
தமிழில் / குரல் : ஆர். சுதர்ஸன்
எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி: காக்காய் கூட்டத்தைக் கதறவிட்ட அமித் ஷா அவர்கள்
அவைத்தலைவர் அவர்களே, 2014க்குப் பிறகு, தோற்பதே வாடிக்கை ஆகிப்போனது. தோல்வியே வழக்கமாகிப் போன பிறகு, ஆமாமாம் ஜெயித்தீர்கள். ஆனால் தோற்பதும் வாடிக்கையாகியது அல்லவா? அவை முன்னவரே, தோல்வி வாடிக்கையாகிப் போன பிறகு, இவர்கள் முதன்மையான விஷயமாக, ஈவிஎம்மை குறிவைத்தார்கள்.
இன்று உங்கள் வாயிலாக அவைக்கும் அவை வாயிலாக நாட்டுமக்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஈவிஎம்மை யார் நாட்டுக்குக் கொண்டு வந்தார்கள்? அவைத்தலைவர் அவர்களே யார் அறிமுகப்படுத்தினார்கள்? மார்ச் மாதம் 15ஆம் தேதி 1989இலே, ராஜீவ் காந்தி இந்த நாட்டின் பிரதமராக இருந்த போது, அப்போது ஈவிஎம்மை அறிமுகப்படுத்தும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இப்போது ராஜீவ் காந்தியின் ஈவிஎம் சட்டத்திருத்தத்தையும் நீங்கள் எதிர்க்கிறீர்களே!! அவைத்தலைவர் அவர்களே, இதற்குப் பிறகு, அட கேளுங்கய்யா என்ன செயல்பாடு நடந்தது என்று.
இதற்குப் பிறகும் கூட, ஈவிஎம்முக்கு எதிராக, யார் மனு கொடுத்தார்கள்? இந்த தேசத்தின் உச்சபட்ச நீதிமன்றத்தின் 5 நீதிமான்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஈவிஎம்மின் சட்டத்திருத்தத்தை, 2002ஆம் ஆண்டிலே, உகந்தது என்று கூறினார்கள். ராஜீவ் காந்தியையும் ஏற்றுக் கொள்ளவில்லை, உசசநீதிமன்றத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை, பிறகு 98ஆம் ஆண்டிலே, மத்திய பிரதேசம் ராஜஸ்தானம் தில்லி, இவற்றிலே வெறும் 16, 16 சட்டமன்றாத் தொகுதிகளில் மட்டும் பரிசோதிக்கப்பட்டது. எத்தனை கவனமாக செய்யப்பட்டது, இதையும் முழுவதும் தெரிவிக்கிறேன். உட்காருங்கள். இதிலே எத்தனை கவனமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது பாருங்கள்!!
மத்திய பிரதேசம் ராஜஸ்தானம் மற்றும் தில்லி, இந்த மாநிலங்களின் வெறும் 16 சட்டமன்றத் தொகுதிகளில், இது சோதனை செய்யப்பட்டது. அனைத்துவித சோதனைகளுக்குப் பிறகு, ஈவிஎம்மின் பயன்பாடு, முதன்முறையாக, ஒட்டுமொத்த தேசத்திலும், 2004ஆம் ஆண்டிலே செய்யப்பட்டது. 2004க்கு மகத்துவம் உண்டு மன்றத்தலைவரே. முதன்முறையாக 2004இலே நடந்தது. மொத்த மக்களவைத் தேர்தலில் எங்கள் ஆட்சிக்காலத்தில், ஈவிஎம் பயன்படுத்தப்பட்டது.
ராஜீவ் காந்தி கொண்டு வந்தார்…. அப்போதிலிருந்து 2004 வரை, மேலும் 2004 தேர்தலிலே யார் ஜெயித்தார்கள் நண்பர்களே? அவர்கள் ஜெயித்தார்கள். அந்த நேரத்தில் ஈவிஎம் பற்றிய விவாதம், இல்லை. 2009இலே, 2009இலே தேர்தல் நடந்தது. முழுவதும் ஈவிஎம் மூலம் நடந்தது. இவர்கள் ஜெயித்தார்கள், மௌனிகளானார்கள். 2014இலே நாங்கள் ஜெயித்தவுடன், காகாகாகாகாகாகா என்று கூவுகிறார்கள். மன்றத் தலைவரே, இதெல்லாம் என்ன?
