ஊடகத்தினரை கடுமையாக திட்டிய மத்திய அமைச்சர் !

சற்றுமுன்
 
மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங்.பத்திரிகையாளர்களை அநாகரீகமான முறையில் Prestitutes எனும் மிக கடுமையான வார்த்தையை பயன்படுத்தி மோசமாக விமர்சித்து என ட்வீட் செய்துள்ளார்.மற்றொரு பதிவில், நண்பர்களே இதற்கு தகுந்த பதிலடி கொடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த விஜய் பால் தோமர் என்பவர் அமித் ஷாவின் காலில் விழுந்து ஆசி பெற்றாராம்.
 
அப்போது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங்தான் அமித் ஷா காலில் விழுந்து வணங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக வி.கே.சிங் பயன்படுத்தியுள்ள prestitutes என்ற வார்த்தை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள வி.கே.சிங், ஒருசார்பாக செயல்படும் பத்திரிக்கையாளர்களால் இத்தகைய குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது என்றும் அதில் கூறியுள்ளார்
ராணுவ தலைமைத் தளபதியாக இருந்தபோது, பொய்யான சான்றிதழ்கள் கொடுத்து உண்மையான வயதை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் மன்மோகன் சிங் அரசுடன் மோதி, உச்ச நீதிமன்றத்தில் குட்டுப்பட்டவர் விகே சிங். என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா காலில் விழுந்து வழங்குவது போன்ற ஒரு காணொளி வெளியாகியுள்ளதை வி.கே.சிங் வன்மையாக மறுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.