அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Published:

80th independence day speech by modiji - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 15.08.2026 அன்று, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.
தமிழாக்கம் : ஆர். சுதர்ஸன்

முந்தைய செய்திக் கட்டுரையின் தொடர்ச்சி… (3)

எனதருமை நாட்டுமக்களே, நாம் தயாரிப்புத் துறையை மிகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  மேலும் உற்பத்தியைப் பெருக்குவதோடு கூடவே, நாம், சின்னச்சின்ன, கருவிகளையும் தயாரிக்க வேண்டும்.  பெரியபெரிய பொருட்களையும் தயாரிக்க வேண்டும்.  மொத்த மதிப்புச்சங்கிலியும் நமதாக வேண்டும்.  இதை நாம் கைக்கொள்ள வேண்டும்.  நமக்கு, உட்கூறுகளும் தேவை, மேலும் நமக்கு, ஒட்டுமொத்த, தயாரிப்பும் தேவை.  பொருட்கள் மொத்தமாகவும் தேவை.  வடிவமைப்பு தொடங்கி தயாரிப்பு வரை, பாரதம் உலக விநியோகச் சங்கிலியின், நம்பகமான மையமாக வேண்டும்.  இதன் பொருட்டு, நான் மூன்று விஷயங்களின் மீது சிறப்பு அழுத்தமளிக்க விரும்புகிறேன்.  தயாரிப்புத் துறையிலே இருக்கும் நமது சகோதர சகோதரிகள், இது அவர்களுக்கு, சந்தர்ப்பமாகும்.  இந்தச் சந்தர்ப்பத்தை இழந்து விடாதீர்கள்.  இதன் பொருட்டு, நாம் விலை, தரம், மற்றும் அளவு, இவற்றின் மீது, உலகளாவிய, அளவீடுகளுக்கு இணங்கச் செயல்பட வேண்டும்.  நமது தொழிற்சாலைகள், போட்டித்தன்மை உடையதாக ஆக வேண்டும்.  நமது பொருட்கள், பயனாளிகளுக்கு நேசமாக இருக்க வேண்டும்.  நமது பேக்கேஜிங், உலகின் மக்களை, ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.  கவரும் வகையிலே இருக்க வேண்டும்.  நமது பூஜ்யம் குறைபாடு, உடைய தயாரிப்பு, இதுவே நமது அடையாளமாக ஆக வேண்டும்.  மேலும் நமது தயாரிப்பாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் எம் எஸ் ஈக்கள், அனைத்து எம் எஸ் எம் ஈக்களிடமும், நான் கூற விரும்புகிறேன், உலகச் சந்தைகளிலே, நமது அடையாளம், நம்பகத்தன்மை, மற்றும் தரத்தைச் சார்ந்தே இருக்க வேண்டும்.  தரம் விஷயத்திலே எந்தச் சமரசமும் இருத்தல் கூடாது.  அந்த வகையிலே நமது மந்திரம் தரம் தரம் தரம் என்று மட்டுமே இருக்க வேண்டும்.  இதுவே நமது உலகளாவிய ப்ராண்டாகும். 

எனதருமை நாட்டுமக்களே, இந்த 7 போக்குகளின் இரண்டாவது சக்தி.  விவசாயம் மற்றும் உணவு, உற்பத்தி.  உணவு உணவுப் பதப்படுத்தல்.  நாம் இந்தத் திசையில் முன்னேற வேண்டும்.  நமது விவசாயிகளுக்கு, உலகின் சந்தைகள்  திறக்கப்பட்டு விட்டன எஃப் டி ஏ காரணமாக மிகப்பெரிய சந்தை கிடைத்து வருகிறது.  நாம் சற்றே சிந்திக்க வேண்டும்.  நாம் அந்த இடத்தைக் கைப்பற்ற வேண்டும்.  நாம் வயல்வெளி தொடங்கி ஏற்றுமதிச் சந்தைவரை பயணிக்க வேண்டும்.  நமது பாரம்பரிய உணவாகட்டும் சிறுதானியங்களாகட்டும் நமது மசாலாவாகட்டும் நமது பருப்புகளாகட்டும், எதுதான், நம்மிடத்த்லே என்னதான் இல்லை கூறுங்கள்!!   இவை உலகளாவிய ப்ராண்டுகள் ஆக வேண்டும்.  நமது, விவசாயிகள், வேதிப்பொருள் இல்லாத விவசாயத்திற்கு பலமளிப்போம்.  உலகிலே இதற்கான தேவை அதிகரிக்க இருக்கிறது.  மேலும் உலக அளவீடுகளுக்கு உட்பட்டு, அனைத்து வகையிலும் வெற்றியடையக்கூடிய நமது, வேளாண்பொருட்கள் இருக்கும்.  இதை உலகிற்கு எளிதாக நம்மால் கொண்டு செல்ல இயலும். 

