kashmir curfew stone pelting - 2026

ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், காஷ்மீர் கல்லெறிச் சம்பவத்தில் படுகாயமடைந்து, இன்று மரணம் அடைந்தார்.

சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணி, காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் – குல்மார்க் சாலையில் நார்பல் பகுதியில் திங்கள் கிழமை இன்று சென்று கொண்டிருந்த போது, அவர் வந்த வாகனம் மீது கல்லெறிந்துள்ளனர் காஷ்மீர் இளைஞர்கள். படுகாயமடைந்த அந்த நபர் உடனடியாக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

சென்னையைச் சேர்ந்த அந்த நபர் ராஜவாலி என்பவரின் மகன் திருமணி (வயது 22) என்று அடையாளம் காணப்பட்டது. அவர் உடனடியாக ஸ்ரீநகரில் உள்ள சேர் இ காஷ்மிர் இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டதாகவும், பலத்த காயமடைந்த நிலையில், இன்று மாலை அவர் உயிரிழந்ததாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, பின்னர் அந்த நபர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending