hindumunnani

செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

அரசியல் சற்றுமுன் தமிழகம்
hindumunnani
hindumunnani

செல் போனுக்குத் தடை.. கோவிலுக்கு பக்தியுடன் வரும் பக்தர்களுக்கு தண்டனையா? என்று கேட்டு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

நேற்று நடைமுறைப்படுத்தப்பட்ட கோவில்களில் கைபேசிக்கு தடை என்பதும் அதை பாதுகாக்க ரூ.5 கட்டணம் வசூலிப்பது இன்று மக்களிடையே பெரிய அளவில் கடும் கண்டனத்தையும் அரசின் மீது அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று கைப்பேசி என்பது பேசுவதற்கு போட்டோ எடுப்பதற்கு மட்டும் அல்ல பலவகையிலும் மக்களுக்கு மிகத் தேவையான ஒரு பொருளாக உள்ளது. இதுபோன்ற தடை உத்தரவால் சாதாரண அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேசமயம் இராமேஸ்வரம் போன்ற கோவில்களில் படம் எடுக்க போட்டோ வீடியோவிற்கு கோடிக்கணக்கில் டெண்டர் விட்டு குடும்ப திருமண நிகழ்வை நினைவில் கொள்ள அதனை பயன்படுத்தி கொள்ளை கட்டணம் வசூலிக்க இந்து சமய அறநிலையத் துறை துணை போகிறது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

கோவிலில் ஆபாசமாக ரீல்ஸ் எடுப்பதை தடுக்க வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை எரித்தவனைப்போல கைபேசிக்கு தடை விதித்து பாதுகாக்க கட்டணம் வசூலிப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கோவில் என்பது பிரம்மண்டமானது. ஒரு வழியாக சென்று அதே வழியாக வர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் நெரிசல் தான் ஏற்படும். மேலும் அவசர உதவிக்கு அல்லது குடும்பத்தினரிடம் இருந்து அவசர செய்திக்கு என்ன ஏற்பாடு இருக்கிறது. ஐயப்பன் கோவில், திருப்பதி கோவில் போன்ற இடங்களில் கைபேசி பாதுக்காக்க கட்டணம் வசூலிப்பது இல்லை. அவசர உதவிக்கு அறிவிப்பு வசதி முதலானவை சிறப்பாக செயல்படுகிறது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் எப்படி வசூல் வேட்டை நடத்தலாம் என்பதிலேயே இந்து சமய அறநிலையத் துறை குறியாக இருப்பது வெட்கக்கேடானது. 56 கோவில்களில் ஒரு நாளைக்கு பல ஆயிரம் வருகின்ற இடத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு கோடி வரை வசூலாகும். இதனை முறைகேடாக பயன்படுத்தவும் ஏதுவாகும்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

இன்று ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் கைபேசி உள்ளது. அப்படி பார்த்தால் ஒரு குடும்பம் கோவிலுக்கு வந்து செல்ல சில நூறு கொடுக்க வேண்டும் என்ற நிலையும் மேலும் பலவிதமான தொந்தரவுகளும் தந்து கோவிலுக்கு வருவதற்கு எரிச்சலை தமிழக அரசு ஏற்படுத்துவது நியாயமா?

வயதானவர்கள் சிவபுராணம் கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை கைபேசி வாயிலாக காதில் கேட்டுக்கொண்டு அமைதியாக தியானம் செய்கின்றனர். இதனை தடுப்பது நியாயமா? வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களில் இதுபோன்று தலையிட முடியுமா?

எனவே தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இந்த திட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கைபேசி பாதுகாப்பு இலவசமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்து முன்னணி அடுத்தக்கட்ட நடவடிக்கையை விரைவில் அறிவிக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.