என்னுடைய 7 போக்குகளின் 3ஆவது சக்தி என்னவென்றால், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் படைத்தல்.  எனதருமை நாட்டுமக்களே, இன்று, உலகம் செயற்கை நுண்ணறிவுடையது.  க்வாண்டமுடையது.  விண்வெளியுடையது.  ரோபோடிக்ஸுடையது.  தரவு மையங்களுடையது.   முழுமையாக ஒரு புதிய துறை திறக்கப்பட்டு விட்டது.  வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், இவையும் கூட, கணம்தோறும் நமக்கு சவால்கள் விடுத்துக் கொண்டிருக்கின்றன.  அந்த வகையிலே தேசத்தை, உலகத்திற்கான சந்தையாக்கக் கூடாது.  நாம் புதுமைகள் படைத்தலின் மையமாக வேண்டும்.  நாம் யுபிஐ மற்றும் டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பிலே, நம்மை நிரூபித்திருக்கிறோம்.  நம்முடைய சக்தியை அடையாளப்படுத்தி விட்டோம்.  இப்போது பாரதம், டிஜிட்டல் டிஜிட்டல் பொதுத் தொழில்நுட்பங்களை, உலகின் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.  பாரதத்தை அடுத்த தலைமுறை, தகவல்பரிமாற்ற தொழில்நுட்பத்திற்கு, தலைமை தாங்கச் செய்ய வேண்டும்.  இந்தியாவில் தயாரான 6ஜி, அனைத்து இடங்களையும் சென்றடையச் செய்தல், இதுவே நமது இலட்சியமாக வேண்டும்.  மேலும் இதிலே விரைவு கூட்டப்பட வேண்டும்.  இதன் பொருட்டு நமது முயற்சி, குறைவுபடக் கூடாது. 

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

7 போக்குகளின் நான்காவது சக்தியென்றால், கதிசக்தி.  இந்த கதிசக்தி, தேசத்திலே தடையில்லா இணைப்புத்திறன் மீதான ஊக்கம்.  நகரங்களை நாம் அதிவிரைவு ரயில்களால் இணைக்க வேண்டும்.  நவீன நெடுஞ்சாலைகள் தேவை.   உள்நாட்டு நீர்வழிகள் தேவை.  விமான நிலையங்கள் தேவை.  பல்லடுக்கு தளவாடவியல் அமைப்புகள் தேவை.  நாம் துறைமுகங்களை வெறும், பொருட்களை இறக்குதல் ஏற்றுதல் இடங்களாக மட்டுமல்ல, உலகக் கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சும் இடங்களாக மட்டுமல்ல, நாம் நமது துறைமுகங்களை, துறைமுகம்சார்  முன்னேற்றம் வளர்ச்சியை நோக்கிய திசையில், நாம் முன்னேற வேண்டும். 

நமது 7 போக்குகளின், 5ஆவது சக்தி, அதுதான் பாதுகாப்பு சக்தி.  நமக்கு பாதுகாப்பு சக்தியின் மகத்துவம் அனைத்து வகைகளிலும் உண்டு.  எனதருமை நாட்டுமக்களே, பாதுகாப்புத்துறையிலே தற்சார்பு என்பது, இதை பாரதமும் அனுபவித்து விட்டது உலகமும் பார்த்து விட்டது.  இது மிகமிக முக்கியமானது.  உலகநாடுகள், அவரவர் குறித்துச் சிந்திக்கும் போது, அப்போது பாரதம், உலகத்தின் சந்தையாகத் தேங்கி விட முடியாது.  பாதுகாப்புத் துறையிலே நாம் தற்சார்பு நிலையை அடைந்தே ஆக வேண்டும்.  அடுத்ததலைமுறை பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை, மேம்படுத்தி,  உலகத்துக்கே அளிக்கும் நாடாக ஆகும் திசையிலே, நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.  நாம் ட்ரோன், மற்றும் ட்ரோனை எதிர்கொள்ளும் முறைகளையும் மேம்படுத்த வேண்டும்.  மேலும், ஹைப்பர்சோனிக் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், இவை மீதும் நாம், தலைமையேற்க  வேண்டும். 