அதாவது, சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள் இயந்திரத்தைக் கொண்டு வந்தீர்கள், தேர்தலை இயந்தியத்திலே முதலில் ஜெயித்தீர்கள், 2ஆவது தேர்தலிலும் ஜெயித்தீர்கள், ஜாலியாக பத்தாண்டுகள் ஆட்சி செய்தீர்கள், ஆனால் தோற்ற பிறகு ஒப்பாரி வைக்கிறீர்கள்.
ஊடுருவல்காரர்களை விரட்ட வேண்டும் என்றால் காங்கிரஸ் ஏன் ஓடுகிறது? வினா எழுப்புகிறார் அமித் ஷா அவர்கள்
நேற்று இரவு நடு இரவிலே, நேற்று நள்ளிரவிலே நான் என் உரையைத் தயாரித்துக் கொண்டிருந்தேன். என்னை நானே கேட்டுக் கொண்டேன். இத்தனை தெளிவாக இருக்கும் போது ஏன் இதை பிரச்சனையாக்குகிறார்கள்? என் புரிதலுக்கு இத்தனை தெளிவாக இருக்கும் போது அவர்களும் படித்திருப்பார்களே!! இந்தப் பிரச்சனை ஏன் எழுகிறது? அடிப்படை பிரச்சனையே, ஊடுறுவல்காரர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காமல் வைத்திருப்பது.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இவர்கள் 200 முறை வெளிநடப்பு செய்தாலும் கூட, நாங்கள் ஒரு ஊடுறுவல்காரரைக்கூட இந்த நாட்டில் இருக்க அனுமதிக்க மாட்டோம். இது எங்கள் எண்டியேவின் கொள்கை அவைத்தலைவர் அவர்களே. டிடெக்ட், அதாவது தேடுங்கள். டெலீட் செய்யுங்கள். வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குங்கள். மேலும் அவர்களை டிபோர்ட். நாங்கள் அரசியல்சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, டிடெக்ட் டிலீட் மற்றும் டிபோர்ட், இதை நிறைவேற்றுவோம். இவர்கள் அவையை விட்டு ஏன் ஓடிப் போனார்கள்?
நான் இவர்களைப் பற்றி, ஒன்றுமே பேசவில்லையே!! காங்கிரஸ் கட்சி பற்றியும் எதையும் பேசவில்லையே!! நான் பேசியதெல்லாம் ஊடுறுவல்காரர்களை தேசத்திலிருந்து, வெளியேற்றுவது பற்றி. அட இவர்கள் வெளியேறி விட்டார்களே ஐயா!! ஒருவேளை, நான் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்தால், திரு ஜவஹர்லால் நேரு பற்றி இந்திரா அவர்கள் பற்றி இவருடைய தந்தை பற்றி சோனியா அவர்கள் பற்றி, அப்போது ஓடியிருந்தால் புரிந்து கொள்ளலாம். இவர்கள் ஊடுறுவல்காரர்களுக்காக ஓடியிருக்கிறார்கள் ஏனென்றால், பாருங்கள் எங்களுடைய கொள்கை என்னவென்றால் டிடெக்ட் டிலீட் மற்றும் டிபோர்ட். இவர்களுடைய கொள்கை என்ன?
ஊடுருவலை இயல்பாக்கி விடு. அதன் பிறகு அங்கீகாரம் அளித்துவிடு. தேர்தலிலே, வாக்காளர் பட்டியலிலே இவர்களைச் சேர்த்து, வாக்குவங்கியாக்கி விடு. ஆனால் ஐயா நீண்டகாலம் இதை அனுமதிக்க முடியாது. நான் மனப்பூர்வமாக நம்புகிறேன் என் கட்சியின் கொள்கையும் இதுதான். ஆனால் நாம் நம்புகிறேன், மக்கட்தொகையிலே இத்தனை பெரிய மாற்றம், தேசத்திற்கு மிகப்பெரிய அபாயம். இந்த தேசம், ஒருமுறை, மக்கட்தொகை அடிப்படையில் பிளவுபட்டு விட்டது.
வரவிருக்கின்ற தலைமுறை, இந்த தேசத்திலும் ஒரு பிளவை, எதிர்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. ஆகையாலே, மிக முக்கியமானது என்னவென்றால், இந்த தேசத்திலே, ஊடுருவலை தடுத்தே ஆக வேண்டும்.

