2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Published:

80th independence day speech by modiji - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 15.08.2026 அன்று, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.
தமிழாக்கம் : ஆர். சுதர்ஸன்

முந்தைய செய்திக் கட்டுரையின் தொடர்ச்சி… (4)

எனதருமை நாட்டுமக்களே, நான் வளர்ச்சியடைந்த பாரதம் பற்றிப் பேசுகையிலே, தேசத்தை விரைவு கதியில் முன்னேற்றுவதைப் பற்றிப் பேசுகையிலே, இதன் மிகப்பெரிய பயனாளிகள் யார்?  இந்த முயற்சிகளை மிகப்பெரிய அளவில் சாதிப்பவர் யார்?   சாதிப்பவர்கள் என்றால் என் தேசத்தின் இளைஞர்கள் தாம்.  அவர்கள் தேசத்தின் இளைஞர் சக்தி தாம்.  வளர்ச்சியடைந்த பாரதம் பயணத்தில் இளைஞர்களின் பங்களிப்பு பெரியது.  இது மட்டுமல்ல.  வளர்ந்த பாரதத்தின், மிகப்பெரிய பயனாளியும் கூட, என் தேசத்தின் இளைஞர்கள்  தாம்.  அந்த வகையிலே, நாம், வளர்ந்த பாரதம் இலக்கினை, இளைஞர்களோடு இணைத்து, முன்னெடுக்க வேண்டும்.  இளைஞர்களே, நமது முதன்மையோடு நீங்கள் கைகோர்த்துப் பயணிக்க வேண்டும். 

நண்பர்களே, கடந்த 10-12 ஆண்டுகளிலே, இந்தத் திசையிலே நிறைய நடந்திருக்கிறது.  ஸ்டார்ட் அப் இண்டியா இயக்கப்படி, இன்று தேசமெங்கிலும், இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட் அப்புகள் பதிவாகியிருக்கின்றன.  தேசத்தின் இளைஞர்கள் தாங்கள் வேலை செய்வதோடு, பலருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கிறார்கள்.  ஒரு இலட்சம் கோடி ரூபாய், நூதனங்கள் படைக்க பாரத அரசு அறிவித்திருக்கிறது.  நாட்டின் இளைஞர்களிடம் நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன், நீங்கள் உங்களைக் கனவுகளைக் கொண்டு வாருங்கள்.  ஆதாரங்களுக்குக் குறைவில்லாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 

ஒரு இலட்சம் கோடி ரூபாய், உங்கள் மனதிற்கும் சிந்தைக்கும், சிறகுகளை அளிக்கும் பணியை நாங்கள் செய்திருக்கிறோம்.  ஆய்வுகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  டிஜிட்டல் இண்டியாவின் புதிய, மலிவான தரவுகள், இளைஞர்களுக்கு சக்தியளித்தது.  உலகிலே, விலைமலிவான தரவு என்றால் அது இந்தியாவிலே தான்.  தேசத்தின் இளைஞர்கள், அவர்களுக்குப் புதிய பலத்தை அளித்திருக்கிறது.  திறன்மிகு இந்தியா தேசிய திட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். விண்வெளித்துறையை நாங்கள் திறந்து விட்டோம்.  தேசிய ட்ரோன் கொள்கையை உருவாக்கினோம்.  கேலோ இண்டியா கொள்கையை உருவாக்கினோம்.  35 ஆண்டுகளாக இல்லாதிருந்த புதிய கல்வித் திட்டத்தை நாங்கள்  முன்னெடுத்து வந்திருக்கிறோம்.  இதனால் ஆதாயம், நடுத்தட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

நண்பர்களே, 2004 முதல் 14வரை, புள்ளிவிவரங்களை நான் அளித்தாக வேண்டும்.  2004 முதல் 14 வரை, நமது தேசத்திலே, 350க்கும் குறைவான பல்கலைக்கழகங்களே இருந்தன.  ஆனால் இன்றோ, 10-12 ஆண்டுகளுக்கு உள்ளேயோ, கிட்டத்தட்ட 650 புதிய பல்கலைக்கழகங்கள் இணைந்திருக்கின்றன.  கிட்டத்தட்ட 1000த்தை நாம் எட்டிக் கொண்டிருக்கிறோம்.  2014க்கு முன்பாக, மருத்துவத்துறையில் 400 இருக்கைகளே இருந்தன.  இன்றோ, கிட்டத்தட்ட 850 இருக்கைகள், மருத்துவத் துறையிலே ஆகிவிட்டன.  இதுமட்டுமல்ல, அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் இந்தியாவிலே வரவிருக்கின்றன. 

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

பாரதத்திலே, அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் டிகிரிகள் எனது இளைஞர்களுக்குக் கிடைக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.  நமது தேசத்தின், இளைய மனங்கள் சிறுவயது தொடங்கி, தொழில்நுட்பத்தின் பால் கவரப்பட, இதை நோக்கிப் பணியாற்றுகிறோம்.  இந்த வகையிலே நாங்கள், கிட்டத்தட்ட 10,000த்திற்கும் மேற்பட்ட, அடல் டிங்கரிங் லேபுகளை, சின்னச்சின்ன குழந்தைகளுக்கு அளித்திருக்கிறோம்.  இதனால் அவர்களுக்கு, புதுமைகள் படைத்தல் மீது ஆர்வம் ஏற்பட வேண்டும்.  12 வயது சிறுவர்களுக்கு என, நாங்கள் பல கதவுகளைத் திறந்திருக்கிறோம்.  ஸ்டார்ட் அப் விஷயத்தை, நீங்களே கூட கவனித்திருக்கலாம். 

பாரதத்தின் தனியார் ஸ்டார்ட் அப், 28 வயது சராசரி கொண்ட இளைஞர்கள், ஆர்வலர்கள், உலகின் முதல், முதல் முயற்சியாக, சுயமாக செயற்கைக்கோள்கள் ராக்கெட்டுகள் ஏவினார்கள்.  மேலும், ராக்கெட்டை ஏவினார்கள்.  மிகப்பெரிய பணியாற்றியிருக்கிறார்கள்.  இன்று சுமார், இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்புகள் பதிவாகியிருக்கின்றன.  நாங்கள் கடந்த நாட்களிலே, ஏஐ இம்பாக்ட் மாநாட்டை நடத்தினோம்.  செயற்கை நுண்ணறிவின், விரிவாக்கம், வேகமாக வளர்ந்து வருகிறது.  செங்கோட்டையிலிருந்து, நான் நாட்டின் இளைஞர்களிடம் அறிவிக்க விரும்புகிறேன்.  நாங்கள் தீர்மானித்திருக்கிறோம், வரவிருக்கின்ற ஓராண்டிலே, ஒரு கோடி இளைஞர்களுக்கு, ஏஐ திறன் மேம்படுத்த, பயிற்சி அளிப்பதில் ஈடுபட இருக்கிறோம்.  இதனால், நமது தேசத்தின் இளைஞர்கள், ஏஐ உலகிலும் கூட, தலைமையேற்கும் வல்லமை பெற வேண்டும். 

நண்பர்களே, உயிரி பொருளாதாரம் பெரியதொரு துறை.  ஒரு காலத்தில் 2014க்கு முன்பாக, வெறும் 60,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ளதாக இது இருந்தது.  ஆனால் நாட்டின் இளைஞர்கள் என்ன அற்புதத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் பாருங்கள்!  கொள்கைகள் நேரியதாக இருந்தால், இலக்கு தெளிவாக இருந்தால், தேசத்தின் இளைஞர்கள் சாதனைகளை கண்டிப்பாகப் படைப்பார்கள்.  தேசத்தின் இளைய சக்தி தனது வல்லமையைக் காட்டியது.  2014க்கு முன்பாக இருந்த 60,000 கோடி ரூபாய் வியாபாரமாக இருந்தது, இன்று இந்த உயிரி பொருளாதாரமானது, இந்தப் பொருளாதாரம், 20 இலட்சம் கோடி ரூபாயாகி விட்டது நண்பர்களே. 

2009-10 காலகட்டம் அது.  வெறும் ஒண்ணரை இலட்சம்.  மின்வாகனங்கள், நமது தேசத்திலே, விற்கப்பட்டன.  ஒண்ணரை இலட்சம் வெறும் ஒண்ணரை இலட்சம் மின்வாகனங்களே விற்கப்பட்டன.  2009-10இலே, ஒண்ணரை இலட்சம் மின்வாகனங்கள்.  இந்த 25-26இலே, 25 இலட்சம் மின்வாகனங்கள் விற்பனையாயின. 

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

எனதருமை நாட்டுமக்களே, விமானத்துறை கூட, எனது இளைஞர்களுக்காக விரைவாக முன்னேறி வருகிறது.  புதிய விமானநிலையங்கள் புதிய பாதைகள், புதியபுதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிவருகிறது.  பராமரிப்பு பழுதுபார்த்தல், இதன் காரணமாகவும் கூட, தேசத்திலே பெரிய அளவிலே, திறனுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கிறது.  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களை, உருவாக்கும் திசையிலே வெற்றி கிடைத்திருக்கிறது.  இந்தியாவில் த்யாரான பாதுகாப்புப் போக்குவரத்து விமானம், சி-295, தனது வான்பயணத்தைத் தொடங்கி விட்டது.  வெற்றிகரமான பயணம் இது.  இது நாட்டின் இளைஞர்களுக்கு பெரிய சாதனை.

நண்பர்களே, ட்ரோன்களும் கூட, பெரிய பணியாற்றி இருக்கின்றன.  ஸ்வாமித்வ திட்டம் கிராமங்களிலே, ட்ரோன்களால், இந்தத் திட்டம் வெற்றிபெற்று வருகிறது.  சுமார் மூணேகால் கோடி குடும்பங்களுக்கு, ஸ்வாமித்வ திட்டத்தால் ஆதாயங்கள் கிடைத்திருக்கின்றன.  இதன் காரணமாக, 140 இலட்சம் கோடியளவு, சொத்துக்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.  இதன் காரணமாக வங்கிகளிடமிருந்து கடன் பெற முடிகிறது.  மக்கள் தங்கள் வியாபாரத்தை செய்ய முடிகிறது.

எனதருமை நண்பர்களே, நமது, மத்தியத்தட்டு மக்கள் முன்பாக, ஒரு மிகப்பெரிய சுமை என்றால், பயிற்சி வகுப்புகள் என்ற சவால்.  பயிற்சி வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்பவில்லை என்றால் பெற்றோர்களுக்கு அது ஒரு கௌரவப் பிரச்சனையாகிறது.  இந்த ஏழை மற்றும் நடுத்தட்டு மக்களின் மீது கரிசனம் கொள்ளும் வகையிலே, அவர்களின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவைத் தடுக்க, பிள்ளைகளும் அருகே இருந்து பெற்றோர் அவர்களை கவனித்துக் கொள்ளும் வகையிலே, குடும்பங்களுக்குப் நிதிச்சுமை ஏற்படாமல் இருக்க, இதன் பொருட்டு, நாங்கள் இளைஞர்களுக்காக, பல்வேறு தேர்வுகளுக்கான இலவச இணையவழி பயிற்சிக்கு, டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு இருக்கிறது.  நம்மிடம் சிறப்பான திறமைகள் உண்டு ஆசிரியர்கள் உண்டு.  இந்த ஆதாரங்களை இணைத்து, நாங்கள், தேசத்தின் இளைஞர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்க முழுமையானதொரு, வலைப்பின்னலை ஏற்படுத்த இருக்கிறோம். 

எனதருமை நாட்டுமக்களே, நான் எப்போதுமே கூறிவந்திருக்கிறேன்.  விளையாட்டே வளர்ச்சிதரும் என்று.  நான் விளையாட்டு-வளர்ச்சி பற்றி பேசும் போது, எனதருமை நாட்டுமக்களே, இன்று, பாரதம் விளையாட்டு உலகிலே, தனது இடத்தை ஏற்படுத்தி வருகிறது.  இப்போது, வெற்றி மேடையிலே, பாரதத்தின், தேசிய கீதம் ஒலிக்கிறது.  பாரதத்தின் ஜனகணமன ஒலிக்கிறது.  பாரதத்தின் மூவண்ணக்கொடி பறப்பதைக் காண முடிகிறது. 