நண்பர்களே சைபர் பாதுகாப்பும் கூட, அனைத்து இல்லங்களுக்கும் இன்று பிரச்சனையாகி வருகிறது.  இதுவும்கூட ஒரு பாதுகாப்புத் துறை தான்.  இதிலே நமது இளைஞர்களின் வல்லமை, இந்த வல்லமையின் பயன்பாட்டை, நாம் தேசத்திற்கும் உலகிற்கும் உதவும் வகையில் செய்ய முடியும். 

நமது 7 போக்குகளின் 6ஆவது சக்தி, பசுமை பொருளாதாரம்.  நீலப் பொருளாதாரம்.  இவையே பசுமை வேலைவாய்ப்பையும் ஏற்படுத்துகிறது.  நாம் பசுமை ஹைட்ரொஜன், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, எரிசக்தி சேமிப்பு, பசுமை பெயர்ச்சி, பசுமை தயாரிப்பு, பிரும்மாண்ட அளவுகளிலே, நாம் கையகப்படுத்த வேண்டும்.  நாம் உலகினிலே, புவி வெப்பமயமாதல் பற்றி விவாதங்களே நடக்கும் வேளையிலே, நாம் பாதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.  நாம் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை அளித்து வருகிறோம்.  மேலும் பாரதம், இந்த பசுமை இயக்கத்தை, பெரும் வலுவோடு முன்னெடுத்துச் செல்கிறது.  பாரதத்திடம் நீலப் பொருளாதாரத்திற்கும் கூட, மிகப்பெரிய சந்தர்ப்பம் இருக்கிறது.  நம்மிடம் மிகப்பெரிய நீண்ட கரைப்பகுதி இருக்கிறது.  நீலப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.  மீன்வளத்துறை உண்டு.  கரைப்பகுதி சுற்றுலாத்துறை.  கடல் தொழில்நுட்பமுண்டு.  இப்படி எத்தனையோ துறைகள் இருக்கின்றன.  இவற்றிலே நாம் முன்னேற முடியும். 

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

என் கனிவான நாட்டுமக்களே, பாரதம், 7 போக்குகள் குறித்து முன்னேறும் வேளையிலே, நமது 7ஆவது போக்கென்றால், இது உலகினுக்கு, ஒரு விசேஷமான மகத்துவம் உண்டு.  அது என்னவென்றால், பாரதத்தின் மென்சக்தி.  பாரதத்தின் மென்சக்திக்கு ஒரு பலம் உண்டு.  இன்று யோகக்கலையானது, மொத்த உலகையுமே, பாரதத்தோடு இணைத்து வைத்திருக்கிறது.  யோகக்கலை உலகிற்கு சக்தியாக ஆகி வருகின்றது.  பாரதத்திற்கு நம்பிக்கைக்கான காரணமாக ஆகி வருகின்றது.  எந்த பாரதத்திடம், வழிபாட்டு மையங்கள் உள்ளதோ, எந்த பாரதத்திடம் ஆயுர்வேதம் உள்ளதோ, எந்த வகையிலே பாரதத்திடம், முழுமையான உடல்நல அமைப்புமுறை உள்ளதோ, இந்தியாவில் குணப்படுத்தல் இயக்கம் இருக்கிறதோ, நாம் உலகத்தினிலே, நமது திறமைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். 

