இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

இமயமலையில் சீனாவின் கட்டுமானங்களே இன்றைய நேபாள வெள்ளத்திற்குக் காரணம் என்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

1
nepal tibet flood - 2026

இமயமலையில் சீனாவின் கட்டுமானங்களே இன்றைய நேபாள வெள்ளத்திற்குக் காரணம் என்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இன்று நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கிற்கு இமயமலைப் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளால் ஏற்பட்ட பனிச்சரிவே காரணம் என ‘நேபாள் கரஸ்பாண்டன்ஸ்’ குற்றம் சாட்டியுள்ளது. இதன் முழுமையான பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகள்…

* சூழலியல் பேரழிவுக்குக் காரணமான சீனா: பனிப்பாறைகள் நிறைந்த மிக உயரமான இமயமலைப் பகுதிகளில் சீனா அமைத்து வரும் ‘ஜியாவோகாங்’ குடியிருப்புகளால் பெரும் சூழலியல் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மலைகளின் நுண்ணிய தன்மையைச் சிதைக்கும் இந்தக் கட்டுமானங்களால்தான், சீனா-நேபாள எல்லையில் ஆண்டுதோறும் பனிச்சரிவுகள் ஏற்பட்டு, அது நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்காக மாறுகிறது.

* இயற்கை நதியை மறித்துக் கட்டப்பட்ட நகரம் : இன்றைய பயங்கர வெள்ளப்பெருக்கு, ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தில் உள்ள கைரோங் நகருக்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவால் உருவாகியுள்ளது. மலைகளைக் குடைந்து இந்த நகரம் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, திரிசூலி நதியின் இயற்கையான நீரோட்டப் பாதையை மறித்து அதன் மீதே இந்த நகர்ப்புற கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* திட்டமிட்ட அபாயமா? : ரசுவா எல்லையில் சீனா அமைத்துள்ள கைரோங் போர்ட், வேண்டுமென்றே இரண்டு நதிகள் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேபாள எல்லையை நோக்கிப் பாயும் நதிநீரின் வேகம் பல மடங்கு அதிகரிக்கிறது. இது ஒரு திட்டமிட்ட சூழலியல் பேரழிவு மட்டுமல்ல, மிகவும் கொடூரமான செயலாகும்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

* பலிகிடாவாகும் நேபாளம்: பனிச்சிகரங்களில் உள்ள மிக நுண்ணிய மற்றும் பாதுகாப்பட வேண்டிய சூழலியல் அமைப்பை சீரழிப்பதன் விளைவாக, நேபாளம் ஒவ்வொரு ஆண்டும் பெரும் வெள்ளத்தைச் சந்தித்து வருகிறது. இதனால் நேபாள மக்களுக்குத் தொடர்ச்சியாகப் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டு வருகிறது.

  • நேபாளப் பிரதமருக்கு கோரிக்கை: இமயமலைப் பகுதி முழுவதும் சூழலியலை அழித்து, ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தி வரும் சீனாவின் இந்த ஆபத்தான நடவடிக்கை குறித்து, நேபாளப் பிரதமர் உடனடியாக சீனாவிடம் கடுமையான முறையில் கேள்வி எழுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.