karkataka first day vizha - 2026

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
karkataka first day vizha - 2026

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் ‘ஆனையூட்டு’ விழா மிக பிரபலமான சமூக விழாவாகும். இந்த ஆண்டு இன்று ஆடி முதல் நாள் நடந்த இந்த விழாவில் 60 யானைகளுக்கு உணவளிக்கும் நிகழ்வு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.

கேரள மாநிலம் திருச்சூர் ஸ்ரீ வடக்குநாதன் கோவிலில் மலையாள மாதமான கற்கடகத்தின் ஆடி முதல் நாளில் ஆனையூட்டு விழா யானைகளுக்கு உணவளிக்கும் விழா) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் 60க்கும் மேற்பட்ட யானைகளுக்குச் சிறப்பு உணவுகள் வழங்கி, பக்தர்கள் அவற்றை வழிபடுவர். யானைகளுக்கு நெய், தேன், கரும்பு, அவல், அரிசி மற்றும் பாரம்பரிய மூலிகைகள் கலந்த ஊட்டச்சத்து மிக்க பிரத்யேக உணவு உருண்டைகள் (அஷ்டகூர்) வழங்கப்படுகின்றன.

விநாயகப் பெருமானின் வடிவமாகக் கருதப்படும் யானைகளுக்கு உணவளிப்பதன் மூலம், தடைகள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

புகழ்பெற்ற திருச்சூர் பூரம் நடைபெறும் இதே வடக்குநாதன் கோவில் வளாகத்தில்தான் இந்த விழாவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இன்று காலை இங்குள்ள ஸ்ரீ வடக்குநாதன் கோவிலின் வருடாந்திர ‘அனயூட்டு’ விழாவில் 60க்கும் மேற்பட்ட யானைகளுக்கு உணவளிக்கப்பட்டது. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

விநாயகப் பெருமானை மகிழ்விப்பதற்காக, யாகத் தீயில் புனிதப் பொருட்களை அர்ப்பணிக்கும் ‘அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்’ சடங்கின் ஒரு பகுதியாக இந்த விழா நடைபெற்றது. இந்த ஹோமத்திற்காக சுமார் 1,000 கிலோ அவல், 10,000 தேங்காய்கள், 2,000 கிலோ வெல்லம், 200 கிலோ நெய் மற்றும் 50 கிலோ தேன் பயன்படுத்தப்பட்டன.

கோவில் மேல்சாந்தி யானைக்கு தீவனம் வழங்கி, ‘ஆனையூட்டை’ துவக்கி வைத்ததும் ஏராளமான பக்தர்கள் யானைகளுக்கு உணவு வழங்கினர்.

யானைகளுக்கு வெல்லம், நெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்த அரிசி வழங்கப்பட்டது. மேலும், அவற்றுக்குத் தேங்காய், கரும்பு, அன்னாசிப்பழம், வாழைப்பழம் மற்றும் வெள்ளரிக்காயும் உணவாக அளிக்கப்பட்டன.

அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதால் யானைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில், அந்த பிரம்மாண்ட விருந்தின் முடிவில் ‘அஷ்ட சூரணம்’ என்ற மூலிகை செரிமானப் பொடியும் வழங்கப்பட்டது.பொதுவாக கேரளாவில் ஆடி மாதம் கஷ்டமான மாதம் என்ற ஐதீகம் நிலவுவதால் பக்தர்கள் யானைகளுக்கு உணவு வழங்கியும் கோயில்களில் ராமாயண பாகவதம் பாடி வருவதும் உண்டு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.