கைவினைப் பொருளாகட்டும், கலாச்சாரமாகட்டும், திரைப்படங்களாகட்டும், நமது படைப்பாற்றல் உலகாகட்டும், வி எஃப் எக்ஸ் ஆகட்டும், நமது அனிமேஷனோ கேமிங்கோ ஆகட்டும், டிஜிட்டல் உள்ளடக்கமாகட்டும், படைப்புத்திறன் உலகினிலே, பாரதம் தனது திறமையை வெளிப்படுத்த முடியும்.  நாம் இவற்றை உலக அளவிலான திறமை என்ற வகையிலே, மேம்படுத்த வேண்டும்.  இன்று பாரதமானது, வேவ்ஸ் மாநாட்டுக்கு மிகப்பெரிய சக்தியளித்திருக்கிறது.  உலகம் மெல்லமெல்ல, பாரதத்தின் இந்த………. வோர்ல்ட் ஆடியோ விஷுவல், அண்ட் எண்டர்டெயின்மெண்ட் சம்மிட் இருக்கிறதே, இதற்காக காத்துக் கொண்டிருக்கிறது.  இதுவும் கூட, பாரதத்தின் மென்சக்தியை பாரதத்தின் படைப்புத்திறனை, உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். 

என்னுள் நிறைந்த நாட்டுமக்களே, பாரதத்திடம் ஏராளமான வனவளங்கள் இருக்கின்றது.  நம்மிடத்திலே 100க்கும் மேற்பட்ட தேசிய பூங்காக்கள் இருக்கின்றன.  சாத்தியங்கள், அதிகம் இருக்கின்றன.  ஆனால் அயல்நாட்டுச் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதிலே, நாம் பின்தங்கி இருக்கிறோம்.  நமது மென்சக்தி வாயிலாக நமக்கொரு சந்தர்ப்பம், உலகின் சுற்றுலாப்பயணிகளை இந்தியாவை நோக்கி ஈர்ப்பதற்கு.  நமது வல்லமையால் உலகை நாம் வெல்ல வேண்டும்.  நாம் இதைச் செய்தே ஆக வேண்டும்.  விரைவாகச் செய்ய வேண்டும்.  இது மட்டுமல்ல, உலகிலே விளையாட்டுக்கள் மீதான ஆர்வம், இது மிகப்பெரிய, ஈர்ப்பாக வேண்டும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சி இங்கே நடக்க வேண்டும்.  கச்சேரி பொருளாதாரம் வளர்ந்து வருகிறது இளைஞர்களை இது ஈர்க்கிறது.  உலகின் அனைத்துக் கலைஞர்களும் விரும்புகிறார்கள், பாரதத்தில் ஒருமுறையாவது கச்சேரி செய்ய வேண்டுமென்று.  இது மிகப்பெரிய சந்தர்ப்பமாகும்.  நாம் இதை ஒருங்கிணைக்க அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

நண்பர்களே, 7 போக்குகளின் இந்த, 7 சக்திகள், 7 சக்திகள், இவை வெறும், ஒரு துறையில் முன்னேற்றம் அடைவதற்கு அல்ல.  முழுமையான ஒரு வழிமுறையோடு கூட, நாம் தேசத்தை, நாம் தாங்கியிருக்கும் இலக்கை நோக்கி லட்சியத்தை நோக்கி, அதைச் சென்றடைவதில் முனைப்போடு பணியாற்ற வேண்டும். 

எனதருமை நாட்டுமக்களே, நான் சில விஷயங்களைக் கூறினேன்.  ஆனால் நான் இதைத் தாண்டியும் சிந்திக்கிறேன்.  நான் தேசத்தில் ஒரு விழிப்பினை ஏற்படுத்த விரும்புகிறேன்.  நான் தேசத்தின் சக்தியை எழுப்பிவிட விரும்புகிறேன்.  தேசம் என்றால் அது அரசாங்கம் மட்டுமே அல்ல.  தேசன் என்றால் அனைத்துக் குடிமக்களின் இணைவு.  ஃபார்ச்சூன் 500 பற்றி, நாம் இது குறித்து நிறைய கேள்விப்பட்டு வந்திருக்கிறோம்.   வரவிருக்கின்ற பத்தாண்டுகளிலே, இந்த ஃபார்ச்சூன் 500இலே, 50 பாரதக் கம்பெனிகள் இந்தியாவுடையாக ஏன் இருக்கக் கூடாது, இதுவே நமது இலக்காக வேண்டும்.  இன்று வங்கித்துறை, மலர்ந்து வளமாக இருக்கிறது.  உலகின் தலைசிறந்த வங்கிகளிலே, பாரதத்தின் வங்கிகள் ஏன் கோலோச்ச முடியாது?  பாரதத்தின் வங்கிகளும் கூட, உலகின் தலைசிறந்த 5 வங்கிகளிலே, ஒன்றாக இருக்க வேண்டும். 

