று, செங்கோட்டையிலிருந்து முதன்முறையாக, வந்தே மாதரம் எதிரொலிக்கின்றது.  இன்று தேசத்தின் குடிமக்கள், வந்தே மாதரத்தின் 150ஆவது ஆண்டினைக் கொண்டாடும் வேளையில், இதைவிடச் சிறப்பான, சந்தர்ப்பம் வேறு என்னவாக இருக்க முடியும்? 

எனதருமை நாட்டுமக்களே, கடந்த நாட்களிலே, தேசத்தின் சில பாகங்களிலே, வெள்ளத்தின் சீற்றம் காணப்பட்டது, நிலநடுக்கத்தின் பயங்கரத்தைக் காண முடிந்தது, பல குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாயின.  அவர்களின் துக்கம்-துயரத்தை, நாம் நன்றாகவே, அனுபவித்தோம்.  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான் ஆறுதல் அளிக்கிறேன், அதாவது நாங்கள், மற்றும் தேசம் முழுவதும், அவர்களுக்குத் துணை நிற்கிறது. 

எனதருமை நாட்டுமக்களே, எந்த ஒரு தேசமும், எப்போது மகோன்னதமாக ஆகிறது என்றால், தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றும் போதுதான்.  அப்போது, தனது கனவுகள், தனது உறுதிப்பாடுகள், மேலும் தனது வல்லமையின் துணையாலே, முன்னேறுகிறது.  எனது நாட்டுமக்களே, நாம் சிறிய கனவுகளால் நிறைவடையப் போகிறவர்கள் இல்லை.  நாம், பெரிய கனவுகள், ஏனென்றால் பெரிய கனவுகள், நமது எண்ணப்பாட்டையும் விரிவடையச் செய்கிறது.  நமது எண்ணங்களின் வீச்சினை ஆழமாக ஆக்கவும் செய்கிறது.  நமது உறுதிப்பாடுகள், உறுதியானவையாக இருக்க வேண்டும்.  உறுதிப்பாடுகள் உறுதியானவையாக இருக்கும் போது, இடர்ப்பாடுகளிலிருந்து, சங்கடங்களுக்கு இடையிலிருந்து, தேசத்தை மீட்டெடுக்க, வல்லமை  தானே வெளிப்பட்டு ஒளிர்கிறது. 

எனக்கு உவப்பான நாட்டுமக்களே, நமது உறுதிப்பாடுகளும் கூட, பெரியவையாக இருக்க வேண்டும்.  ஏனென்றால், கனவுகள் உயர்வானவையாக இருக்கும் போது, உறுதிப்பாடுகள் உயர்ந்து இருக்கும் போது, அப்போது நமது வல்லமையின் வீச்சும் பலப்படுகிறது.  நமது முயற்சிகளின், உயரங்களும் ஓங்குகிறது.  அப்போது தான், நம்மால், கனவுகளை மெய்ப்பிக்கச் செய்ய முடியும். 

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இன்று பாரதமும் கூட, ஒரு மிகப்பெரிய கனவினைக் கண்டிருக்கிறது.  திடமான உறுதிப்பாட்டுடன் இதைக் கண்டது.  புதிய உயரங்களை முத்தமிடப் பார்த்திருக்கிறது.  அந்தக் கனவு என்ன தெரியுமா?  சுதந்திரத்தின் 100 ஆண்டுகள் ஆகும் வேளையிலே, 2047ஆம் ஆண்டினிலே, நாம், வளர்ந்த பாரதம், படைத்தே தீருவோம்.  140 கோடி நாட்டுமக்களின் வல்லமையின் துணையாலே, இந்த இலட்சியத்தை நாம் அடைந்தேயாக வேண்டும்.  மேலும் உலகத்தின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட தேசம், வளர்ந்த நாடாகும் உறுதிப்பாட்டை மேற்கொள்ளும் போது, அப்போது உலகின் பார்வையிலும் கூட, நமது சாகஸத்தை அடையாளப்படுத்திக் காட்டுகிறது.  உலகம், நம்மைக் காணும் கண்ணோட்டத்திலே மாறுதல் ஏற்படும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. 

எனதருமை நாட்டுமக்களே, இதை நான் சும்மா ஒன்றும் சொல்லவில்லை.  கடந்த 12 ஆண்டுகளிலே, தேசத்தின் கோடானுகோடி மக்கள், தலித்துக்களோ பாத்க்கப்பட்டவர்களோ பிற்படுத்தப்பட்டவர்களோ பழங்குடியினத்தவரோ, கிராமத்தில் வசிப்பவரோ நகரில் வசிப்பவரோ, ஏழைகளோ, மத்தியத்தட்டவரோ, இளைஞரோ முதியவரோ பெண்களோ ஆடவர்களோ, வடக்கோ தெற்கோ மேற்கோ கிழக்கோ, அனைவரும், கடந்த 12 ஆண்டுகளிலே, ஒரு உறுதிப்பாட்டுடனே, அர்ப்பணிப்பு உணர்வோடு, தேசத்தை புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்வதில், அனைத்துவிதமான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.  அவர்களின் முயற்சிகளை மிகுந்த மரியாதையுடன், நான் ஏற்றுக் கொள்கிறேன்.  அதன் விளைவாகவே, இத்தனை குறைவான நேரத்திலே, 25 கோடி நாட்டுமக்கள், ஏழ்மையைத் தோற்கடித்து, ஏழ்மையிலிருந்து வெளிவந்திருக்கிறார்கள்.  இந்த நாட்டுமக்களின் முயற்சியின் விளைவாகவே, நாம், ஒருகாலத்தில் கடைநிலை 5 நாடுகளில் இருந்தது மாறி, 12 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, நாம், ஒரு பெரிய பொருளாதார சக்தியாக விரைவாக முன்னேறும் பொருளாதாரமாக ஆகியிருக்கிறோம். 

நண்பர்களே, தேசம் விடுதலை அடைந்தது, பல கனவுகளைத் தாங்கி விடுதலை அடைந்தது.  ஆனால், நாம் வேகத்தை எட்ட முடியவில்லை.  விரைவை அடைய முடியவில்லை.  ஆகட்டும் நடக்கட்டும், பார்த்துக் கொள்ளலாம் பார்க்கலாம், இதில் ஊறிப்போனோம்.  2014ஆம் ஆண்டு வந்த போது, உலகம் முழுவதும், நம்மை கடைநிலை 5 நாடுகளிலே, பிடித்துத் தள்ளி விட்டன.  அந்த வேளையிலே, கடந்த 12 ஆண்டுகளிலே, பாரதம், ஒரு புதிய விரைவைத் தனதாக்கிக் கொண்டது.  விரைவு கதியினிலே, நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.  மேலும் தேசத்தின் மக்களின் உறுதிப்பாடு, இனி,  கோடி நாட்டுமக்களின் வல்லமை பராக்கிரமத்தைத் தடுப்பது என்பது, இயலாத காரியம். 

அன்பான நாட்டுமக்களே, கடந்த 12 ஆண்டுகளிலே, பாதுகாப்புப் பொருட்களின் உற்பத்தி கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது.  காதி மற்றும் கிராமப் பொருட்களின், உற்பத்தி, கிட்டத்தட்ட 5 மடங்காகி இருக்கிறது.  மின்னணுப் பொருட்களின் தயாரிப்பிலே, கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகரிப்பு.  நவீன ரயில் கோச்சுகளின் அமைப்பு, 21 மடங்கு அதிகரித்திருக்கிறது.  மொபைல் பேசிகளின் உற்பத்தி, 33 மடங்கு அதிகரிப்பு, இது மட்டுமல்ல, நவீன காலத்தைக் கணக்கில் கொண்டு, டிஜிட்டல் மற்றும் புதுமைகள் படைக்கும் வகையிலும், நாம் நமது அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.  இணையப் பயன்பாட்டாளர்கள், இணய கன்ச்யூமர்கள், கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்திருக்கிறார்கள்.  காப்புரிமை வழங்கல் எண்ணிக்கை, 4 மடங்கு அதிகரித்திருக்கிறது.  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, 100 மடங்கு அதிகரிப்பு.  சாதாரண மனிதர்களின் வசதிகள் என்பதிலும் கூட, நாங்கள் அதே முனைப்போது பணியாற்றினோம். 

ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக, 15 மடங்கு அதிக வேகத்தோடு, நாங்கள், குழாய்வழி குடிநீர் இணைப்புகளை ஏற்படுத்தினோம்.  ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக, 6 மடங்கு அதிக விரைவாக மக்களுக்கு, எரிவாயு இணைப்புகளை அளித்தோம்.  ஒவ்வோர் ஆண்டும் 4  மடங்கு அதிக வேகத்தில், ஏழைகளுக்கு கழிப்பறை அமைக்கும் பணியைப் புரிந்திருக்கிறோம்.  ஒவ்வொர் ஆண்டும் 3  மடங்கு அதிக வேகமாக, ஏழைகளுக்கு வீடு வழங்கும் பணியை ஆற்றியிருக்கிறோம்.  தேசத்திலே, ஆளுகையிலே பெரிய மாற்றம் ஏற்பட்டது.  ஆயிரக்கணான எண்ணிக்கையிலே, நாங்கள் ஒப்புதல்களுக்கு முடிவு கட்டினோம்.  நூற்றுக்கணக்கான் எண்ணிக்கையிலே, பழைய சட்டங்களுக்கு முடிவு கண்டோம். 

கடந்த நூற்றாண்டின் சட்டங்களைக் கொண்டு, 21ஆம் நூற்றாண்டில் முன்னேற்றம் காண முடியாது.  நாங்கள் நவீன கட்டமைப்புக்காக, மெட்ரோவின் விரிவாக்கத்தைச் செய்தோம்.  நாங்கள் பொதுப் போக்குவரத்து அமைப்புகளுக்கு பலமளித்தோம்.  எந்த வேகத்திலே வேலை, எந்த அளவுக்கு வேலை என்றால், இவையனைத்தும், இந்த வேகம், இந்த விரிவு, இந்தச் சாதனை, சுதந்திரத்திற்குப் பிறகு, முதன்முறையாக, கடந்த பத்தாண்டுகளிலே பார்க்க முடிந்தது.  மேலும் இத்தனை, சாதனைகள் நம்முன் இருக்கையிலே, இத்தனை வேகத்தைக் காணுகையில், நாட்டுமக்களின் வல்லமை, ஒவ்வொரு கணமும் வெளிப்படுகிறது.  அந்த வகையிலே, 2047ஆம் ஆண்டிலே, வளர்ந்த நாடாக ஆகும் உறுதிப்பாடு, நிறைவேறாமல் இருக்க முடியாது.  இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும், என்ன சான்று பகர்கிறது என்றால், அதாவது நாம், முன்னேறிக் கொண்டிருக்கிறோம். 

எனதருமை நாட்டுமக்களே, ஆனால் இதற்காக, தன்னம்பிக்கை அவசியமாகிறது.  சுயமரியாதை அவசியமாகிறது.  மேலும் இதோடு கூடவே, தற்சார்பு பாரதம் ஆவதும் அவசியமாகின்றது.  அந்த வகையிலே, கடந்த ஆண்டுகளிலே, நமது நம்பிக்கை என்னவாக இருந்தது என்றால், அதாவது பாரதத்தை, நாம் மற்ற நாடுகளை, சார்ந்து வாழச் செய்ய முடியாது.  நாம் தற்சார்புடையவர்களாக ஆக வேண்டும்.  உலகத்திலே, பல விஷயங்கள் கிடைக்கின்றன, மலிவாகக் கிடைக்கின்றன, விரைவாகக் கிடைக்கலாம், ஆனால் இவற்றால், நமது வல்லமையை வளர்த்தெடுக்க முடியாது.  இது நமது வல்லமையின் உரைகல்லாகவும் இருக்க முடியாது.  அந்த வகையிலே, நாமும் நமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  நமது நலன்களின் பாதுகாப்பை, நாமே தான் செய்து கொள்ள வேண்டும்.  அந்த வகையிலே, தற்சார்பு பாரதம் என்ற மனவுறுதியை, மிகவும் உறுதிப்பாட்டோடு, நாம் தாங்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.  இந்தியாவில் தயாரிப்போம், சுதேசி, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு, இந்த அனைத்துத் துறைகளிலும், இன்று, அனைத்து இந்தியர்களின் மனமும், இணைந்து கொண்டிருக்கிறது.

