சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

Published:

hindumunnani
hindumunnani

விநாயகர் சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் ஏஎன் கலந்து கொள்ளக் கூடாது!? தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த சில கறுப்பாடுகள் சூழ்ச்சியா? விநாயகர் சதுர்த்தி விழா சீரும் சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் கவனம் கொடுக்க வேண்டும் என இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

நேற்றைய தினம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ள கூடாது என்றும் முளைப்பாரி எடுத்து வர கூடாது என்றும் தெரிவித்துள்ளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விநாயகர் சதுர்த்தி நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியுள்ளனர்

இது அப்பட்டமான மத வழிபாட்டு உரிமை மீறல் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. இந்துக்களின் வழிபாட்டினை அரசியலாக பார்ப்பதை இந்து முன்னணிக் கண்டிக்கின்றது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

மேலும் பள்ளிவாசல் வழியாக செல்லும் போது மேல தாளங்கள் வாசிப்பவர்களை பள்ளிவாசல் அருகே குறிப்பிட்ட தூரத்திற்கு காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்வதும் சர்வாதிகாரத்தின் உச்சம். சாலைகளில் செல்ல அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமையை அவமதிக்கும் செயலாகும் இது.

தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் வெளிநாடு சென்றுள்ளார். இதனைப் பயன்படுத்தி சிலர் தமிழகத்தில் குழப்பத்தை விளைவிக்க சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆட்சி மாறினாலும் இன்னமும் சில அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பழைய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. இதனை தமிழக முதல்வர் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தென் தமிழ்நாட்டில் முளைப்பாரி எடுப்பது தமிழர்களின் பாரம்பரியம் ஆகும். மேலும் மத வழிபாட்டில் பெண்கள் குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பமும் கலந்து கொள்வது நமது மரபு. இந்த உரிமைகளை மறுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இது போன்ற அறிவிப்பு திட்டமிட்ட சதியோ என்ற சந்தேகம் எழுகிறது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

கோட்டாட்சியரின் இந்த உத்தரவை திரும்ப பெறாவிட்டால் வரும் 15ம் தேதி அருப்புகோட்டை பகுதியில் இந்துமுன்னணி சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட விஜர்சன ஊர்வலம் ஒத்தி வைக்க வேண்டிய நிலை உள்ளது.

வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட இது சம்மந்தமாக உயர்நீதி மன்றத்தை நாடி உரிய நீதி பெற்ற பின்பே ஊர்வலம் நடைபெற ஆலோசித்து வருகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தான்தோன்றித்தனமாக கருத்து வெளியிட்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் செயல் கவலை அளிக்கும் விதத்தில் இருக்கிறது.

தமிழக முதல்வர் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற உரிய கவனத்துடன் செயல்பட்டு ஒத்துழைப்பு நல்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Related articles

Recent articles

spot_img