பஞ்சாங்கம் ஆகஸ்டு 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்  – ஆகஸ்டு 20

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி 04
இங்கிலீஷ்: 20 August 2018
திங்கள்கிழமை
நவமி காலை 7.29 மணி வரை. பின் தசமி
கேட்டை இரவு 1.51 மணி வரை. பின் மூலம்
வைத்ருதி நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: –
அகசு: 30.48
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
சிம்ம லக்ன இருப்பு: 8.01
சூர்ய உதயம்: 6.07

ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
மதுரை ஸ்ரீசொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை – விருஷபாரூட தரிசனம்
திதி: தசமி
சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

 

இன்றைய ராசிபலன்  –  ஆகஸ்டு 20

மேஷம்
இன்று கலைஞர்களுக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக அமையும். எதிலும் சற்று கவனமுடன் நடந்துகொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்
இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் வெகுசிறப்பாக இருக்கும். இதுவரை இருந்துவந்த உடல்நலக் கோளாறுகள் யாவும் படிப்படியாக விலகும். மனைவி, பிள்ளைகளும் சுபிட்சமாக அமைவதால் மருத்துவச் செலவுகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்
இன்று எல்லாப் பணிகளிலும் புதுத்தெம்புடனும், பொலிவுடனும் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பயணங்களும் அதன்மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம்
இன்று குடும்ப வாழ்வில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கடந்தகால சோதனைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொருளாதாரநிலையும் மிகச்சிறப்பாக அமைவதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்
இன்று வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி நட்பு மலரும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கன்னி
இன்று கொடுக்கல்-வாங்கல் சுமூகமாக நடைபெறும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தை அடையமுடியும். கொடுக்கல்-வாங்கலிலும் சரளமான நிலை ஏற்பட்டு தாராளமான பணவரவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்
இன்று உங்களுக்கிருந்த வம்பு வழக்குகள் விலகி சாதகப்பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் உதவிகரமாக இருக்கும். தொழில், வியாபாரம் அபிவிருத்தி அடையும். கேட்ட இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்
இன்று தொழில், வியாபாரத்தில் இதுநாள்வரை நிலவிய நலிவுகள் மறைந்து ஏற்றமான பலனை ஏற்படுத்தும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டி பொறாமைகளும் விலகும். கூட்டுத்தொழிலிலும் கூட்டாளிகளின் ஒற்று மையான செயல்பாட்டால் பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு
இன்று வேலையாட்களாலும் பணவரவுகளும் ஆர்டர் களும் குவியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளும் எதிர் பாராத ஏற்றத்தை ஏற்படுத்தும். புதிய கிளைகளை நிறுவும் நோக்கம் நிறைவேறும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

மகரம்
இன்று உத்தியோகம் நல்லபடியாக இருக்கும். சிலருக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உடன் பிறந்தோர் உறு துணையாக இருப்பர். எளிதில் கோபப்படக்கூடிய நபர்கள் யாரிடமும் கவனமாக பேசுவது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புக்களும் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்
இன்று வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களும் படிப்பிற்கேற்ப சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பெண்கள் மனதுக்கு சந்தோசப் படக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

 

 

 

 

 

 

 

 

 

 

இன்றைய ஆன்மிக கேள்வி பதில்….

ஆன்மிக கேள்வி-பதில்: ராம நவமி நாளில் சீதா கல்யாணம் நடத்துகிறோமே! அது சரிதானா?