nirmala seetharaman in thiruchuzhi sports - 2026

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

மதுரை சற்றுமுன் தமிழகம் விளையாட்டு
nirmala seetharaman in thiruchuzhi sports - 2026

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எஸ்.பி.ஐ வங்கி நிதி உதவியுடன் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேஸ்கட் பால்,வாலிபால்,டென்னிஸ்,டேபிள் டென்னிஸ்,செஸ் மற்றும் கேரம் ஆகிய விளையாட்டு மைதானங்கள் அடங்கிய உள் விளையாட்டு அரங்கினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் திருச்சிழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அரங்கத்தை பார்வையிட்டு கல்வெட்டை திறந்து வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சரை மேளதாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

மேலும் மாணவ மாணவிகள் தமிழக பாரம்பரிய கலைகளான கரகாட்டம் காவடி ஆட்டம் தப்பாட்டம் மற்றும் சிலம்பாட்டம் மூலம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.நிகழ்ச்சியின் நிறைவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இந்த உள் விளையாட்டு அரங்கம் மாணவர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மாணவிகளை சொல்லச்சொல்லி கேட்டறிந்த அமைச்சர், கிராமப்புற மாணவர்களின் தெளிவான நோக்கத்தை கேட்டறிந்து மாநில அளவில் சாதிக்க இந்த மைதானம் உதவும் என்று சொன்ன அவர்களை பாராட்டி அவர்கள் விளையாடுவதை கண்டு ரசித்து உற்சாகப்படுத்தி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசிய அவர்,ரமண மகரிஷி பிறந்த ஊர் திருச்சுழி என்பதாலும் முன்னேற விழையும் மாவட்டமான இங்கு கிராமப்புற மாணவர்கள் அதிகம் உள்ளதால் அவர்களுக்கான விளையாட்டு வசதியை செய்து கொடுக்க கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதை நிறைவேற்றிய எஸ்பிஐ நிர்வாகத்திற்கும் எஸ்பிஐ பவுண்டேஷனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், ஒரு காலத்தில் காமன்வெல்த் விளையாட்டு என்றால் ஊழல் என்று இருந்தபோது மோடி அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததால் தான் ஆசிய விளையாட்டுகளை நாம் நடத்தும் நிலைக்கும் கிலோ விளையாட்டுப் போட்டிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி ஒலிம்பிக் செல்லம் அளவிற்கு நாம் நம் இளைஞர்களை தயார் படுத்தி வருகிறோம் என்றார்.

முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகரில் அடிப்படை வசதிகளான சுகாதாரம்,கல்வி போன்றவற்றில் முன்னேற்றம் கண்டாலும் விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் இல்லை என்பது ஒரு குறையாகப்பட்டதால் இந்த விளையாட்டு அரங்கம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.எப்போதும் விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு என்றார்.

தேர்தல் நேரத்தில் இதை திறந்து வைத்திருந்தால் அதை அரசியல் ஆக்கியிருப்பார்கள் என்றும் அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி முறையாக பராமரித்து அடுத்து வருபவர்களுக்கும் வாய்ப்பு வழங்கி ரமண மகரிஷி பிறந்த ஊரை விளையாட்டுத்துறையிலும் இந்த ஊர் பெயர்பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.