
6 மாதம் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி 6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை (01.10.26) முதல் முடக்கப்படும்.
இறந்தவர் பெயர் நீக்காமல் இருப்பது, இடம்பெயர்ந்த பிறகும் பழைய பதிவு தொடர்வது உள்ளிட்ட குளறுபடிகளை நீக்க முடிவு செய்திருப்பதால் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர்.
6 மாதங்களாக பொருட்கள் வாங்காத 1.58 கோடி பயனாளிகளின் சலுகைகளை நாளை முதல் முடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ரேஷன் கார்டுகள் முதலில் தற்காலிகமாக முடக்கப்படும், ஆனால் பெயர்கள் உடனடியாக நீக்கப்பட மாட்டாது.
ரேஷன் கார்டுகள் முடக்கப்படாமல் இருக்க 3 மாதத்துக்குள் இ-கே.ஒய்.சி. நடைமுறையை முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

