பஞ்சாங்கம் ஜனவரி 13 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: ஜனவரி 13

பஞ்சாங்கம் மார்கழி~ 29 (13.01.19) ஞாயிறு
வருடம் ~ விளம்பி வருடம். வருஷம் ~ { விளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ ஹேமந்த ருது
மாதம்~ தனுர் மாஸம்

{மார்கழி மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
திதி ~ 7.56 pm வரை சப்தமி பின் அஷ்டமி. . நாள் ~ பானு வாஸரம் ( ஞாயிறு)
நட்சத்திரம் ~ 8.12 am வரை உத்திரட்டாதி பின் ரேவதி
யோகம் ~ சிவம்

அமிர்தாதி யோகம் ~ சுபயோகம்
கரணம் ~ கரஜை
நல்ல நேரம் ~ காலை 7.30~8.30 & மதியம்.2.00~3.00.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30
குளிகை ~மாலை 3.00 ~ 4.30

சூரிய உதயம் ~ காலை 06.38 am~
சந்திராஷ்டமம் ~ சிம்மம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம். ஸ்ரார்த்ததிதி ~ சப்தமி இன்று ~

இன்றைய (13-01-2019) ராசி பலன்கள்

மேஷம்

செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : வாய்ப்புகள் கிடைக்கும்.

பரணி : ஆசிகள் கிடைக்கும்.

கிருத்திகை : சிக்கல்கள் நீங்கும்.

ரிஷபம்

பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்கவும். புதிய முடிவுகளை எடுக்கும்போது பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்கவும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். செய்யும் பணியில் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : அமைதி காக்கவும்.

ரோகிணி : பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்கவும்.

மிருகசீரிடம் : நிதானத்துடன் செயல்படவும்.

மிதுனம்

பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். சுபச் செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : எண்ணங்கள் ஈடேறும்.

திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.

புனர்பூசம் : சுப விரயங்கள் உண்டாகும்.

கடகம்

தாய்மாமன் உறவுகளால் அனுகூலம் உண்டாகும். இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகலாம். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

பூசம் : அலைச்சல் உண்டாகும்.

ஆயில்யம் : பணிச்சுமை அதிகரிக்கும்.

சிம்மம்

உறவுகளிடம் அமைதிப்போக்கினை கையாளவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். சந்திராஷ்டம தினம் என்பதால் நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : விவேகம் வேண்டும்.

பூரம் : மனச்சோர்வு உண்டாகும்.

உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.


கன்னி

வழக்குகளில் இழுபறியான நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கூட்டாளிகளின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீர் நிலையம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். கடன் தொல்லைகளால் மன வருத்தம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : இழுபறி நிலை உண்டாகும்.

அஸ்தம் : பாராட்டப்படுவீர்கள்.

சித்திரை : கவனத்துடன் இருக்கவும்.


துலாம்

தொழில் சம்பந்தமான முதலீடுகளில் கவனம் வேண்டும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணியில் தேவையில்லாத அலைச்சல்களால் விரயம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : முதலீடுகளில் கவனம் தேவை.

சுவாதி : புரிதல் உண்டாகும்.

விசாகம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

விருச்சகம்

பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். மனம் தெளிவு பெறும். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : காவி நிறம்

அனுஷம் : இன்னல்கள் நீங்கும்.

கேட்டை : சாதகமான நாள்.

தனுசு

உங்களின் தொழில் திறமையால் மதிப்பு அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் ஆதாயமான சூழல் உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : மதிப்பு அதிகரிக்கும்.

பூராடம் : ஆதாயமான நாள்.

உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்

இசைக் கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

திருவோணம் : மேன்மையான நாள்.

அவிட்டம் : புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.


கும்பம்

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : இலாபம் கிடைக்கும்.

சதயம் : சுபிட்சம் உண்டாகும்.

பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

மீனம்

சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். திருமண வரன்கள் கைக்கூடும். வாகன வசதிகள் மேம்படும். பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

பூரட்டாதி : சாதகமான சூழல் அமையும்.

உத்திரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.

ரேவதி : பொறுப்புகள் உயரும்.

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: இனியவை கூறல் – குறள் எண்:95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

மு.வ உரை:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.