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

பாரதத்தின் மருந்தியல் துறை, ஃபார்மா, இந்தத் திசையில் நாம், நிறைய பணியாற்றி இருக்கிறோம்.  ஆனால் காலத்தின் தேவை, உலகின் 5 தலைசிறந்த ஃபார்மா கம்பெனிகளில், பாரதத்தின் ஒன்றிரண்டு கம்பெனிகளின் பெயர் ஒலிக்க வேண்டும்.  பாரதம், அதிலே தன்னிடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.  சட்ட கம்பெனிகள், தரச்சான்று கம்பெனிகள், காலத்தின் தேவை இல்லையா?  இவற்றின் உலகளாவிய தலைமை நம்மிடம் இருக்க வேண்டுமில்லையா?  திறமை உண்டு திறன்களுண்டு, நமக்கென நீண்ட வரலாறு உண்டு.  மொழிகளின் மீது புலமை உண்டு.  நாம் உலக அரங்கில் மிளிர வேண்டும்.  நமக்கென ஒரு ஆலோசனை நிறுவனம், கணக்கியல் நிறுவனம், உலகின் தலைசிறந்தவற்றில் ஏன் ஒன்றாக இருக்கக்கூடாது?  பாரதத்தின் தொழில்நுட்ப நிறுவனங்கள், உலகிலே தலைசிறந்து விளங்க வேண்டும்.  இதுவே நமது இலட்சியமாக வேண்டும்.  நமக்கே உரித்தான பிராண்ட் இருக்க வேண்டும்.  இதனிடம் உலகம், ஈர்க்கப்பட வேண்டும்.  நமது பிராண்ட் நமது தேசத்தின் அடையாளமாக வேண்டும்.  இது உலகினுக்கு, நிறைவான இடமாக வேண்டும், இந்தத் திசையிலே நாம் பணியாற்ற வேண்டும்.  இதன் பொருட்டு, நான் மாநில அரசுகளிடம் வேண்டிக் கொள்கிறேன். 

நான் உள்ளாட்சி அலகுகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.  பாரத அரசின் பொறுப்பும் கூட இது.  நாம் நமது சீர்திருத்த வேகத்தைக் கூட்ட வேண்டும்.  நாம், 2047 இலக்கிற்கு ஏற்ப, நமது அமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.  நாம் கடந்த கால விதிமுறைகளுக்கு ஏற்ப பயணிக்க முடியாது.  நாம் வரவிருக்கின்ற காலத்தின் கனவுகளுக்கு ஏற்ப விதிகளை மாற்றியமைக்க வேண்டும்.  இதை நாம் செய்தோமென்றால், எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, நான் நாட்டுமக்களுக்கு, நம்பிக்கை அளிக்கிறேன், இதே பாதையில், எந்தச் சுணக்கமும் காட்டாமல், நாம் வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கை எட்டியே தீருவோம்.  நாமனைவரும் இணைந்து இதை மேற்கொள்ள வேண்டும். 

மத்திய அரசாகட்டும் மாநில அரசுகளாகட்டும், தொழில்துறை ஆகட்டும், நாமனைவருமாக இணைந்து, முன்னேறியாக வேண்டும்.  நாம் தொடர்ந்து சீர்திருத்த வேண்டும், சீர்திருத்தங்களை மேலும் முன்னெடுக்க வேண்டும்.  நான் முன்னமேயே கூறியிருந்தேன்.  நாம் சீர்திருத்தங்களை, கட்டாயத்தினால் அல்ல, கடப்பாட்டுடன் செய்கிறோம்.  இலக்கை எட்ட இதை நாம் செய்கிறோம். 

பிரதமர் உரையின் தொடர்ச்சி… அடுத்த செய்திக் கட்டுரையில் – சுட்டி

Related articles

Recent articles

spot_img