18 May16 BJP - 2026பா.ஜ.க. சார்பில் `உழவனின் உரிமை மீட்பு’ சைக்கிள் தொடர் பேரணி இன்று கல்லணை தொடங்கி வரும் ஜூன் 2ம் தேதி தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நிறைவடைகிறது.
பேரணியை மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை தொடங்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் குறைகளை நீக்கி மக்களுக்கு காப்பீடு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து சீராய்வு கமிட்டி அமைக்க வேண்டும். மத்திய அரசின் பென்சன் திட்டத்தை அனைத்து விவசாயிகளும் மீனவர்களும் பெற்றிட மாநில அரசே பிரிமியம் தொகையை வழங்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளுவதை முறைப்படுத்தி ஏரி குளம் நீர் வழிதடங்களை தூர்வாரி தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கல்லணையில் தொடங்கும் பேரணி 2ம் தேதி பேராவூரணியில் நிறைவடைகிறது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending