தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித் துறை முதல் ஆணையர் சுஷில்குமார், IRS அறிவுரைப்படி, வருமானவரித்துறை முதன்மை ஆணையர் யஷ்வந்த் யு சவான், IRS தலைமையில், வருமானவரி குறித்த விளக்கவுரை கருத்தரங்கம், வியாழக் கிழமை இன்று காலை 10:30க்கு சென்னை மாதவரம் விஜய் பார்க் ஹோட்டலில், நடைபெற்றது.
விளக்கவுரைக் கருத்தரங்கில் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு பேசியபோது,
நிதியாண்டின் துவக்கத்திலே, வருமானவரி செலுத்துபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த:
* முறையான கணக்கினை எவ்வாறு கடைப்பிடிப்பது.
* முறையான அட்வான்ஸ் டேக்ஸை, எப்படி தீர்மானிப்பது, அவற்றை, தகுந்த காலத்தில், மத்திய அரசின் கணக்கில் எப்படி செலுத்துவது.
TDS,TCS எவ்வாறு செய்வது, நேரத்தில் எப்படி செலுத்துவது, e-TDS (காலாண்டு) படிவங்களை, காலத்தே எப்படி அப்லோட் செய்வது.
தனிநபர் மற்றும் இதர வரிசெலுத்துபவர்கள், ஏன் வருமானவரிப்படிவங்களை, காலத்தே தாக்கல் செய்யவேண்டும் என்ற அறிவுரைப்பது.
வரி செலுத்துவோர், எப்படி இணையத்தில் வரி செலுத்துவது மற்றும் இணையத்தில், வருமானவரித்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நம்பிக்கையை ஏற்படுத்துவது.
வருமானவரி செலுத்துவோர்களை, நட்போடு அணுக காத்திருக்கும், வருமான வரித் துறையின் அடிப்படையான எண்ணத்தை புரியவைத்து, அவர்களின் குறைகளை தீர்க்கவே, இத்துறை செயல்படுகிறது என்பதை தகுந்த முறையில் அறிவிப்பது… ஆகிய தலைப்புகளில் விவாதித்ததுடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஜவுளி, கட்டுமானப்பணி செய்வோர், இரும்பு மற்றும் எஃகு சார்ந்த தொழில் முனைவோர், ஆட்டோமொபைல் சார்ந்தவர், உட்பட பல்வேறு தொழில் புரியும் வருமான வரி செலுத்தும் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ராஜாராம் மொரே,ஜே.கே. ரெட்டி, FCA உள்ளிட்ட ஆடிட்டர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வருமான வரித் துறையினரின் இந்த முயற்சியை பாராட்டினர். கூடுதல் ஆணையர் ராதாகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். இணை ஆணையர் யமுனா நன்றி கூறினார்.



