மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Published:

railway news - 2026
#image_title

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயில் பல்வேறு வழித்தடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் முதல் செங்கோட்டை வழி மதுரை க்கு கும்பாபிஷேக சிறப்பு ரயில் செப் 15முதல் 17வரை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது .

சென்னை சென்ட்ரல் மதுரை ஸ்பெஷல்
வழி : திருவள்ளூர் அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் நாமக்கல் கரூர் திண்டுக்கல் வழியாக மதுரை வரை இயக்கப்படும்

ரயில் எண் 06153 / 06154 சென்னை செண்ட்ரல் – மதுரை- சென்னை செண்ட்ரல் சிறப்பு ரயில் – புதன் மாலை 4.10க்கு கிளம்பி, வியாழன் காலை 4.30க்கு மதுரை சென்றடையும். மறு வழியில், வியாழன் மதியம் 3.30க்குக் கிளம்பி வெள்ளி காலை 3.30க்கு சென்னை செண்ட்ரல் வந்தடையும்.

தாம்பரம்-மதுரை ஸ்பெஷல்
வழி : செங்கல்பட்டு விழுப்புரம் விருத்தாச்சலம் திருச்சி திண்டுக்கல் வழியாக மதுரை

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

ரயில் எண் 06157 / 06158 – தாம்பரம் – மதுரை – தாம்பரம் ரயில், புதன் இரவு 9.40 க்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பி, காலை 5 மணிக்கு மதுரை வந்தடையும். மறு வழியில், வியாழன் இரவு 7 மணிக்கு மதுரையில் கிளம்பி, வெள்ளி காலை 3.20க்கு தாம்பரம் வந்தடையும்.

சென்னை பீச்- மானாமதுரை UR MEMU
வழி : சென்னை எழும்பூர் தாம்பரம் செங்கல்பட்டு விழுப்புரம் திருப்பாதிரிப்புலியூர் சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி மணப்பாறை திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு மதுரை வழியாக மானாமதுரை சிறப்பு MEMU ரயில் செல்கிறது

ரயில் எண் 06161 / 06162 சென்னை கடற்கரை – மானாமதுரை – சென்னை கடற்கரை மெமு சிறப்பு ரயில், புதன் காலை 10.45க்கு சென்னை கடற்கரையில் கிளம்பி, அன்று இரவு 10 மணிக்கு மதுரைக்கும், 11.30க்கு மானாமதுரைக்கும் சென்றடையும். மறு வழியில், வியாழன் பகல் 12 மணிக்கு மானாமதுரையில் இருந்தும், 1 மணிக்கு மதுரையில் இருந்தும் கிளம்பி, அதே வியாழன் இரவு 11.45க்கு சென்னை கடற்கரை சென்றடையும்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இவ்வாறு மூன்று வெவ்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மிக விரைவில் துவங்க இருக்கிறது .

சென்னை பீச்- மானாமதுரை வழி:மதுரை சிறப்பு ரயில் முழுவதும் முன்பதிவில்லா ரயிலாகும் இந்த வண்டிக்கு முன்பதிவு தேவையில்லை முன்பதிவில்லா பெட்டிகள் இந்த வண்டியில் உள்ளது

மதுரையில் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு செல்லக்கூடிய பக்தர்கள் இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்தி கொள்ள ரயில் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளனர்.இந்த நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் முதல் செங்கோட்டை வழி மதுரை க்கு கும்பாபிஷேக சிறப்பு ரயில் செப் 15முதல் 17வரை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே இன்றிரவு சிறப்பு ரயில் மானாமதுரைக்கு இயக்கப்படுகிறது.

இன்று 11.09.26 வெள்ளி இரவு 11:50 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம் ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக மானாமதுரைக்கு 12 பெட்டிகளுடன் கூடிய மெமு ரயில் இயக்கப்படுகிறது. முற்றிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள். இந்த ரயிலை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

குறிப்பு: பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி இடம் கிடைக்காமல் கூடுதல் தொகை செலுத்தி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img