madurai amman temple parivara moorthis kumbabishekam - 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்!

ஆன்மிகச் செய்திகள் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai amman temple parivara moorthis kumbabishekam - 2026

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் 17ஆண்டுகளுக்குப்பின் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் இன்று பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலில் உள்ள 414 பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் துவங்கி வேத பாராயண முறைப்படி நடைபெற்றது.நாளை வியாழக்கிழமை காலை 7.40 மணிக்கு ராஜகோபுரங்கள், தங்க விமானங்களுக்கும், 7.55 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு சுந்தரேசுவரருக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. நாளை காலை 7:40 மணிக்கு அம்மன் சுவாமி தங்க விமானங்கள் ராஜகோபுரங்களுக்கும், காலை 7.55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8.10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக இன்று அதிகாலை 3.35 மணிக்கு மங்கல இசையுடன் கும்பாபிஷேக சடங்குகள் துவங்கியது. தொடர்ந்து விசேஷ சந்தி, விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசனம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பத்தாம் கால வேள்வி பரிவார யாகசாலை த்ரவ்யாஹுதி, பரிவார யாகசாலை மஹா பூர்ணாஹுதி நடைபெற்றுபரிவார கலசங்கள் புறப்பாடாகியது.

தொடர்ந்து பரிவார மூர்த்திகளான பிற தெய்வ சன்னிதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லட்சுமி, பத்திரகாளி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடந்து இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை காலை 7.40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

நாளை மகா கும்பாபிஷேகம்

விழா நாளான நாளை அதிகாலையில் 4 மணி அளவில் 12-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் காலை 5.45 மணி அளவில் கடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 7.40 மணிக்கு ராஜகோபுரங்கள், தங்க விமானங்களுக்கும், 7.55 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு சுந்தரேசுவரருக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பும் செய்யப்பட்டு உள்ளன.

இதையொட்டி சென்னை, போடி, ராமேஸ்வரம் நெல்லையில் இருந்து சிறப்பு ரெயில்களும், தமிழகம் முழுவதும் இருந்து 500 சிறப்பு பஸ்களும் மதுரைக்கு இயக்கப்படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.