sengottai vishwaakarma poonal avani avittam - 2026

ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!

ஆன்மிகச் செய்திகள் நெல்லை லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
sengottai vishwaakarma poonal avani avittam - 2026

செங்கோட்டை யில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு கோயில்களில் பூணூல் மாற்றி சிறப்பு வழிபாடு!

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, செங்கோட்டை கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்று பூணூல் மாற்றிக் கொண்டனா்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் விஸ்வகா்மா சமுதாயம் சாா்பில் உலக நன்மைக்காக குண்டாற்று நதிக் கரையில் அந்தச் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீஅக்கசாலை விநாயகா் கோயிலில் விநாயகா், முருகன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், முருகன் சந்நிதி வளாகத்தில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி வேதமந்திர பாராயணத்துடன் நடந்தது.

இதில், விஸ்வகர்மா சமுதாயத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.