என் கனிவான நாட்டுமக்களே, நான் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டை அளிக்கிறேன் குறைகடத்திகள்.  தேசம் சுதந்திரம் அடைந்த பிறகு, உலகிலே குறைகடத்திகள் பற்றிப் பேசப்பட்டது.  நமது நாட்டிலும் கூட பேசப்பட்டது.  ஆனால் குறைக்கடத்திகள் விஷயத்தில் பெரிய திட்டம், முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.  மேலும், இன்று நிலைமை என்ன?  இன்றைய டிஜிட்டல் உலகினிலே, இன்றைய தொழில்நுட்பத்தினிலே, சிப்பின் மகத்துவத்தை நாம் அறிந்திருக்கிறோம்.  எந்த ஒரு மின்னணுப் பொருளாகட்டும், நமது மருத்துக் கருவியாகட்டும், நமது போக்குவரத்துப் பாதையாகட்டும், அனைத்திலுமே, சிப் மிக அவசியமானது.  மேலும் இந்த, இந்த சிப் இல்லாமல், உலகம் தடைப்பட்டுப் போகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.  அந்த வகையிலே, பாரதமானது, தற்சார்பை எட்டும் திசையினிலே, தனது குறைக்கடத்தி ஆலை பெரிய ஆலை, 3 குறைக்கடத்தி ஆலைகளை, தொடங்கி இருக்கிறது.  என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால், அங்கே தயாராகும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படவும் தொடங்கிவிட்டன.  நான் நாட்டுமக்களிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன், வரவிருக்கின்ற 7-8 ஆண்டுகளிலே, மேலும், 5-7 அல்லது 8, குறைக்கடத்தி ஆலைகள், மிகவும் விரைவாகத் தொடங்கப்பட இருக்கின்றன.  இந்த தற்சார்பு பாரதம், வளர்ந்த பாரதத்தை நோக்கிய பயணத்திலே, நமக்கு பாதையை அளிக்கும்.

என்மனம் நிறை நாட்டுமக்களே, இதே போன்ற விவாதம், முக்கியமான கனிமங்கள் தொடர்பாகவும் இருக்கிறது.  மொத்த தொழில்நுட்பமும், முக்கியமான கனிமங்களையே சார்ந்திருக்கிறது.  பாரதம், இதிலும் கூட, தன்னைத் தானே, பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கிறது.  இந்த முக்கியமான கனிமங்கள் என்ற இலட்சியம் மெய்ப்பட, தேசிய முக்கிய கனிமங்களை, நாங்கள் அடையாளப்படுத்தியிருக்கிறோம்.  அண்மையிலே, முக்கியமான கனிமங்களின் இடைவழியை, நாங்கள் அறிவித்திருக்கிறோம்.  பல தேசங்களோடு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.  உலகின் பல நாடுகள், இப்போது இந்த  முக்கியமான கனிமங்கள் திசையிலே, பாரதத்தின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. 

எனதருமை நாட்டுமக்களே, அது குறைகடத்திகளாகட்டும், முக்கியமான கனிமங்களாகட்டும், இதைப் போலவே, எந்தத் தொழில்நுட்பத்தை நோக்கி நாம் பயணிக்கிறோமோ உலகம் பயணிக்கிறதோ, அதில் எரிசக்தியின் மகத்துவம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.  நாம் எரிசக்தி இல்லாமலே, இந்த உலகத்தை இயங்கச் செய்ய முடியாது.  அந்த வகையிலே, நாம், சிப்பாகட்டும், ஏஐ ஆகட்டும், தரவு மையங்களாகட்டும், நாம், மிகப்பெரிய அளவிலே எரிசக்தியை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.  எரிசக்திப் பாதுகாப்பு, இது நமது காலத்தின் தேவையாகிறது.  அந்த வகையிலே, நாங்கள் தொடக்கத்திலிருந்தே, இந்தத் திசையினிலே ஒன்றன்பின் ஒன்றாக, பலமான அடிகளை முன்வைத்திருக்கிறோம். 

எரிசக்திப் பாதுகாப்பின் மிகப்பெரியதொரு ஊடகம், அது அணுசக்தி ஆற்றல்.  ந்யூக்லியர் எனர்ஜி.  நாங்கள் நாடாளுமன்றத்தில் அமைதிச் சட்டத்தை இயற்றி, ஒரு புதிய இலக்கை நோக்கிச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.  2047ஆம் ஆண்டுக்குள்ளாக, நாம், 100 கிகாவாட், அணுசக்தி ஆற்றல் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம்.  இந்த தசாப்தத்திலே, நாம், 5 புதிய அணுசக்தி ஆலைகளை, தொடங்கும் இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம்.  இந்த ஆண்டிலே, பாரதம், ஃபாஸ்ட் ப்ரீடர் அணுசக்தி தொழில்நுட்பத்திலே, வல்லமையை அடைந்து, ஒரு முக்கிய கட்டத்தைக் கடந்திருக்கிறோம்.  இதன் காரணமாக, அணுசக்தி ஆற்றலிலே, தற்சார்பை நோக்கிய திசையினிலே, நாம் ஒரு மிகப்பெரிய, வெற்றியின், படியை வைத்திருக்கிறோம். 

பிரதமர் உரையின் தொடர்ச்சி… அடுத்த செய்திக் கட்டுரையில் – சுட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.