டாப்ஸ் திட்டமானது, பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.  கேலோ இண்டியா விளையாட்டுகள், பல்கலைக்கழக விளையாட்டுகள், பனிக்கால விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள், விளையாட்டுக் கட்டமைப்பு, விளையாட்டு பயிற்சி, விளையாட்டு மருத்துவம், விளையாட்டுக்கான ஊட்டச்சத்து, இந்த அனைத்து விஷயங்களிலும், பாரதம் இப்போது நிபுணத்துவத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.  இளைஞர்களுக்கான புதியதோர் துறை, விளையாட்டு வீரராகவில்லை என்றாலும் ஆதரவு அமைப்பு என்ற, மிகப்பெரிய துறை திறக்கப்பட்டிருக்கிறது.  விளையாட்டு உலகிலே, பாரதத்தின் வெளிப்பாடு சிறப்பாக ஆகிவருகிறது.   மேலும் நாம், 2036ஆம் ஆண்டிலே, ஒலிம்பிக்சுக்கான புரவலராக ஆக இருக்கிறோம்.  2030ஆம் ஆண்டிலே, காமன்வெல்த் விளையாட்டுக்களை, பாரதம் நடத்த இருக்கிறது. 

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

மேலும் எனது நண்பர்களே, உலகிலே எப்போது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கின்றனவோ, வெறும் 40 வகையான விளையாட்டுகள் மட்டுமே இருக்கும்.  மேலும் சுமார், 325-350 போட்டிகள் மட்டுமே நடக்கும்.  ஒலிம்பிக்ஸ்.  உங்களுக்கு இது வருத்தத்தை அளிக்கலாம் என் நாட்டுமக்களே!!  என்னுடைய இளைஞர்களே நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன் அறைகூவல் விடுக்கிறேன்.  நான் உங்கள் உதவியைக் கோருகிறேன்.  சுமார் 325 போட்டிகளிலே, பாரதம், மூன்றில் இரண்டு பங்கிலே கலந்து கொள்வதேயில்லை.  நாம் இடம்பெறுவதே இல்லை.  நாம் தகுதி பெறுவதேயில்லை. 

நாங்கள் தீர்மானித்திருக்கிறோம், 2036இலே, நடக்கும் ஒலிம்பிக்சிலே, அது பாரதத்தில் நடக்க விரும்புகிறோம், ஆனால் 2036லே, எந்த விளையாட்டுக்களில் பாரதம் விளையாடுவதில்லையோ, எதிலே பாரதம் தகுதி பெறுவதில்லையோ, எந்தப் போட்டிகளை பாரதம் பங்கு பெறுவதில்லையோ, அந்த நான்கில் 3 பங்கு நமக்காக காத்திருக்கிறது.  பாரதம் இவற்றின் மீது பலமளிக்கும்.   இதன் பொருட்டு, நாங்கள் திறன் தேடலுக்கான இயக்கம் ஒன்றை நடத்த விரும்புகிறோம். 

நமக்கு 2036க்கான வீரர்கள் தேவை, 5-10-15 வயதுடைய இளைய நண்பர்கள், அவர்களின்பால் கவனத்தை பெண்களின்பால் கவனத்தைச் செலுத்த வேண்டும்.  அந்த வகையிலே, 5 முதல் 15 வயது வரையான, குழந்தைகளிடம் விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிய, கிராமம்தோறும் நகரம்தோறும் பள்ளிதோறும், திறமைகள் தேடும், வகையிலே இயக்கமொன்று முடுக்கி விடப்படும்.  குழந்தைகளின் திறமைகள் ஆராயப்படும்.  அதன் பிறகு, அவர்களுக்குச் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தேசத்திற்காக விளையாடும், நல்ல வீரர்களாக ஆக்கப்படுவார்கள். 

பிரதமர் உரையின் தொடர்ச்சி… அடுத்த செய்திக் கட்டுரையில் – சுட்டி

Related articles

Recent articles

spot_img