இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ மாணவியர் அனைவர்க்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரவர் ஆற்றலின் அடிப்படையில் விருப்பமுள்ள உயர் கல்வி வாய்ப்பினைப் பெறவும், கல்லூரி வாழ்க்கையினை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்திடவும் வாழ்த்துகிறேன்.
இந்தத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் கிஞ்சிற்றும் நம்பிக்கையிழக்க வேண்டியதில்லை. தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர்ந்து, அடுத்து வரும் வாய்ப்பினை மேலும் கடினமாக உழைத்துப் பயன்படுத்தி வெற்றி பெற்று உயர்கல்வி பெறும் பாதையில் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பயணிக்கும் படி வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து
Popular Categories



